என் மலர்
ஈரோடு
பெருந்துறை கோவை மெயின் ரோட்டில் கடந்த 1½ ஆண்டுகளுக்கு மேலாக ஒரு பிரட் கம்பெனி இயங்காமல் இருந்து வந்தது. இந்த கம்பெனியின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்தது.
தற்போது இந்த கம்பெனியை மீண்டும் இயக்க முடிவு செய்து உரிமையாளர்கள் துரைசாமி மற்றும் ஜெயமுருகன், தனபால் தங்கவேல் ஆகியோர் கம்பெனிக்கு உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது அங்கு ஒருவர் அமர்ந்து இருந்தார். அவரை பிடித்து விசாரித்த போது அவர் பெருந்துறை, காஞ்சிக்கோவில் ரோடு இந்திரா வீதியை சேர்ந்த செல்வம் (வயது 48) என்பதும் சிப்காட்டில் உள்ள கம்பெனிகளில் எலெக்ட்ரீசியன் மற்றும் பிட்டர் வேலை பார்த்து வருவதாக கூறினார்.
இந்த கம்பெனியில் உள்ள மின்சாதன பொருட்களை திருட வந்ததாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அலுவலக அறையில் இருந்த 6 பேன்கள், 2 மின் மோட்டார்கள் மற்றும் எலக்ட்ரிக்கல் காப்பர் ஒயர்கள் ஆகியவற்றை திருடி சென்றதாக அவர் கூறினார்.
இதையடுத்து பெருந்துறை போலீசில் துரைசாமி புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து செல்வத்தை கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்த பொருட்களை பறிமுதல் செய்து பெருந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக கடந்த 24 நாட்களுக்கு மேலாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 100 அடியில் இருந்து வருகிறது.
இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக சுமார் 23 நாட்களாக 100 அடியில் இருந்து வந்த பவானிசாகர் அணை இன்று 101 அடியை எட்டி உள்ளது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 101.01 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3,241 கன வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பவானி ஆற்றுக்கு 100 கன அடி, காலிங்கராயன் பாசனத்திற்கு 500 கன அடி என மொத்தம் 600 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கெட்டிசமுத்திரம், புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த 12-ம் வகுப்பு படிக்கும் 19 வயது மாணவன், அதே பகுதியில் 10-ம் வகுப்பு படிக்கும் 16 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்தனர்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து அந்தியூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருவரும் வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், மாணவியை பெற்றோர் தேடுவதை அறிந்த மாணவன், அம்மாணவியை வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டான்.
இதனைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக அம்மாணவி சோர்வுடன் காணப்பட்டதோடு, வாந்தி எடுத்துள்ளார். இதைப்பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மாணவியிடம் பெற்றோர் விசாரிக்கையில் காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்தி வந்ததும், மருத்துவ பரிசோதனையில் 3 மாத கர்ப்பம் என தெரியவந்தது.
இதைகேட்ட பெற்றோர் அதிர்ச்சிக்குள்ளாகினர். உடனடியாக இது குறித்து பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவனை கைது செய்தனர். பின்னர் ஈரோடு இளஞ்சிறார் நீதிமன்ற குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 9-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி அத்தியாவசிய கடைகள் தவிர டாஸ்மாக் உள்பட மற்ற அனைத்து கடைகளும் மாலை 5 மணிக்குள் மூடவேண்டும் என்றும், மக்கள் அதிகம் கூடும் இடங்களான கண்டறியப்பட்டுள்ள மாவட்டத்தில் உள்ள 24 இடங்களில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அத்தியாவசிய கடைகளைத் தவிர மற்ற கடைகள் முழுமையாக அடைக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 214 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக ஏற்கனவே பார்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் 105 பார்கள் அடைக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.4 கோடி வரை டாஸ்மாக் கடைகளில் விற்பனையாகும். வழக்கமாக காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தது. தற்போது கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவித்து அதன் காரணமாக மாலை 5 மணிக்கே மூட வேண்டிய நிலை உள்ளது.
இதனால் 3 மணி நேரத்திற்கு முன்பாகவே கடைகள் மூட வேண்டிய நிலை உள்ளதால் டாஸ்மாக் கடை விற்பனை 30 சதவீதமாக குறைந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வழக்கமாக மாலை 6 மணிக்கு பிறகு தான் வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கும். தற்போது 5 மணிக்கே கடைகளை மூடி விடுவதால் விற்பனை சதவீதம் குறைந்துள்ளது என்றனர்.
இதேபோல் மக்கள் அதிகம் கூடும் இடங்களான அறிவிக்கப்பட்ட பகுதிகளில் மொத்தம் 12 டாஸ்மாக் கடைகள் வாரத்துக்கு 2 நாட்கள் மூடப்பட்டு வருவதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.
பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த நாட்களாக மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக கடந்த 20 நாட்களுக்கு மேலாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 100 அடியில் இருந்து வருகிறது.
நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தது. இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்ததால் இன்று பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 100.91 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 5,907 கன வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 800 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 1,000 கன அடி என மொத்தம் 1,900 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோட்டில் புறநகர் பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்துள்ளது. சென்னிமலை பகுதியில் அதிகபட்சமாக 26 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதேபோல் தாளவாடியில்-17, வரட்டுபள்ளம்-2.6 மி.மீ மழை பதிவாகி உள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி, கரடி, செந்நாய், மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இந்த வனப்பகுதி வழியாக திண்டுக்கல்லில் இருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.
இந்த நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் அவ்வப்போது கடந்து செல்வது வழக்கம். கடந்த சில மாதங்களாக தமிழக-கர்நாடக எல்லை காரப்பள்ளம் அருகே கரும்புகளை தின்பதற்காக யானைகள் குட்டியுடன் சாலையில் உலா வருவதும், வாகனங்களை வழிமறித்து கரும்புகளை தின்பதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் காரப்பள்ளம் என்ற இடத்தில் கரும்பு லாரியை எதிர்ப்பார்த்து குட்டிகளுடன் யானைகள் கூட்டமாக வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலா வந்தது.
இதனால் அவ்வழியாக வந்த வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றன. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் ஆபத்தை உணராமல் யானைகளை செல்பி எடுத்து கொண்டிருந்தார்.
பின்னர் யானை கூட்டம் சுமார் 30 நிமிடத்திக்கு பிறகு வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் கர்நாடக-தமிழகம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வனப்பகுதியில் ரோட்டை கடக்கும் யானை உள்ளிட்ட வனவிலங்குகளை அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும். வனவிலங்குகள் திடீரென தாக்குதல் நடத்தினால் ஆபத்து ஏற்பட்டு விடும். எனவே வாகனங்களில் செல்பவர்கள் கவனமாக செல்ல வேண்டும். வனவிலங்குகளை செல்பி எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் இயங்கும் பால், மருந்தகம், மளிகை கடை, காய்கறி கடைகள், உணவகங்கள் தவிர பிற கடைகள் அனைத்தும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க முழுமையாக தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி மக்கள் அதிகம் கூடும் பகுதிகளாக காணப்படும் ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதி, டி.வி.எஸ் தெரு, காந்திஜி ரோடு, பிருந்தா வீதி, பழைய சென்ட்ரல் தியேட்டர் ரோடு, மணிக்கூண்டு, ஆர்.கே.வி.ரோடு, மேட்டூர் ரோடு, ஸ்டோனி பாலம், வ.ஊ.சி பூங்கா, காவிரி ரோடு ஆகிய பகுதிகளிலும், பவானியில் காவிரி ரோடு, கூடுதுறை, அம்மாபேட்டை டவுன், மங்களபடி துறை ஆகிய பகுதிகளில். கோபியில் மார்க்கெட், கடைவீதி பகுதிகளிலும், சத்தியமங்கலத்தில் வரதம்பாளையம், நிர்மலா தியேட்டர் ஜங்ஷன், புளியம்பட்டி மாதம்பாளையம் சந்திப்பு, புளியம்பட்டி பஸ் நிலையம் எதிரில், தாளவாடி பஸ்ரேஸ்வரா பஸ் நிலையம், டி.என். பாளையம் பஸ் நிறுத்தம் அருகில், டி.ஜி.புதூர் ஆகிய பகுதிகளிலும் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் அனைத்தும் நேற்று கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இந்த பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களின் கடைகள் மட்டுமே திறக்கப்பட்டு இருந்தது. நேற்று தடை விதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
மாநகராட்சி சார்பில் அலுவலர்கள் முக்கிய வீதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளதா? என்று கண்காணித்தனர்.மாநகர் பகுதியில் மட்டும் 11 இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதுபோல் கோபி, சத்தியமங்கலம், பவானி, புளியம்பட்டி, தாளவாடி என மொத்தம் 24 இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் இந்த பகுதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இந்நிலையில் இன்றும் குறிப்பிட்ட பகுதிகளில் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. நேற்று எந்த கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இன்றும் முக்கியமான வீதிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.
சிவகிரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் நகரின் முக்கிய பகுதிகளில் ரோந்து பணியை மேற்கொண்டனர்.
அப்போது 7-ம் திருநாள் மண்டபம் அருகில் உள்ள பகுதியில் முககவசம் அணியாமல் வந்த 50 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கொரோனா விழிப்புணர்வு குறித்து ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து முககவசம் அணியாமல் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இன்ஸ்பெக்டர் மனோகரன் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தார்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது.
இதையடுத்து பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த 9-ந்தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி அத்தியாவசிய கடைகளான பால் மற்றும் மருந்தகம் தவிர அனைத்து மளிகை கடைகள், காய்கறி கடைகள், ஓட்டல்கள், பேக்கரிகள் உள்ளிட்ட மற்ற கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உணவகங்கள் அனைத்திலும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சலில் மட்டுமே உணவு வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அனைத்து டீ கடைகளுக்கும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பார்சல் சேவை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் இயங்கும் பால், மருந்தகம், மளிகை கடை, காய்கறி கடைகள், உணவகங்கள் ஆகியவை தவிர பிற கடைகள் அனைத்தும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையாக இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மக்கள் அதிகம் கூடும் பகுதிகளாக காணப்படும் ஈரோடு மாநகராட்சி பகுதியில் ஈஸ்வரன் கோவில் வீதி, டி.வி.எஸ் தெரு, காந்திஜி ரோடு, பிருந்தா வீதி, பழைய சென்ட்ரல் தியேட்டர் ரோடு, மணிக்கூண்டு, ஆர்.கே.வி.ரோடு, மேட்டூர் ரோடு, ஸ்டோனி பாலம், வ.உ.சி பூங்கா, காவிரி ரோடு ஆகிய பகுதிகளிலும்,
பவானியில் காவிரி ரோடு, கூடுதுறை, அம்மாபேட்டை டவுன், மங்களபடி துறை ஆகிய பகுதிகளிலும், கோபிசெட்டிபாளையத்தில் மார்க்கெட், கடைவீதி பகுதிகளிலும், சத்திய மங்கலத்தில் வரதம்பாளையம், நிர்மலா தியேட்டர் ஜங்ஷன், புளியம்பட்டி மாதம்பாளையம் சந்திப்பு, புளியம்பட்டி பஸ் நிலையம் எதிரில், தாளவாடி பஸ்ரேஸ்வரா பஸ் நிலையம், டி.என். பாளையம் பஸ் நிறுத்தம் அருகில், டி.ஜி.புதூர் ஆகிய பகுதிகளிலும் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் 24 இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.
ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு, ஆர்.கே.வி. ரோடு பகுதிகளில் சாலையின் இருபுறங்களிலும் 100-க்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள் உள்ளன. இதனால் இந்த பகுதியில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.
இதுபோக ஏராளமான வீட்டு உபயோக பொருட்கள் கடைகள், அழகு சாதன கடைகள் போன்ற கடைகள் இருப்பதால் இங்கு மக்கள் கூட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். வழக்கமாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகளவில் இருக்கும். தற்போது கொரேனா கட்டுப்பாடு காரணமாக இன்று கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இதேப்போல் ஸ்டோனி பாலம் அருகே உள்ள மீன் மார்க்கெட்டும் மூடப்பட்டிருந்தது. இந்த பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களின் கடைகள் மட்டுமே இன்று திறக்கப்பட்டு இருந்தது.
மாநகராட்சி அலுவலர்கள் அனுமதி மறுக்கப்பட்ட வீதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளதா என்று கண்காணித்தனர். மாநகர் பகுதியில் மட்டும் 11 இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கடைகள் அடைக்கப்பட்டுள்ள பகுதியில் செயல்பட்டு வந்த 12 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.
இதுபோல் தமிழக அரசின் உத்தரவின் படி 3 நாட்கள் வழிபாட்டு தலங்கள் அடைக்கப்படுகின்றன. நேற்று ஈரோட்டில் உள்ள முக்கிய கோவில்கள் நடை சாத்தப்பட்டு இருந்தன. ஆலயங்கள், பள்ளி வாசல்களும் மூடப்பட்டு இருந்தன. ஆடி வெள்ளி அம்மனுக்கு உகந்த நாள் என்பதால் பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தர்கள் கூடுவது வழக்கம். ஆனால் ஈரோட்டில் நேற்று பெரிய மாரியம்மன் கோவில் வகையறா கோவில்கள், வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில், கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன் வகையறா கோவில்கள், சூரம்பட்டி வலசு மாரியம்மன் கோவில் என அனைத்து கோவில்களும் நடை சாத்தப்பட்டு இருந்தன. ஆனால் ஆங்காங்கே வீதிகளில் வைக்கப்பட்டு இருக்கும் சிறிய அளவிலான கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
ஈரோட்டில் உள்ள புனித அமல அன்னை ஆலயம், சி.எஸ்.ஐ. பிரப் நினைவு ஆலயம், ரெயில்வே காலனி திருஇருதய ஆண்டவர் ஆலயம் உள்ளிட்ட அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் வழிபாடுகள் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் நேற்று ஆலய நுழைவுவாயில் கதவுகள் அடைக்கப்பட்டு இருந்தன. முஸ்லிம் பள்ளிவாசல்களில் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெறவில்லை. 3 நாட்கள் தொழுகை நடைபெறாது என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருந்தது.
கொரோனா ஊரடங்கின்போது மதுக்கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. அப்போது கர்நாடகா மாநிலத்தில் இருந்து திருட்டுத்தனமாக மதுபாட்டில்கள் கடத்தப்பட்டன. அதனால் போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார்கள். அதன்படி பர்கூர் போலீசார் 1,721 மது பாட்டில்களும், அந்தியூர் போலீசார் 138 மதுபாட்டில்களும், வெள்ளித் திருப்பூர் போலீசார் 558 மதுபாட்டில்களும், அம்மாபேட்டை போலீசார் 1,026 மதுபாட்டில்களும் என மொத்தம் 3 ஆயிரத்து 443 கர்நாடக மாநில மது பாட்டில்கள் மற்றும் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தார்கள்.
இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் அனைத்தும் நேற்று அந்தியூர் பெரிய ஏரிக்கு லாரியில் கொண்டுவரப்பட்டன.
அதைத்தொடர்ந்து கோபி கலால் தாசில்தார் ஷீலா முன்னிலையில், அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையில் பொக்லைன் எந்திரம் ஏற்றி மதுபாட்டில்கள் அழித்து உடைக்கப்பட்டன. சுமார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டதாக போலீசார் கூறினார்கள்.
மதுபாட்டில் அழிக்கப்பட்டபோது அப்பகுதி மக்கள் திரண்டு வந்து வேடிக்கை பார்த்தார்கள்.






