என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடைகள் அடைக்கப்பட்டு சாலை வெறிச்சோடி காணப்படும் காட்சி.
    X
    கடைகள் அடைக்கப்பட்டு சாலை வெறிச்சோடி காணப்படும் காட்சி.

    ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக முக்கிய வீதிகளில் கடைகள் அடைப்பு

    அத்தியாவசிய பொருட்களின் கடைகள் மட்டுமே திறக்கப்பட்டு இருந்தது. நேற்று தடை விதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் இயங்கும் பால், மருந்தகம், மளிகை கடை, காய்கறி கடைகள், உணவகங்கள் தவிர பிற கடைகள் அனைத்தும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க முழுமையாக தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி மக்கள் அதிகம் கூடும் பகுதிகளாக காணப்படும் ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதி, டி.வி.எஸ் தெரு, காந்திஜி ரோடு, பிருந்தா வீதி, பழைய சென்ட்ரல் தியேட்டர் ரோடு, மணிக்கூண்டு, ஆர்.கே.வி.ரோடு, மேட்டூர் ரோடு, ஸ்டோனி பாலம், வ.ஊ.சி பூங்கா, காவிரி ரோடு ஆகிய பகுதிகளிலும், பவானியில் காவிரி ரோடு, கூடுதுறை, அம்மாபேட்டை டவுன், மங்களபடி துறை ஆகிய பகுதிகளில். கோபியில் மார்க்கெட், கடைவீதி பகுதிகளிலும், சத்தியமங்கலத்தில் வரதம்பாளையம், நிர்மலா தியேட்டர் ஜங்‌ஷன், புளியம்பட்டி மாதம்பாளையம் சந்திப்பு, புளியம்பட்டி பஸ் நிலையம் எதிரில், தாளவாடி பஸ்ரேஸ்வரா பஸ் நிலையம், டி.என். பாளையம் பஸ் நிறுத்தம் அருகில், டி.ஜி.புதூர் ஆகிய பகுதிகளிலும் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த பகுதியில் அனைத்தும் நேற்று கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இந்த பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களின் கடைகள் மட்டுமே திறக்கப்பட்டு இருந்தது. நேற்று தடை விதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    மாநகராட்சி சார்பில் அலுவலர்கள் முக்கிய வீதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளதா? என்று கண்காணித்தனர்.மாநகர் பகுதியில் மட்டும் 11 இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதுபோல் கோபி, சத்தியமங்கலம், பவானி, புளியம்பட்டி, தாளவாடி என மொத்தம் 24 இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் இந்த பகுதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    இந்நிலையில் இன்றும் குறிப்பிட்ட பகுதிகளில் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. நேற்று எந்த கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இன்றும் முக்கியமான வீதிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.

    Next Story
    ×