என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
தைபூசத்தையொட்டி இன்று மாலை திருக்கல்யாணம்-பக்தர்களுக்கு அனுமதி இல்லை
தைபூசத்தையொட்டி இன்று மாலை முருகன் கோவில்களில் திருகல்யாணம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சென்னிமலை:
தைபூசத்தையொட்டி இன்று மாலை முருகன்கோவில்களில் திருகல்யாணம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூசவிழா நாளை கொண்டாடப்படுகிறது.
சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூசவிழா கட்டுப்பாடுகளுடன் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. இதையொட்டி தைப்பூச விழா தொடங்கி நடந்து வருகிறது. விழாவையொட்டி முருகனுக்கு தினமும் அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.
சென்னிமலை முருகன் கோவிலில் இன்று அதிகாலை முருகனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்று மாலை விநாயகர் வழிபாடு, ஹோமம், முதல்கால பூஜை நடக்கிறது. மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சி நடக்கிறது.
இதில் பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய அனுமதி இல்லை. பூசாரிகள் மற்றும் கோவில் முக்கியஸ்தர்கள் மட்டும் கலந்து கொள்கிறார்கள்.
திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு தேவையான அபிஷேகபொருட்களை பக்தர்கள் கோவிலில் வைக்கப்பட்டுள்ள பாத்திரங்களில் வழங்க வேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தைப்பூச தினமான நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 2-ம் கால பூஜை, உற்சவர் அபிஷேகம், கலசாபிஷேகம் நடக்கிறது. காலை கைலாசநாதர் கோவில் உள்பிரகாரத்தில் சுவாமி உலா நிகழ்ச்சி நடக் கிறது.
இதிலும் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை. ஆனால் பக்தர்கள் அபிஷேகத்துக்கு தேவையான பொருட்களை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் திண்டல் மலை வேலாயுதசாமி கோவிலில் தைப்பூசவிழா தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் முருகனுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங் காரத்தில் முருகன் அருள் பாலித்து வருகிறது.
நாளை அதிகாலை வேலாயுதசாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப் படுகிறது. இதில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை.
கோபி அருகே உள்ள பச்சமலை, பவளமலை முருகன் கோவில், பார்க் ரோடு முருகன்கோவில், கருங்கல்பாளையம் பாலதண்டாயுபாணி கோவில் உள்பட அனைத்து முருகன் கோவில்களிலும் நாளை தைப்பூசவிழா கொண்டாடப்படுகிறது.
Next Story






