என் மலர்
ஈரோடு
கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகளுக்கு 31-ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் இன்று முதல் மாணவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் தெரிவித்து உள்ளார்.
ஈரோடு:
கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகளுக்கு 31-ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் இன்று முதல் மாணவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று தற்போது வேகமாக பரவி வருகிறது. இதனால் மீண்டும் கொரோனாபாதிப்பு வேகம் எடுத்துவருகிறது. தினசரி பாதிப்பு புதியஉச்சத்தை தொட்டுவருகிறது.
இதனை கட்டுப்படுத்தும் வகையில் முதற்கட்டமாக 15 வயது முதல் 18 வயது வரை உடைய சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும்பணி தமிழகத்தில் கடந்த 3-ந் தேதி தொடங்கியது.
ஈரோடு மாவட்டத்திலும் கடந்த 3-ந் தேதி முதல் அந்தந்த பள்ளிகளிலேயே 15 முதல் 18 வயது உடைய சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் 523 பள்ளிகளில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 260 சிறுவர்கள் தடுப்பூசி போட தகுதியானவர்கள். ஒவ்வொரு நாளும் அந்தந்த பள்ளிகளில் மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா தினசரி பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் முதற்கட்டமாக 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வரும் 31-ந் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் கொரோனா தாக்கம் காரணமாக வரும் 31-ந் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அவர்களும் ஆன்லைன் மூலம் வகுப்புகளில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி விடுமுறை காரணமாக 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு போடப்படும் தடுப்பூசி பணி பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டது.
இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்கள் இன்று முதல் அவர்கள் வசிக்கும் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் சென்று அடையாள அட்டையை காட்டி தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.
தைபூசத்தையொட்டி இன்று மாலை முருகன் கோவில்களில் திருகல்யாணம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சென்னிமலை:
தைபூசத்தையொட்டி இன்று மாலை முருகன்கோவில்களில் திருகல்யாணம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூசவிழா நாளை கொண்டாடப்படுகிறது.
சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூசவிழா கட்டுப்பாடுகளுடன் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. இதையொட்டி தைப்பூச விழா தொடங்கி நடந்து வருகிறது. விழாவையொட்டி முருகனுக்கு தினமும் அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.
சென்னிமலை முருகன் கோவிலில் இன்று அதிகாலை முருகனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்று மாலை விநாயகர் வழிபாடு, ஹோமம், முதல்கால பூஜை நடக்கிறது. மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சி நடக்கிறது.
இதில் பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய அனுமதி இல்லை. பூசாரிகள் மற்றும் கோவில் முக்கியஸ்தர்கள் மட்டும் கலந்து கொள்கிறார்கள்.
திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு தேவையான அபிஷேகபொருட்களை பக்தர்கள் கோவிலில் வைக்கப்பட்டுள்ள பாத்திரங்களில் வழங்க வேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தைப்பூச தினமான நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 2-ம் கால பூஜை, உற்சவர் அபிஷேகம், கலசாபிஷேகம் நடக்கிறது. காலை கைலாசநாதர் கோவில் உள்பிரகாரத்தில் சுவாமி உலா நிகழ்ச்சி நடக் கிறது.
இதிலும் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை. ஆனால் பக்தர்கள் அபிஷேகத்துக்கு தேவையான பொருட்களை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் திண்டல் மலை வேலாயுதசாமி கோவிலில் தைப்பூசவிழா தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் முருகனுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங் காரத்தில் முருகன் அருள் பாலித்து வருகிறது.
நாளை அதிகாலை வேலாயுதசாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப் படுகிறது. இதில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை.
கோபி அருகே உள்ள பச்சமலை, பவளமலை முருகன் கோவில், பார்க் ரோடு முருகன்கோவில், கருங்கல்பாளையம் பாலதண்டாயுபாணி கோவில் உள்பட அனைத்து முருகன் கோவில்களிலும் நாளை தைப்பூசவிழா கொண்டாடப்படுகிறது.
நெஞ்சு சளி அதிகமாகி மூச்சுவிட முடியாமல் சிரமப்பட்ட பெண் மூச்சு திணறி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மரப்பாலம் கோப்பெருந்தேவி வீதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 72). ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர். இவருடைய மகள் பிரதீபா (வயது 39).
இவர் கடந்த 20 ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக அவர் தினமும் 15 மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். இரவில் மாத்திரை சாப்பிட்டு தூங்கும் பிரதீபா தினமும் காலை 11 மணிக்கு தான் எழுந்திரிப்பார்.
இந்நிலையில் பிரதீபா விரைவில் குணமடைய வேண்டி அவர் குடும்பத்தினர் கோவிலுக்கு சென்றுள்ளனர். அங்கு கூறிய பரிகாரத்தின்படி கடந்த சில நாட்களாக பிரதீபா காலையில் எழுந்து தலைக்கு எலுமிச்சம்பழம் தேய்த்து குளித்து வந்துள்ளார்.
இதனால் அவருக்கு நெஞ்சு சளி அதிகமாகி அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று இரவு பிரதீபா எப்போதும் தான் சாப்பிடும் 15 மாத்திரைகளுடன் சளிக்கு 2 மாத்திரைகளை சேர்த்து சாப்பிட்டுள்ளார். மறுநாள் காலை 11 மணி ஆகியும் பிரதீபா எழுந்திருக்கவில்லை. அவரது தந்தை மகள் நன்றாக தூங்குகிறாள் என்று நினைத்து உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டு மாலை திரும்பி வந்துள்ளார்.
அப்போது பிரதீபா மூச்சுவிட முடியாமல் சிரமப்படுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரதீபாவை சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கடந்த 15-ந் தேதி அவரை ஈரோட்டில் உள்ள மற்றொரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த பிரதீபா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மரப்பாலம் கோப்பெருந்தேவி வீதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 72). ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர். இவருடைய மகள் பிரதீபா (வயது 39).
இவர் கடந்த 20 ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக அவர் தினமும் 15 மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். இரவில் மாத்திரை சாப்பிட்டு தூங்கும் பிரதீபா தினமும் காலை 11 மணிக்கு தான் எழுந்திரிப்பார்.
இந்நிலையில் பிரதீபா விரைவில் குணமடைய வேண்டி அவர் குடும்பத்தினர் கோவிலுக்கு சென்றுள்ளனர். அங்கு கூறிய பரிகாரத்தின்படி கடந்த சில நாட்களாக பிரதீபா காலையில் எழுந்து தலைக்கு எலுமிச்சம்பழம் தேய்த்து குளித்து வந்துள்ளார்.
இதனால் அவருக்கு நெஞ்சு சளி அதிகமாகி அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று இரவு பிரதீபா எப்போதும் தான் சாப்பிடும் 15 மாத்திரைகளுடன் சளிக்கு 2 மாத்திரைகளை சேர்த்து சாப்பிட்டுள்ளார். மறுநாள் காலை 11 மணி ஆகியும் பிரதீபா எழுந்திருக்கவில்லை. அவரது தந்தை மகள் நன்றாக தூங்குகிறாள் என்று நினைத்து உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டு மாலை திரும்பி வந்துள்ளார்.
அப்போது பிரதீபா மூச்சுவிட முடியாமல் சிரமப்படுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரதீபாவை சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கடந்த 15-ந் தேதி அவரை ஈரோட்டில் உள்ள மற்றொரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த பிரதீபா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 2 மணி நேரம் பலத்த மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இரவு முழுவதும் பனி அதிகமாக இருந்தாலும் பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது.
இந்நிலையில் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்தது. இந்நிலையில் நேற்று ஈரோடு மாவட்டத்தில் சில இடங்களில் பலத்த மழை முதல் மிதமான மழை பெய்துள்ளது.
மாநகரில் நேற்று காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. திடீரென இரவு 7 மணி முதல் 7.30 வரை 30 நிமிடம் பலத்த மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
இதேபோல் கவுந்தப்பாடி, வரட்டுப்பள்ளம், பவானி போன்ற பகுதியில் மழை பெய்தது. சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 2 மணி நேரம் பலத்த மழை பெய்துள்ளது.
சத்தியமங்கலம், அரியப்பம்பாளையம், ஓட்டை குட்டை, புளியம்கோம்பை, பண்ணாரி, வடவள்ளி, பவானிசாகர், திம்பம் மலைப்பகுதி போன்ற பகுதிகளில் இரவு 2 மணி முதல் அதிகாலை 4 மணி வரை சுமார் 2 மணி நேரம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
இதனால் சத்தியமங்கலம் அதன் சுற்றுவட்டார பகுதியில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இரவு முழுவதும் பனி அதிகமாக இருந்தாலும் பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது.
இந்நிலையில் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்தது. இந்நிலையில் நேற்று ஈரோடு மாவட்டத்தில் சில இடங்களில் பலத்த மழை முதல் மிதமான மழை பெய்துள்ளது.
மாநகரில் நேற்று காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. திடீரென இரவு 7 மணி முதல் 7.30 வரை 30 நிமிடம் பலத்த மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
இதேபோல் கவுந்தப்பாடி, வரட்டுப்பள்ளம், பவானி போன்ற பகுதியில் மழை பெய்தது. சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 2 மணி நேரம் பலத்த மழை பெய்துள்ளது.
சத்தியமங்கலம், அரியப்பம்பாளையம், ஓட்டை குட்டை, புளியம்கோம்பை, பண்ணாரி, வடவள்ளி, பவானிசாகர், திம்பம் மலைப்பகுதி போன்ற பகுதிகளில் இரவு 2 மணி முதல் அதிகாலை 4 மணி வரை சுமார் 2 மணி நேரம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
இதனால் சத்தியமங்கலம் அதன் சுற்றுவட்டார பகுதியில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
2 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா தொற்று காரணமாக பவானி கூடுதுறையில் பொதுமக்கள் புனித நீராட அடிக்கடி தடை விதிக்கப்பட்டது.
பவானி:
ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது. ஆண்டு தோறும் ஏராளமான பொதுமக்கள் இங்கு வந்து புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து சங்கமேஸ்வரரை வழிபட்டு செல்வார்கள்.
மேலும் அம்மாவாசை, வெள்ளிக்கிழமை உள்பட முக்கிய தினங்களில் ஏராளமான பொதுமக்கள் பவானி கூடுதுறையில் புனித நீராடுவார்கள்.
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா தொற்று காரணமாக பவானி கூடுதுறையில் பொதுமக்கள் புனித நீராட அடிக்கடி தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது குறைந்த அளவில் பரிகாரம் செய்யவும், புனித நீராடவும் அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் கடந்த 6-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழுஊரடங்கும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதே போல் இன்று 2-வது வாரமாக முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதையடுத்து பவானிகூடு துறையில் இன்று பொதுமக்கள் புனித நீராட, பரிகாரம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து புனித நீராட செல்லும் பாதையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதேபோல் கொடிவேரி, பவானிசாகர் அணை பூங்காவுக்கும் இன்று தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கும் சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் அதிக அளவில் திறப்பதால் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
சத்தியமங்கலம்:
பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் அதிக அளவில் திறப்பதால் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்றுகாலை 8 மணிநிலவரப்படி 100.33 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 885 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை கால்வாயில் 700 கனஅடியும், குடிநீருக்காக பவானி ஆற்றில் 100 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலில் 2300 கனஅடியும் என மொத்தம் 3100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்தை விட அதிக அளவில் தண்ணீர் திறப்பதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
பெருந்துறையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருந்துறை:
பெருந்துறையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருந்துறை ஈரோடுரோடு வண்ணாம்பாறை பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் (75). இவரது மனைவி சுகந்தி.
இந்நிலையில் சம்பவத்தன்று காலை பரமசிவம் வீட்டைப் பூட்டிவிட்டு தனது மனைவியுடன் வெளியூரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றார்.
பின்னர் மீண்டும் நேற்றுகாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின்பூட்டு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடந்தது.
அதிலிருந்த 3பவுன் தங்கசெயின், அரைபவுன் எடையுள்ள 2ஜோடிகம்மல்கள், மற்றும் ரூ.7ஆயிரம் ஆகியவை கொள்ளைபோனது தெரியவந்தது. இதன் மொத்தமதிப்பு ரூ-.52 ஆயிரம் ஆகும்.
உடனே பரமசிவம் இதுகுறித்து பெருந்துறை போலீசில் புகார்செய்தார். புகாரின்பேரில் பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் கருப்புசாமி வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
முழுஊரடங்கு காரணமாக இன்று ஈரோடு வ.உ.சி.பூங்காவில் காணும்பொங்கல் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டதால் பெண்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஈரோடு:
முழு ஊரடங்கு காரணமாக இன்று ஈரோடு வ.உ.சி.பூங்காவில் காணும் பொங்கல் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டதால் பெண்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
பொங்கல்பண்டிகையின் முக்கிய விழாவாக காணும் பொங்கல் உள்ளது. காணும்பொங்கல் அன்று மக்கள் தங்கள் குடும்பத்தாருடன் சுற்றுலாத்தலங்களுக்கு சென்று பொழுதைக்கழிப்பது வழக்கம்.
ஈரோடு மாவட்டத்திலும் காணும்பொங்கல் களைகட்டும். முக்கிய சுற்றுலாதலங்களில் மக்கள்கூட்டம் கூட்டமாக சென்று பொழுதைக்கழிப்பார்கள். மாநகரில் காணும் பொங்கலையொட்டி பெண்கள் மட்டுமே பங்கேற்கும் நிகழ்ச்சி ஈரோடு வ. உ. சி. பூங்கா பகுதியில் நடைபெறுவது வழக்கம்.
காணும்பொங்கலையொட்டி அதிகாலை முதலே பெண்கள் தங்களது குடும்பத்தினருடன் கூடுவார்கள். அங்கு பாட்டுப்போட்டி, நடனப் போட்டி என களை கட்டும்.
பெண்கள் பாரம்பரிய விளையாட்டான பாண்டி, ஒயிலாட்டம், கோலாட்டம், மியூசிக்கல் சேர், தாயம் போன்ற விளையாட்டை விளையாடி பொழுதை உற்சாகமாக கழிப்பார்கள்.
முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் எங்கு பார்த்தாலும் பெண்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். பெரியவர்கள் விதவிதமான சேலைகளுடனும், இளம்பெண்கள் பட்டுதாவணியுடன் வருவார்கள்.
ஆனால் இந்த வருடம் கொரோனா தாக்கம் காரணமாக இன்று முழுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் இன்று முழுநேர ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஈரோடு வ. உ. சி. பூங்கா மைதானத்தில் இன்று பெண்கள் காணும்பொங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதனால் வ.உ.சி.பூங்கா களை இழந்து காணப்பட்டது. இதனால் பெண்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வ.உ. சி. பூங்கா நுழைவாயிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அம்மாபேட்டை அருகே கனமழை காரணமாக 15 வருடங்களுக்கு பிறகு பெரிய ஏரி நிரம்பியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை அருகே கன மழை காரணமாக 15 வருடங்களுக்கு பிறகு பெரிய ஏரி நிரம்பியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
அம்மாபேட்டை அருகே உள்ள முகாசிப்புதூர் கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. அதிக மழை பெய்யும் காலங்களில் இந்த ஏரி நிரம்பி வழிவது உண்டு 96 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பெரிய ஏரி கடந்த 15 வருடங்களாக நிரம்பவில்லை. அவ்வப்போது பெய்யும் மழையால் தண்ணீர் தேங்கி நிற்கும்.
கடந்த மாதம் பெய்த தொடர் மழையின் காரணமாக அருகில் உள்ள ஏரிகள் நிரம்பிய போதிலும் இந்த பெரிய ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டாமல் பாதியிலேயே நின்றது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழை யின் காரண மாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. மேலும் எண்ணமங்கலம் ஏரி, கெட்டிசமுத்திரம் ஏரி ஆகிய ஏரிகளில் இருந்து சித்தார் ஓடை வழியாக வந்த தண்ணீர் பெரிய ஏரிக்குள் புகுந்தது.
இதனால் கடந்த 15 வருடங்களுக்கு பிறகு ஏரி நிரம்பி செல்கிறது. இந்த தண்ணீரின் மூலம் முகாசிப்புதூர், பூனாச்சி கன்னப்பள்ளி ஆகிய கிராமங்களில் சுமார் 200 ஏக்கர் விவசாய நிலம் பயனடையும்.
மேலும் நிலத்தடி நீர்மட்டம் அப்பகுதியில் அதிகரிக்கும். இதனால் வானம் பார்த்த பூமிகளும் பயனடையும் நிலை உள்ளது.
15 வருடங்களுக்கு பிறகு பெரிய ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியே செல்வதால் அப்பகுதி மக்கள் கூட்டமாக வந்து ஏரியை பார்த்து செல்கின்றனர்.
மேலும் ஏரி நிரம்பியதால் விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என்பதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக இன்று 2-வது வாரமாக முழுஊரடங்கு போடப்பட்டு உள்ளது. தடையைமீறி சுற்றியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஈரோடு:
கொரோனா தொற்று காரணமாக இன்று 2-வது வாரமாக முழுஊரடங்கு போடப்பட்டு உள்ளது. தடையைமீறி சுற்றியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக அரசு கடந்த 6--ந் தேதி முதல் இரவுநேர ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. அதேபோல் ஞாயிற்றுக்கிழமை அன்று முழுஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று 2-வது வாரமாக முழுஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மாநகர் பகுதியில் அனைத்து கடைகள், வணிகநிறுவனங்கள், ஜவுளிகடைகள், தொழிற் சாலைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

மாநகர் பகுதியில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பன்னீர்செல்வம்பார்க் பகுதி, காளைமாடுசிலை, மணிக்கூண்டு, ஆர்.கே.வி.ரோடு, ஈஸ்வரன்கோவில்வீதி, பஸ் நிலையம், ஸ்வஸ்திக்கார்னர், ஜி.எச். ரவுண்டானா, ரெயில்நிலையம், பெருந்துறைரோடு, மேட்டூர் ரோடு, நசியனூர்ரோடு, வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம் போன்ற பகுதிகளில் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

வ. உ. சி. பூங்கா பகுதியில் செயல்பட்டு வரும் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் அடைக்கப்பட்டிருந்தன. இதேபோல் சம்பத்நகர், பெரியார்நகரில் உள்ள உழவர் சந்தைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பெருந்துறை, சத்தியமங்கலம், கோபி பகுதியில் செயல்பட்டுவரும் உழவர்சந்தையும் அடைக்கப்பட்டிருந்தன.
ஆனால் அதேநேரம் அம்மா உணவகங்கள் இன்று வழக்கம்போல் செயல்பட்டன. உணவங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை. பார்சலில் மட்டுமே உணவு வழங்கப்பட்டது. மாநகர் பகுதியில் 11 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் இன்று காலை வழக்கம் போல் செயல்பட்டன.
இதேபோல் ஓட்டலிலும் பார்சலில் உணவு வழங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் பெரும்பாலான ஓட்டல்கள் அடைக்கப்பட்டு இருந்தன. பெரிய ஓட்டல்களில் ஆன்லைன் ஆர்டர் மூலம் சேவை வழங்கப்பட்டன. அத்தியாவசிய பொருட்களான பால் சேவைகள் வழக்கம்போல் நடைபெற்றன.
இதேபோல் ஆஸ்பத்திரிகள், மருந்தகங்கள், ஆய்வுக்கூடங்கள், ஆம்புலன்ஸ் சேவை, பெட்ரோல்பங்குகள் வழக்கம்போல் இயங்கின. இந்த முழுஊரடங்கையொட்டி பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஈரோடு பஸ்நிலையம் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. அதேநேரம் முன்களப்பணியாளர்கள் வழக்கம்போல் இன்று பணிக்கு சென்றனர்.
இன்று ஈரோடு மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
கருங்கல்பாளையம் சோதனைசாவடி, பவானி லட்சுமிநகர் சோதனைசாவடி, பண்ணாரி சோதனைசாவடி, நொய்யல் ஆற்று சோதனைசாவடி என 14 சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனங்கள் மட்டும் கடும் சோதனைக்கு பிறகு மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டன.
இதேபோல் திருமணம் போன்ற விசேஷங்களுக்கு வாகனங்களில் வருபவர்கள் திருமண அழைப்புதலுடன் வந்ததால் அந்த வாகனம் அனுமதிக்கப்பட்டன. இன்று பலர் மருத்துவ தேவைக்காக வெளியே வந்ததாக கூறி அதற்கு உண்டான தகுந்த காரணத்தை கூறி வாகனங்களில் சென்றனர். அவர்களை போலீசார் அனுமதித்தனர்.

இதுதவிர தேவையின்றி வெளிய சுற்றிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சில வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ஈரோடு பன்னீர்செல்வம்பார்க், ஜி.எச்.ரவுண்டானா, காளைமாடுசிலை, ஸ்வஸ்திக்கார்னர் போன்ற முக்கியமான சாலைகளில் போலீசார் தடுப்புகளை அமைத்து தீவிரமாக கண்காணித்து வந்தனர். ஈரோடு மீனாட்சிசுந்தரனார் சாலையில் உள்ள மேம்பாலத்தை போலீசார் தடுப்புகள் வைத்து அடைத்தனர். முக்கியமான கடைவீதி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். முக்கியமான சாலைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
இதேபோல் கோபிசெட்டிபாளையம், பெருந்துறை, சத்தியமங்கலம், சித்தோடு, பவானி, அந்தியூர், மொடக்குறிச்சி, கொடுமுடி உள்பட மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இன்று முழுஊரடங்கு என்றாலும் ரெயில்கள் வழக்கம்போல் இயங்கின.
ஈரோடு ரெயில் நிலையத்தில் இன்று காலை ஏராளமான வட மாநிலத்தவர்கள் தங்கள் சொந்தஊருக்கு செல்வதற்காக வந்திருந்தனர். இதனால் ரெயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. போக்குவரத்து எதுவும் இல்லாததால் நீண்ட தொலைவில் இருந்து நடந்தே வந்திருந்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் மதுக்கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் தடையை மீறி மதுவிற்றதாக 29 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் மதுக்கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் தடையை மீறி மதுவிற்றதாக 29 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் நேற்று மாட்டுபொங்கலை யொட்டியும், இன்று முழுஊரடங்கையொட்டியும் டாஸ்மாக் கடைகள் 2 நாட்கள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. எனினும் தடையைமீறி ஒரு சில இடங்களில் மது விற்பனை நடைபெற்றது.
தடையை மீறி மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரோடு மாவட்ட மதுவிலக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசாருடன் மதுவிலக்கு போலீசார் இணைந்து தீவிரரோந்து பணியில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தடையை மீறி மது விற்றதாகவும், மது அருந்த அனுமதி அளித்ததாகவும் பலர் கைது செய்யப்பட்டு ள்ளனர்.
ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் தாளவாடி சப்-இன்ஸ்பெக்டர் ராஸ்பன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது திகிநாரை அம்பேத்கார் தெருவில் கோவிந்தராஜ் (40) என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கர்நாடக மாநில மதுபானங்களை தடையை மீறி விற்றுக்கொண்டிருந்தார்.
அவரை போலீசார் மடக்கி பிடித்தனர் அவரிடம் இருந்து 92 மதுபாக்கெட்டுகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
இதேபோல் மாவட்டம் முழுவதும் தடையை மீறி மது விற்பனை செய்ததாகவும், மது அருந்த அனுமதி அளித்ததாகவும் என நேற்று ஒரேநாளில் 29 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 393 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோடு மாவட்டத்தில் பணம் வைத்து சேவல் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் பணம்வைத்து சேவல் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி வருகிறார்கள்.
கொடுமுடி அருகே உள்ள கள்ளக்காட்டு வலசு பகுதியில் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு சிலர் 2 சேவல்கள் மற்றும் பணம்வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.
அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் தாமரைபாளையம் பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி, ஆனந்த், வெங்கம்பூர் ஸ்ரீதர், ஊஞ்சலூர் பிரபாகரன், முருகானந்தம், சிவகிரி கிருஷ்ணமூர்த்தி, சக்திவேல், கொடுமுடி கணேசன் என தெரியவந்தது.
இதையடுத்து அவர்களிடம் இருந்து 2 சேவல்கள் மற்றும் ரூ.1900 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்குபதிவு செய்து அவர்கள் 8 பேரையும் கைது செய்தனர்.
புலவப்பாளையம் பகுதியில் சிலர் 4 சேவல்களை வைத்து சூதாடி கொண்டிருந்தனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் ஜெகதீஷ், மாணிக்கம், கார்த்திக், சிகாமணி, பார்த்திபன், மணிகண்டன், பூபதி, பாஸ்கரன், சண்முகம், கருப்புசாமி என தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து 4 சேவல்கள், ரூ.12 ஆயிரத்து190 பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து வரப் பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜ மாணிக்கம் வழக்கு பதிவு செய்து அவர்கள் 10 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பவானி அடுத்த குருப்பநாயக்கன்பாளையம் பகுதியில் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியில் சிலர் சேவல் சூதாடத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அவர் களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட பவானியை சேர்ந்த முத்துசாமி, கதிர்வேல், சீனிவாசன் ஆகிய 3 பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன் வழக்குபதிவு செய்து அவர்கள் 3 பேரை கைது செய்தார்.
அவர்களிடம் இருந்து 2 சேவல்கள் மற்றும் ரூ.650 பறிமுதல் செய்யப்பட்டது-.






