என் மலர்
ஈரோடு
- கார் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ஈரோடு:
ஈரோடு சூரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலாஜி.பாத்திர கடை வைத்துள்ளார். இன்று காலை பாலாஜி தனது மனைவி, குழந்தை, உறவினர்களை காரில் அழைத்துக் கொண்டு அவர்களை ஊரில் விடுவதற்காக ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்தார்.
பாலாஜி கார் நிறுத்தும் பகுதியில் காரை நிறுத்தி விட்டு சென்று விட்டார். பின்னர் உறவினர்கள், மனைவி, குழந்தையை ரெயிலில் ஏற்றிவிட்டு மீண்டும் காரை எடுக்க வந்தார்.
அப்போது காரின் என்ஜின் பகுதியில் இருந்து புகை வெளியேறுவதை கண்டு பாலாஜி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக பாலாஜி காரை விட்டு வெளியே வந்தார். அப்போது கார் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தீயணைப்பு நிலைய உதவி அலுவலர் கலைச்செல்வன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடைத்து தீயை அணைத்தனர்.
தீப்பிடித்து எறிந்த காரை சுற்றி 50-க்கும் மேற்பட்ட கார்கள் இருந்தது. தீயணைப்பு வீரர்கள் உரிய நேரத்தில் வந்து தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதேபோல் பாலாஜியும் காரை விட்டு இறங்கியதால் அவரும் உயிர் தப்பினார்.
இதனால் ஈரோடு ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் காரில் இருந்த பேட்டரி கசிவின் காரணமாக தீப்பிடித்து எரிந்தது தெரிய வந்தது.
- பூலப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- போலீசார் சம்பவ இடம் வந்து பொதுமக்களிடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
பவானி:
ஈரோடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூலப்பாளையம் அருகில் அருந்ததியர் எல்லப் பாளையம் அமைந்து உள்ளது.
பெரியபுலியூர், தயிர்பாளையம் போன்ற பகுதியில் இருந்து வரும் ஏரி தண்ணீர் மழை காலத்தில் நிரம்பிய பின் ஊருக்குள் புகுந்து அவ்வப்போது மழை காலத்தில் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதேபோல் இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் நலனுக்காக தரைப்பாலம் 2 கட்டி பயன்பாட்டில் இருந்து வந்தது. கடந்த 6 மாதத்திற்கு முன்னதாக தரைப்பாலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு சேதம் அடைந்துள்ளது.
இதனையடுத்து தரைமட்ட பாலத்தை புதிதாக கட்டி கொடுக்க வேண்டி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை பவானி-கவுந்தப்பாடி மெயின் ரோடு பூலப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் திடீரென சாலை மறியல் போரா ட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு தாசில்தார் ஜெயக்குமார், யூனியன் சேர்மன் பிரகாஷ் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் போலீசார் சம்பவ இடம் இருந்து வந்து கூடியிருந்த பொது மக்களிடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது சேதம் அடைந்த பாலத்திற்கு புதிய பாலம் கட்டி கொடுக்க உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
பொதுமக்களின் இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் பவானி-கவுந்தப்பாடி ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.
- ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தாளவாடி:
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி வழியாக 16 டன் எடை கொண்ட லாரிகளுக்கு மட்டுமே போக்குவரத்திற்கு அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கடந்த சில நாட்களாக ஆசனூர் வழியாக அதிக டன் கொண்ட வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.
இந்த பகுதி கர்நாடகா-தமிழகத்தை இணைக்கும் முக்கிய போக்குவரத்து பகுதியாக உள்ளது. தினமும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன.
கனரக வாகனங்கள் எடை மேடையில் எடையிட்ட பிறகு போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படுகிறது.
இதனால் காலை 6 மணி முதல் 10 மணி வரை அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.
ஒவ்வொரு வாகனங்களாக எடையிட்ட பிறகே போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படுவதால் பல கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் நீண்ட தூரம் அணிவித்து நிற்கிறது.
இதனால் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக இதேநிலை தொடர்ந்து நீடித்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
எனவே கனரக வாகனங்கள் மாற்று வழியில் இயக்க வேண்டும் என்றும், கார், மோட்டார் சைக்கிள், வேன்களை வேறொரு மாற்று வழியில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வான ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- லாரி மற்றும் ஒரு மினி லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்து விசாரணை நடத்தினர்.
- ஆவணங்க ளும் இல்லாமல் மண்ணை நிரப்பி கொண்டு வந்தது தெரிய வந்தது.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அடுத்த பனையம்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய பரிசாபாளையம் பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்துவதாக தனி பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சம்பவம் இடத்திற்கு சென்ற போலீசார் பெரியபரசாபாளையம் அண்ணமார் கோவில் அருகே அந்த வழியாக சந்தேகத்துக்கிடமான வகையில் வந்து கொண்டி ருந்த ஒரு டிப்பர் லாரி மற்றும் ஒரு மினி லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்து விசாரணை நடத்தி னர்.
இதில் டிப்பர் லாரியை ஓட்டி வந்தது குரும்பபாளை யம் பகுதியை சேர்ந்த குருசாமி (32) என்பதும், மற்றொரு வாகனத்தை ஓட்டி வந்தது பவானிசாகர் இரங்காட்டூர் பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் (48) என்பதும் தெரியவந்தது.
மேலும் அந்த வாகனங்க ளில் மண் எடுத்து செல்வ தற்கு எந்தவித அனுமதி மற்றும் ஆவணங்க ளும் இல்லாமல் டிப்பர் லாரி மற்றும் மற்றொரு வாகனத்தில் மண்ணை நிரப்பி கொண்டு வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த 2 வாகனங்களையும் போலீசார் பிடித்து பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்து க்கு கொண்டு சென்றனர்.
மேலும் அரசு அனுமதி இன்றி மண் எடுத்து சென்றது குறித்து இன்ஸ்பெக்டர் அன்பரசு, சப்-இன்ஸ்பெக்டர் ரபீ மற்றும் போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மாணவர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.
- 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா அறிவுறுத்தலின்படி, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகம் இணைந்து நடத்திய பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல விடுதிகளில் தங்கி பயிலும் 10, 12-ம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி ஈரோடு கலெக்டர் அலுவலக மக்கள்குறை தீர்க்கும் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி குறித்தும், போட்டித்தேர்வுகள் குறித்தும், அரசு வேலை வாய்ப்புகள் குறித்தும், தன்னார்வ பயிலும் வட்டங்கள் குறித்தும், முப்படைகளில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்தும், பெண்கள் பாதுகாப்பு குறித்தும், தொழிற்கல்வி குறித்தும் மற்றும் வங்கி கடனுதவி திட்டங்கள் குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் வாழ்க்கை வழி காட்டி நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குநர், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் ராதிகா, மாவட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தர்மராஜ், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜோதி உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
- ரூ.50 ஆயிரத்து 841-க்கு விற்பனையானது.
சென்னிமலை:
சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 4,280 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 28 ரூபாய் 29 காசுக்கும், அதிகபட்ச விலையாக 31 ரூபாய் 19 காசுக்கும், சராசரி விலையாக 29 ரூபாய் 29 காசுக்கும் ஏலம் போனது.
மொத்தம் 1,813 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.50 ஆயிரத்து 841-க்கு விற்பனையானது.
- கர்நாடகா மதுபானங்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
- போலீசார் மாதேவை கைது செய்து அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் தாளவாடி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என அருள்வாடி, பிசில்வாடி பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது குருபரகுண்டி 4 ரோடு அருகில் சந்தேகத்திற்கிடமாக ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
அவரை போலீசார் விசாரித்த போது அவர் அதே பகுதியை சேர்ந்த மாதேவா (வயது 50) என்பதும், கர்நாடகா மதுபானங்களை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.
பின்னர் போலீசார் மாதேவை கைது செய்து அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.
- மருத்துவர்கள் சுப்பிரமணியன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஈரோடு, நவ. 8-
ஈரோடு மாவட்டம் பெரு ந்துறை அருகே ஜம்புளி யம்பட்டி அடுத்த பட்சாங்கா ட்டூர் பகுதியை சேர்ந்தவர் அர்ஜூனன் மகன் சுப்பிரமணியன் (வயது 24). இவர் பாரத ஜனதா கட்சி நிர்வாகி ஆவார்.
இந்நிலையில் சுப்பிர மணியன் நேற்றிரவு வேலை நிமித்தமாக தனது இருசக்கர வாகனத்தில் விஜயமங்கலம் சென்று விட்டு பின்னர் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவர் வாய்ப்பாடி பிரிவு அருகே வந்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.
இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை க்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோ தித்த மருத்துவர்கள் சுப்பிரமணியன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் பெருந்துறை போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இனிப்பு வகைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
- இதற்கு ஆவின் பாலகங்கள் மற்றும் ஆவின் நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட கூட்டு றவு பால் உற்பத்தியா ளர்கள் ஒன்றியத்தில் விற்பனை பிரிவின் மூலம் நாளொ ன்றுக்கு சராசரியாக 70 ஆயிரம் லிட்டர் பால் மற்றும் பால் உப பொருட்கள் சுமார் ரூ.3 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஈரோடு ஒன்றியத்தில் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தரமான இனிப்பு வகைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
நெய் மைசூர்பா ½ கிலோ பாக்கெட் ஒன்று ரூ.270, பால்கோவா ½ கிலோ பாக்கெட் ஒன்று ரூ.250, ஸ்பெஷல் மிக்சர் ¼ கிலோ பாக்கெட் ஒன்று ரூ.100 என்ற விலைக்கு இனிப்புகள் தயார் செய்து விற்பனை செய்யப்படுகிறது.
பொதுமக்கள் மற்றும் நுகர்வோர்கள் தீபாவளிக்கு ஆவின் இனிப்புகளை வாங்கி மகிழலாம். இதற்கு ஆவின் பாலகங்கள் மற்றும் ஆவின் நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம்.
- மோட்டார் சைக்கிள் சுப்பிரமணியத்தின் மீது மோதியது.
- சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னிமலை, நவ.8-
சென்னிமலை அருகே உள்ள தட்டாங்காட்டு புதூரை சேர்ந்தவர் சுப்பிரமணியம். (வயது 79). விவசாயி. இவர் தன்னுடைய வீட்டில் இருந்து அருகே உள்ள மாட்டு கொட்டகைக்கு நடந்து சென்றார்.
அப்போது சென்னிமலை-காங்கேயம் மெயின் ரோட்டை அவர் கடந்த பொழுது ஈரோடு முனிசிபல் காலனியை சேர்ந்த கவின் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சுப்பிரமணியத்தின் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த சுப்பிரமணியத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சென்னிமலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கவினிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரவி பீரோவை திறந்து பார்த்தபோது அதில் பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- ஜன்னல் கம்பியை உடைத்து அறைக்குள் புகுந்து பணத்தை திருடியது தெரியவந்தது.
பெருந்துறை:
பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக ரவி (54) என்பவர் உள்ளார்.
ரவி தனது அறையில் உள்ள பீரோவில் ரூ.60 ஆயிரம் பணத்தை நேற்றுமுன்தினம் வைத்துவிட்டு சென்றார்.
பின்னர் மறுநாள் காலை மீண்டும் அறைக்கு வந்த ரவி மதியம் பீரோவை திறந்து பார்த்தபோது அதில் பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பீரோவின் பின்பகுதியில் இருந்த ஜன்னலை பார்த்தபோது ஜன்னல் கம்பி உடைக்கப்பட்டு இருப்ப தை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார்.
இரவில் வந்த மர்ம நபர் ஜன்னல் கம்பியை உடைத்து அறைக்குள் புகுந்து பணத்தை திருடியது தெரியவந்தது.
இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அங்கு பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
பெருந்துறை அடுத்த துடுப்பதி ஸ்ரீநகர் பகுதியை சேர்ந்தவர் கவின் (31). நேற்று மதியம் கவின் தனது குடும்பத்து டன் தோட்டத்து வீட்டிற்கு சென்று விட்டார்.
அப்போது கவின் வீட்டிற்கு 3 பேர் கொண்ட கும்பல் ஹெல்மெட் அணிந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ள னர். கவின் வீட்டில் இருந்து சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவர் வீட்டுக்கு வந்தனர்.
அப்போது வீட்டில் 3 மர்ம நபர்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு அந்த 3 அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து கவினுக்கு தகவல் தெரிவிக்கப்ப ட்டது. இதேபோல் பெருந்துறை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. கவின் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பணம் பொருட்கள் திருடப்பட வில்லை என்பது தெரிய வந்தது.
இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அந்தியூர் பஸ் நிலையத்திற்குள் பயணிகளுக்கென குடிநீர் குழாய் அமைக்கப்பட்டிருந்தது.
- அந்த குழாயிலும் 3 மாத காலமாக தண்ணீர் வரவில்லை.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தி யூர் பஸ் நிலையம் 10-வது வார்டு பகுதியில் சாலை, மழைநீர் வடிகால் பணி நடைபெற்று வருகிறது. அண்ணா சாலை பஸ் நிலையம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இங்கே குடிநீர் விநியோ கம் கடந்த 3 மாதங்களாக வருவதில்லை எனவும், இதனால் அந்த பகுதியில் குடியிருக்கும் பெண்கள் 11-வது வார்டு பகுதிக்கு சென்று தண்ணீரை பிடித்து வந்து பருகும் நிலை ஏற்பட்டு இருப்பதாகவும், மற்ற தேவைகளுக்கு வண்டி தண்ணீர் வாங்கி பயன்படு த்தி வருகின்றார்கள் என்று கூறப்படுகிறது.
மேலும் அந்தியூர் பஸ் நிலையத்திற்குள் பயணிகளுக்கென குடிநீர் குழாய் அமைக்கப்பட்டிருந்தது. அந்த குழாயிலும் 3 மாத காலமாக தண்ணீர் வரவில்லை.
இதனால் வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் மட்டுமின்றி பேருந்திற்கு காத்திருக்கும் பயணிகளும் தண்ணீருக்காக அலையும் நிலை ஏற்பட்டு இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
எனவே உடனடியாக பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைக்கும் வகையில் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.






