என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புப்படம்.
  X
  கோப்புப்படம்.

  இன்று முதல் ஆரம்ப சுகாதாரநிலையத்தில் மாணவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகளுக்கு 31-ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் இன்று முதல் மாணவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் தெரிவித்து உள்ளார்.
  ஈரோடு:

  கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகளுக்கு 31-ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் இன்று முதல் மாணவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில்   தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் தெரிவித்து உள்ளார்.

  தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

  இந்நிலையில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று தற்போது வேகமாக பரவி வருகிறது. இதனால் மீண்டும் கொரோனாபாதிப்பு வேகம் எடுத்துவருகிறது. தினசரி பாதிப்பு புதியஉச்சத்தை தொட்டுவருகிறது.

  இதனை கட்டுப்படுத்தும் வகையில் முதற்கட்டமாக 15 வயது முதல் 18 வயது வரை உடைய சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும்பணி தமிழகத்தில் கடந்த 3-ந் தேதி தொடங்கியது. 

  ஈரோடு மாவட்டத்திலும் கடந்த 3-ந் தேதி முதல் அந்தந்த பள்ளிகளிலேயே 15 முதல் 18 வயது உடைய சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

  ஈரோடு மாவட்டத்தில் 523 பள்ளிகளில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 260 சிறுவர்கள்  தடுப்பூசி போட தகுதியானவர்கள். ஒவ்வொரு நாளும் அந்தந்த பள்ளிகளில் மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

  இந்நிலையில் கொரோனா தினசரி பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் முதற்கட்டமாக 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வரும் 31-ந் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

  இந்நிலையில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் கொரோனா தாக்கம் காரணமாக வரும் 31-ந் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அவர்களும் ஆன்லைன் மூலம் வகுப்புகளில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  பள்ளி விடுமுறை காரணமாக  15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு போடப்படும்  தடுப்பூசி பணி பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டது. 

  இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்கள் இன்று முதல் அவர்கள் வசிக்கும் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் சென்று அடையாள அட்டையை காட்டி தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.
  Next Story
  ×