என் மலர்
உள்ளூர் செய்திகள்

பவானி கூடுதுறை, கொடிவேரி, பவானிசாகர் வெறிச்சோடியது
2-வது வாரமாக முழு ஊரடங்கு - பவானி கூடுதுறை, கொடிவேரி, பவானிசாகர் வெறிச்சோடியது
2 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா தொற்று காரணமாக பவானி கூடுதுறையில் பொதுமக்கள் புனித நீராட அடிக்கடி தடை விதிக்கப்பட்டது.
பவானி:
ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது. ஆண்டு தோறும் ஏராளமான பொதுமக்கள் இங்கு வந்து புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து சங்கமேஸ்வரரை வழிபட்டு செல்வார்கள்.
மேலும் அம்மாவாசை, வெள்ளிக்கிழமை உள்பட முக்கிய தினங்களில் ஏராளமான பொதுமக்கள் பவானி கூடுதுறையில் புனித நீராடுவார்கள்.
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா தொற்று காரணமாக பவானி கூடுதுறையில் பொதுமக்கள் புனித நீராட அடிக்கடி தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது குறைந்த அளவில் பரிகாரம் செய்யவும், புனித நீராடவும் அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் கடந்த 6-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழுஊரடங்கும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதே போல் இன்று 2-வது வாரமாக முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதையடுத்து பவானிகூடு துறையில் இன்று பொதுமக்கள் புனித நீராட, பரிகாரம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து புனித நீராட செல்லும் பாதையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதேபோல் கொடிவேரி, பவானிசாகர் அணை பூங்காவுக்கும் இன்று தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கும் சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
Next Story