என் மலர்tooltip icon

    ஈரோடு

    • மாவட்டத்தில் அணைப்பகுதிகளில் பலத்த மழை பெய்து உள்ளது.
    • கவுந்தப்பாடி பகுதியில் இரவில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது.

    ஈரோடு:

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகி றது. குறிப்பாக இரவு நேரத்தில் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக கோபி, நம்பியூர், புளியம்பட்டி பகுதியில் உள்ள தரைப்பால ங்கள் நீரில் மூழ்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்து பொதுமக்கள் வாழ்க்கை ஸ்தம்பித்தது. இந்நிலையில் நேற்று இரவும் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது.

    கவுந்தப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி யில் இரவில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. இதேப்போல் பவானி, அம்மாபேட்டை, கோபி, பெரு ந்துறை, தாளவாடி, கொடுமுடி, சத்தியமங்கலம், நம்பியூர் போன்ற பகுதிகளி லும் சாரல் மழை பெய்தது.

    கடந்த 4 நாட்களாக மாவட்டத்தில் அணைப்பகுதிகளான வரட்டுப்பள்ளம், குண்டேரி ப்பள்ளம், பவானிசாகர், கொடிவேரி போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்து உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    கவுந்தப்பாடி-28.20, வரட்டுப்பள்ளம்-17, பவானி-15.80, அம்மா பேட்டை-14.20, தாளவாடி-11, கோபி-10.20, பெருந்துறை-10, பவானி சாகர்-8.20, கொடுமுடி-8, ஈரோடு-6.20, கொடிவேரி-6, சத்தியமங்கலம்-3, நம்பியூர்-2.

    • கனமழை காரணமாக பவானிசாகர் அணியில் இருந்து பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.
    • பலத்த மழையால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வந்தது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 73.49 அடியாக உள்ளது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்துள்ளது. பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 4,982 கனஅடியாக நீர் வரத்து கொண்டிருக்கிறது.

    கனமழை காரணமாக பவானிசாகர் அணியில் இருந்து பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. பலத்த மழையால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதேபோல் மாவட்டத்தில் உள்ள மற்ற அணைகளும் நிரம்பி வருகின்றன. குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம்-29.84, பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம்-5.93, வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம்-27.72 அடியாக உள்ளது. தொடர்ந்து மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    • குப்பை கழிவுகள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் அப்புறப்படுத்தும் பணி நடந்தது.
    • நடவடிக்கை எடுத்த நகராட்சி அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கப்ப ட்டது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் இருந்து எடுத்து வரப்படும் குப்பைகள் நகராட்சி வாரச்சந்தை வளாக த்தில் கொட்டப்ப ட்டு வருகிறது. அந்த கு ப்பை கள் சில ஆண்டுக ளா க கொட்டி வரு வதால் தற்போ து குப்பைகள் மலை போல் காட்சியளி க்கிறது.

    இது குறித்து சில தினங்க ளுக்கு முன்பு பாரதி ஜனதா கட்சி நகர் மற்றும் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் ஜெய் காமராஜ் ஈ ரோடு மாவட்ட கலெக்டருக்கு புகார் மனு அளித்துள்ளா ர்.

    அந்த மனு வில் கூறி யிரு ப்பதாவது:

    கடந்த 5 ஆண்டுக ளுக்கு முன்பு சுகாதாரமான வாரச்சந்தை யாக இருந்த இந்த பகுதி குப்பை கழிவுகள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் குப்பை களை தீ வை த்து எரிப்பத னால் சுவாசி க்கும் காற்று மாசு பட்டு ள்ளது.

    அதே போல் பசுமையாக இருந்த மர ங்கள் அழிந்து விட்டது. பல ஆண்டுகளாக இருந்த மரங்களும் வெட்டப்பட்டுள்ளன. நிலத்தடி நீர் மாசப்பட்டுள்ளது.

    இத னால் சந்தை க்கு வரும் வியா பாரி கள், பொது மக்கள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே வாரச்ச ந்தையில் குப்பைகள் கொட்டு வதை தடுத்து பொது மக்களையும், கால்நடைக ளையும் காப்பாற்ற நடவடி க்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    அதன் பேரில் அந்த பகுதியில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆய்வு செய்தார். இதையடுத்து உடனடியாக தீர்வு ஏற்படும் வகையில் அங்கு இருக்கும் குப்பை கழிவுகள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் அப்புறப்படுத்தும் பணி நடந்தது.

    இனிமேல் புளியம்பட்டி வார சந்தையில் குப்பைகள் கொட்டுவது தடுக்கப்படும். இந்த பகுதியில் உள்ள குப்பைகள் 3 மாதங்களுக்குள் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி உறுதி அளித்தார்.

    மாவட்ட கலெக்டரிடம் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்த நகராட்சி அதிகாரிகளுக்கு பா.ஜ.க. சார்பாக நன்றி தெரிவிக்கப்ப ட்டது.

    • மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் மாதந்திர கூட்டம் நடைபெற்றது
    • அரங்கில் சுமார் 25 பேர் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

    பெருந்துறை:

    பெருந்துறை மாவட்ட தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் மாதந்திர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் பழனிசாமி தலைமை வகித்தார்.

    இதில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறி யாளர் ராஜ்குமார், பெரு ந்துறை சிப்காட் திட்ட அலு வலர் வெங்கடேசன், பொறி யாளர்கள் சுஜாதா, வனஜா, சுற்றுச்சூழல் பறக்கும் படை பொறியாளர் வினோத்கு மார், விஷ்ணு பாலன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் குழுவிற்கு 10 பேர் என்ற முறையில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் மற்றும் கருத்துக்களை தெரிவிக்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நல சங்கம் ஒருங்கி ணைப்பாளர் சின்னசாமி தலைமையில் 10 பேர் முதலில் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து பா.ஜ.க. பெருந்துறை நகரத் தலைவர் பூரண சந்திரன் தலைமையில் 10 பேர் 2-வதாக கலந்துக் கொண்டனர்.

    பின்னர் பெருந்துறை சிப்காட் கழிவு நீரால் பாதிக்கப்பட்டோர் மக்கள் இயக்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பி னர், விவசாயிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    சிப்காட் வளாகத்திற்குள் தண்ணீர் எதுவும் வெளி யேறக் கூடாது. அப்படி இல்லை என்றால், அனைத்து கம்பெனிகளையும் மூட வேண்டும். இதுவே எங்களது கோரிக்கை இவ்வாறு அவர்கள் பேசினர்.

    மேலும் சிப்காட் சுற்றி உள்ள குளங்கள் வருவாய் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த குளங்களுக்கு கழிவுநீர் வருவதை ஏன் வருவாய் துறையினர் தடுக்கவில்லை.

    இதற்கு தாசி ல்தார் வந்து பதில் தரவே ண்டும் இல்லை என்றால் நாங்கள் கலைந்து செல்ல மாட்டோம் என்று கூறி, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலக் கூட்ட அரங்கில் சுமார் 25 பேர் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

    தகவல் அறிந்து வந்த பெருந்துறை டி.எஸ்.பி. ஜெயபாலன் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சை வார்த்தை நடத்தினார். அதன் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • உறுப்பினர்களுக்கு ரபி பருவ விவசாயிகள் பயிற்சியானது நடைபெற்றது.
    • நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு தெளிவாக எடுத்துரைத்தார்.

    ஈரோடு:

    பவானி வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் மூலம் 2023-24-ம் ஆண்டு கலைஞர் திட்டம் செயல்படுத்த தேர்வு செய்யப்பட்ட ஆலத்தூர் கிராமத்தில் கிராம வேளாண் முன்னேற்றக்குழு அமைக்கப்பட்டு அக்குழு உறுப்பினர்களுக்கு ரபி பருவ விவசாயிகள் பயிற்சி யானது நடைபெற்றது.

    இப்பயிற்சியில் பவானி வேளாண்மை உதவி இயக்குநர் கனிமொழி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.

    குமரகுரு வேளாண்மை கல்லூரி உதவி பேராசிரியர் ஜெகதீஸ்காந் வாழையில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் பற்றிய பயிர்சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு கூறினார்.

    அங்கக விதை சான்று துறை மற்றும் விதை சான்று அலுவலர் தமிழரசு நெற்பயிரில் விதை தேர்வு முறை, விதைப்பண்ணை அமைத்தல், பூச்சி மற்றும் நோய் தாக்குதல், மதிப்புக்கூட்டுத்தல் குறித்து ஆலோசணை கூறினார்.

    விதை சுத்திகரிப்பு அலுவலர் முருகேசன் நெற்பயிரில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் பற்றிய பயிர்சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் குறித்து ஆலோசணை கூறினார்.

    பவானி உதவி வேளாண்மை அலுவலர் சுரேஷ் கிராம வேளாண் முன்னேற்றக்குழு அமைத்ததன் நோக்கம், அதன் பணி, அதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு தெளிவாக எடுத்துரைத்தார்.

    வட்டார தொழில்நுட்ப மேலாளர்கள் கங்கா உழவன் செயலி பதிவேற்றம், இ-நாம் மற்றும் இ-வாடகை குறித்து விவசாயிகளிடம் கூறினார்.

    முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் மணிகண்டன் மற்றும் பூங்கோதை நன்றி கூறினர்.

    • சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலக்கடலைக்காய் விற்பனைக்கான ஏலம் நடந்தது.
    • மொத்தம் ரூ.4 லட்சத்து 72 ஆயிரத்து 19-க்கு விற்பனையாகின.

    சிவகிரி:

    சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலக்கடலைக்காய் விற்பனைக்கான ஏலம் நடந்தது.

    இதில் 29 மூட்டை கள் கொண்ட 903 கிலோ எடையுள்ள நிலக்கடலை க்காய் கிலோ ஒன்றுக்கு ஒரே விலையாக ரூ. 80.40 காசுகள் என்ற விலையில் மொத்தம் ரூ.72 ஆயிரத்து 601-க்கு விற்பனையானது.

    இதேபோல மொடக்கு றிச்சி ஒழுங்குமுறை விற்ப னைக்கூடத்தில் நடந்த தேங்காய்கள் விற்பனை க்கான ஏலத்தில் 14 ஆயிரத்து 80 எண்ணிக்கையிலான 5 ஆயிரத்து 690 கிலோ எடையுள்ள தேங்காய்கள் கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.21.19- க்கும், அதிகபட்ச விலையாக ரூ.27.59-க்கும், சராசரி விலையாக ரூ.25.89 காசு என்ற விலைகளில் மொத்தம் ரூ.1 லட்சத்து 41 ஆயிரத்து 584க்கு விற்பனையானது.

    இதனை அடுத்து நடந்த தேங்காய் பருப்பு விற்பனை க்கான ஏலத்தில் 170 மூட்டை கள் கொண்ட 4 ஆயிரத்து 786 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு விற்பனை யானது.

    விற்பனையான பருப்பில் முதல் தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.74.97 -க்கும், அதிகபட்ச விலையாக ரூ.83.60-க்கும், சராசரி விலையாக ரூ.82.16 காசு என்ற விலைகளிலும்,

    2-ம் தர பருப்பு குறைந்த பட்ச விலையாக ரூ.50.60-க்கும், அதிகபட்ச விலையாக ரூ. 73.10-க்கும், சராசரி விலை யாக ரூ.67.60 காசுகள் என்ற விலைகளி்ல் மொத்தம் ரூ.3 லட்சத்து 57 ஆயிரத்து 834-க்கு விற்பனையானது.

    ஆகமொத்தம் சிவகிரி மற்றும் மொடக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் நிலக்கடலைக்காய், தேங்காய்கள், தேங்காய்பருப்பு சேர்த்து மொத்தம் ரூ.4 லட்சத்து 72 ஆயிரத்து 19-க்கு விற்பனையாகின.

    • 2 பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • கேரளாவை சேர்ந்த நிகில் சிட்டி என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகர் பகுதி யில் மசாஜ் சென்ட ர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    இந்த மசாஜ் சென்டர்களில் பெரும்பாலும் வட மாநில பெண்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

    இதில் சில மசாஜ் சென்டர்களில் விபச்சாரம் தொழில் நடை பெறுவதாக போலீசாருக்கு புகார் வந்தது.

    அதன் பேரில் போலீசார் சமீப காலகமாக மசாஜ் சென்டர்களில் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதில் சில மசாஜ் சென்டரில் வேலை பார்க்கும் பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

    அவர்களை போலீசார் மீட்டு வருகின்றனர். மேலும் மசாஜ் தொழில் ஈடுபடும் புரோக்கர்கள், உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலை யில் ஈரோடு நெரிக்கல்மே ட்டில் ஒரு மசாஜ் சென்டர் இயங்கி வந்தது.

    இந்த மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்து வதாக வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதன்பேரில் போலீசார் இரவு அங்கு அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். இதில் அங்கு 2 பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    தொடர்ந்து விபச்சாரம் நடத்திய கேரளா மாநிலம் திருசூரை சேர்ந்த திலகன் மகன் நிகில் சிட்டி (28) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அங்கு இருந்த 2 பெண்களை மீட்டு அவர்களது ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மசாஜ் சென்டர் உரிமையாளரான ரங்க நாயகி என்பவரை போலீசார் தேடி வருகி ன்றனர்.

    இதேபோல் நேற்றும் மசாஜ் சென்டரில் விபசார தொழிலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்ட னர். 6 பெண்கள் மீட்க ப்பட்டது குறிப்பிடத்தக்கது


    • கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது.
    • மொத்தம் ரூ.1.99 கோடிக்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது.

    பெருந்துறை:

    பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது.

    பெருந்துறை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 5,922 மூட்டைகளில் 2,46,000 கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ.72.15-க்கும், அதிகபட்சமாக ரூ.88.49-க்கும் விற்பனையானது.

    2-ம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக ரூ.25.20-க்கும், அதிகபட்சமாக ரூ.84.44-க்கும் விற்பனையானது.

    மொத்தம் ரூ.1.99 கோடிக்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது.

    • ஈரோடு மண்டலம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
    • 24 மணி நேரம் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    ஈரோடு:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக இன்று முதல் வரும் 12-ந் தேதி வரை ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய ஊர்களில் இருந்து திருச்சி, சேலம், மதுரை, சென்னை, நாம க்கல், ராசிபுரம், திருப்பூர், சத்தி, பழனி மற்றும் கரூர் ஆகிய ஊர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், ஈரோடு மண்டலம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    மேலும் ஈரோட்டில் இருந்து கம்பம், குமுளி, சிவகாசி, திருச்செந்தூர், ராமேஸ்வரம், வேலூர், புதுச்சேரி, செங்கோட்டை, நாகர்கோவில், சென்னை ஆகிய ஊர்களுக்கு செல்ல www.tnstc.in என்ற இணைய தளத்தின் வாயி லாக முன்ப திவு செய்து கொள்ளலாம்.

    கோபி, சத்தி, பவானி, அந்தியூர், பெருந்துறை ஆகிய ஊர்களில் இருந்து கோவை, ஈரோடு ஆகிய ஊர்களுக்கு 24 மணி நேரம் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து ஈரோடு பஸ் நிலையத்திற்கு இன்று முதல் 12-ந் தேதி வரை தினமும் இரவு முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது என ஈரோடு மண்டல பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.

    • பட்டாசு கடைகள் அமைக்க 247 விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது.
    • மாவட்டம் முழுவதும் 238 பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தீபாவளி பண்டிகை வரும் 12-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கடைவீதிகளில் ஜவுளி வாங்க மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதேபோல் பட்டாசு கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் பட்டாசு கடைகள் அமைக்க மொத்தம் 247 விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது. இதில் உரிய பாதுகாப்பு, பல்வேறு அம்சங்கள் இடம் பெறாத காரணத்தினால் 9 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

    இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் 238 பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் மேலும் கூறும்போது,

    தீபாவளி பண்டிகையை மக்கள் பாதுகாப்பாக கொண்டாட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பட்டாசு கடை வைத்திருப்பவர்கள் 2 வாசல் கண்டிப்பாக வைத்திருக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    இதேப்போல் பாதுகாப்பு உபகரணங்கள் கடையில் இருக்க வேண்டும்.

    300 லிட்டர் அளவு தண்ணீர் சேமித்து வைத்தி ருக்க வேண்டும். தீயணைப்பு கருவிகள் வைத்திருக்க வேண்டும். மிக முக்கியமாக புகை பிடித்தல் கூடாது போன்ற அறிவுரை பட்டாசு கடைக்காரர் களுக்கு வழங்கப் பட்டுள்ளது.

    மேலும் விபத்து இல்லாமல் பாதுகாப்பாக பட்டாசு எப்படி வெடிக்க வேண்டும் என்பது குறித்து பொதுமக்களிடம் தினமும் காலை, மாலையில் தீயணைப்பு துறை வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    வீடுகளுக்குள் வெடி எடுக்கக் கூடாது. குடிசை பகுதி, தென்னை மரம் அருகே ராக்கெட் வெடிக்க கூடாது போன்றவை அறிவுறுத்தப் பட்டுள்ளது என்றார்.

    • கோவை மாவட்டம் பில்லூர் அணையிலிருந்து நீர்மின் உற்பத்திக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
    • கனமழை காரணமாக பவானி சாகர் அணியில் இருந்து பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வந்தது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    மேலும் கோவை மாவட்டம் பில்லூர் அணையிலிருந்து நீர்மின் உற்பத்திக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 70.96 அடியாக உள்ளது. கடந்த 3 நாட்களில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 5 அடி வரை உயர்ந்துள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 31 ஆயிரத்து 939 கன அடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கனமழை காரணமாக பவானி சாகர் அணியில் இருந்து பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

    பலத்த மழையால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதைப்போல் மாவட்டத்தில் உள்ள மற்ற அணைகளும் நிரம்பி வருகின்றன.

    குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம்-28.56, பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம்-5.93, வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் -27.07 அடியாக உள்ளது. தொடர்ந்து மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    • முல்லை நகரில் 40-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக இரவு நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. பகல் நேரத்தில் மழை பொய்யாவிட்டாலும் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    குறிப்பாக அணைப் பகுதிகளான பவானிசாகர், குண்டேரிப்பள்ளம், வரட்டுப்பள்ளம், பெரும்பள்ளம் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதேப்போல் நம்பியூர், கொடுமுடி, சத்தியமங்கலம், பெருந்துறை பவானி போன்ற பகுதிகளும் பலத்த மழை பெய்து வருகிறது.

    கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 4 நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக நம்பியூரில் 12 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. நம்பியூர், குருமந்தூர், இருகாலூர், எலத்தூர் போன்ற பகுதியில் கடந்த 3 நாட்களாக இரவு முழுவதும் விடிய விடிய மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக நம்பியூர் இருகாலூர் அடுத்த கொளந்தபாளையம் கிராமத்தில் உள்ள குளம் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. இதனால் அந்த பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதேபோல் கோபி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை பெய்தது. கோபி அரசூர்-தட்டாம்புதூரில் நெடுஞ்சாலை துறையினர் மூலம் புதிய பாலம் கட்டுமான பணி நடைபெற்று வரும் இடத்தில் தற்காலிக தரைப்பாலம் பலத்த மழையால் நேற்று 2-வது நாளாக நீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் 6 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய உள்ளது. இதனால் கிராம மக்கள், மாணவ-மாணவிகள் மிகவும் சிரமம் அடைந்த வருகின்றனர்.

    இதேபோல் பவானி சாகர், கொடுமுடி, குண்டேரிப்பள்ளம், தாளவாடி, சத்தியமங்கலம், வரட்டுப்பள்ளம், கொடிவேரி, பெருந்துறை போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. சத்தியமங்கலம் தாளவாடி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    சத்தியமங்கலம் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. இதனால் சத்தியமங்கலம் அடுத்த காவிளிப்பாளையம் அருகே உள்ள முல்லை நகரில் உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலும் முல்லை நகரில் 40-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் அந்த வீடுகளை சேர்ந்த மக்கள் இரவு முழுவதும் தூக்கம் இன்றி தவித்து வருகின்றனர். இதேப்போல் புளியம்பட்டி பவானிசாகர் பகுதியில் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்ததால் அந்த பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    புளியம்பட்டியில் உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று காலை பள்ளிக்கு சென்ற மாணவ- மாணவிகள், தொழிலாளர்கள் கடும் அவதி அடைந்தனர்.

    புளியம்பட்டி அருகே பவானிசாகர் சாலை கணக்கரசம்பாளையத்தில் உள்ள தரைப்பாலம் விடிய விடிய பெய்த பலத்த மழையால் நீரில் மூழ்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பனையம்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய பெருசபாளையம் குட்டை நிரம்பியுள்ளது.

    இதைத்தொடர்ந்து நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட குட்டையும் நிரம்பியது. மேலும் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்ததால் பயிர்கள் நீரில் மூழ்கி பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதேபோல் தோட்டத்துக்குள் தண்ணீர் புகுந்ததால் வாழைகள் நீரும் மூழ்கி சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை மில்லி மீட்டரில் வருமாறு:-

    நம்பியூர்-123, பவானி சாகர்-92, கொடுமுடி-62, குண்டேரிப்பள்ளம்-56.30, தாளவாடி-44.20, சத்தியமங்கலம்-43, வரட்டுப்பள்ளம்-21.20, கொடிவேரி-12, கோபி-10.20, பெருந்துறை-9, மொடக்குறிச்சி-1. ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று 503 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    ×