என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புப்படம்.
  X
  கோப்புப்படம்.

  சேவல் சூதாட்டம் நடத்திய 21 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஈரோடு மாவட்டத்தில் பணம் வைத்து சேவல் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி வருகிறார்கள்.
  ஈரோடு:

  ஈரோடு மாவட்டத்தில் பணம்வைத்து சேவல் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி வருகிறார்கள்.

  கொடுமுடி அருகே உள்ள கள்ளக்காட்டு வலசு பகுதியில்  இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு சிலர் 2 சேவல்கள் மற்றும் பணம்வைத்து சூதாடி கொண்டிருந்தனர். 

  அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் தாமரைபாளையம்  பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி,  ஆனந்த், வெங்கம்பூர் ஸ்ரீதர், ஊஞ்சலூர் பிரபாகரன், முருகானந்தம், சிவகிரி கிருஷ்ணமூர்த்தி, சக்திவேல், கொடுமுடி கணேசன் என தெரியவந்தது.

  இதையடுத்து அவர்களிடம் இருந்து 2 சேவல்கள் மற்றும்  ரூ.1900 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்குபதிவு செய்து அவர்கள் 8 பேரையும் கைது செய்தனர்.

  புலவப்பாளையம் பகுதியில் சிலர் 4 சேவல்களை வைத்து சூதாடி கொண்டிருந்தனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். 

  இதில் அவர்கள் ஜெகதீஷ், மாணிக்கம், கார்த்திக், சிகாமணி, பார்த்திபன், மணிகண்டன், பூபதி, பாஸ்கரன், சண்முகம், கருப்புசாமி என தெரியவந்தது.

  அவர்களிடம் இருந்து 4 சேவல்கள், ரூ.12 ஆயிரத்து190 பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 

  இது குறித்து வரப் பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜ மாணிக்கம்  வழக்கு பதிவு செய்து அவர்கள் 10 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  பவானி அடுத்த குருப்பநாயக்கன்பாளையம் பகுதியில் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியில் சிலர் சேவல் சூதாடத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அவர் களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். 

  சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட பவானியை சேர்ந்த முத்துசாமி, கதிர்வேல், சீனிவாசன் ஆகிய 3 பேர் மீது  சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன் வழக்குபதிவு செய்து அவர்கள் 3 பேரை கைது செய்தார்.

  அவர்களிடம் இருந்து 2 சேவல்கள் மற்றும் ரூ.650 பறிமுதல் செய்யப்பட்டது-.
  Next Story
  ×