மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடத்திய கேரளா வாலிபர் கைது

2 பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கேரளாவை சேர்ந்த நிகில் சிட்டி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடத்திய கேரளா வாலிபர் கைது
Published on

ஈரோடு:

ஈரோடு மாநகர் பகுதி யில் மசாஜ் சென்ட ர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த மசாஜ் சென்டர்களில் பெரும்பாலும் வட மாநில பெண்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதில் சில மசாஜ் சென்டர்களில் விபச்சாரம் தொழில் நடை பெறுவதாக போலீசாருக்கு புகார் வந்தது.

அதன் பேரில் போலீசார் சமீப காலகமாக மசாஜ் சென்டர்களில் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதில் சில மசாஜ் சென்டரில் வேலை பார்க்கும் பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களை போலீசார் மீட்டு வருகின்றனர். மேலும் மசாஜ் தொழில் ஈடுபடும் புரோக்கர்கள், உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலை யில் ஈரோடு நெரிக்கல்மே ட்டில் ஒரு மசாஜ் சென்டர் இயங்கி வந்தது.

இந்த மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்து வதாக வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் வந்தது.

இதன்பேரில் போலீசார் இரவு அங்கு அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். இதில் அங்கு 2 பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து விபச்சாரம் நடத்திய கேரளா மாநிலம் திருசூரை சேர்ந்த திலகன் மகன் நிகில் சிட்டி (28) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அங்கு இருந்த 2 பெண்களை மீட்டு அவர்களது ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மசாஜ் சென்டர் உரிமையாளரான ரங்க நாயகி என்பவரை போலீசார் தேடி வருகி ன்றனர்.

இதேபோல் நேற்றும் மசாஜ் சென்டரில் விபசார தொழிலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்ட னர். 6 பெண்கள் மீட்க ப்பட்டது குறிப்பிடத்தக்கது

X

Maalai Malar
www.maalaimalar.com