என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்"

    • கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.
    • ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி வழியாக 16 டன் எடை கொண்ட லாரிகளுக்கு மட்டுமே போக்குவரத்திற்கு அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் கடந்த சில நாட்களாக ஆசனூர் வழியாக அதிக டன் கொண்ட வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.

    இந்த பகுதி கர்நாடகா-தமிழகத்தை இணைக்கும் முக்கிய போக்குவரத்து பகுதியாக உள்ளது. தினமும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன.

    கனரக வாகனங்கள் எடை மேடையில் எடையிட்ட பிறகு போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படுகிறது.

    இதனால் காலை 6 மணி முதல் 10 மணி வரை அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.

    ஒவ்வொரு வாகனங்களாக எடையிட்ட பிறகே போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படுவதால் பல கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் நீண்ட தூரம் அணிவித்து நிற்கிறது.

    இதனால் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    கடந்த சில நாட்களாக இதேநிலை தொடர்ந்து நீடித்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    எனவே கனரக வாகனங்கள் மாற்று வழியில் இயக்க வேண்டும் என்றும், கார், மோட்டார் சைக்கிள், வேன்களை வேறொரு மாற்று வழியில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வான ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×