என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புப்படம்.
  X
  கோப்புப்படம்.

  ஈரோடு மாவட்டம் முழுவதும் தடையை மீறி மது விற்ற 29 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஈரோடு மாவட்டத்தில் மதுக்கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் தடையை மீறி மதுவிற்றதாக 29 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
  ஈரோடு:

  ஈரோடு மாவட்டத்தில் மதுக்கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் தடையை மீறி மதுவிற்றதாக 29 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

  தமிழகம் முழுவதும் நேற்று மாட்டுபொங்கலை யொட்டியும், இன்று முழுஊரடங்கையொட்டியும் டாஸ்மாக் கடைகள் 2 நாட்கள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டது. 

  அதன்படி டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. எனினும் தடையைமீறி ஒரு சில இடங்களில் மது விற்பனை நடைபெற்றது.

  தடையை மீறி மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரோடு மாவட்ட மதுவிலக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்திருந்தனர். 

  இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசாருடன் மதுவிலக்கு போலீசார் இணைந்து தீவிரரோந்து பணியில் ஈடுபட்டனர். 

  ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தடையை மீறி மது விற்றதாகவும், மது அருந்த அனுமதி அளித்ததாகவும் பலர் கைது செய்யப்பட்டு ள்ளனர்.

  ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில்  தாளவாடி சப்-இன்ஸ்பெக்டர் ராஸ்பன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். 

  அப்போது திகிநாரை அம்பேத்கார் தெருவில்  கோவிந்தராஜ் (40) என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கர்நாடக மாநில மதுபானங்களை தடையை மீறி விற்றுக்கொண்டிருந்தார்.

  அவரை போலீசார் மடக்கி பிடித்தனர் அவரிடம் இருந்து 92 மதுபாக்கெட்டுகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். 

  இதேபோல் மாவட்டம் முழுவதும் தடையை மீறி மது விற்பனை செய்ததாகவும், மது அருந்த அனுமதி அளித்ததாகவும் என  நேற்று ஒரேநாளில் 29 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 393 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
  Next Story
  ×