என் மலர்
நீங்கள் தேடியது "Copper auctioned at"
- கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது.
- மொத்தம் ரூ.1.99 கோடிக்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது.
பெருந்துறை:
பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது.
பெருந்துறை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 5,922 மூட்டைகளில் 2,46,000 கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ.72.15-க்கும், அதிகபட்சமாக ரூ.88.49-க்கும் விற்பனையானது.
2-ம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக ரூ.25.20-க்கும், அதிகபட்சமாக ரூ.84.44-க்கும் விற்பனையானது.
மொத்தம் ரூ.1.99 கோடிக்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது.






