விபத்தில் பா.ஜ.க பிரமுகர் பலி

நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.மருத்துவர்கள் சுப்பிரமணியன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
விபத்தில் பா.ஜ.க பிரமுகர் பலி
Published on

ஈரோடு, நவ. 8-

ஈரோடு மாவட்டம் பெரு ந்துறை அருகே ஜம்புளி யம்பட்டி அடுத்த பட்சாங்கா ட்டூர் பகுதியை சேர்ந்தவர் அர்ஜூனன் மகன் சுப்பிரமணியன் (வயது 24). இவர் பாரத ஜனதா கட்சி நிர்வாகி ஆவார்.

இந்நிலையில் சுப்பிர மணியன் நேற்றிரவு வேலை நிமித்தமாக தனது இருசக்கர வாகனத்தில் விஜயமங்கலம் சென்று விட்டு பின்னர் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவர் வாய்ப்பாடி பிரிவு அருகே வந்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை க்காக கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோ தித்த மருத்துவர்கள் சுப்பிரமணியன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் பெருந்துறை போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com