என் மலர்tooltip icon

    ஈரோடு

    • ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் நேற்று இரவு 11 மணி முதலே ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டனர்.
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பொது மக்களுடன் இணைந்து புத்தாண்டு வரவேற்கும் வகையில் கேக் வெட்டி கொண்டாடினார்.

    ஈரோடு:

    2023-ம் ஆண்டு புத்தாண்டை மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். இதற்காக ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் நேற்று இரவு 11 மணி முதலே ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டனர். நேரம் செல்ல செல்ல மக்களின் கூட்டம் அதிகரித்தது.

    இளைஞர்கள் தங்களது நண்பர்களுடன் வந்திருந்தனர். சரியாக நள்ளிரவு 12 மணி அளவில் புத்தாண்டு பிறந்ததும் குடியிருந்த பொதுமக்கள் உற்சாகம் மிகுதியில் ஹேப்பி நியூ இயர் என்று விண்ணை தொடும் அளவுக்கு கோஷம் எழுப்பினர். ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில் டவுன் டி.எஸ்.பி.ஆனந்த குமார் மேற்பார்வையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்கள் குறித்து போலீசார் கண்காணி த்தனர்.

    அப்போது சில இளைஞர்கள் மது அருந்து கொண்டு உற்சாகமிகுதியில் கத்திக்கொண்டு சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களுக்கு போலீசார் இவ்வாறு மது அருந்தி செல்வது தவறு என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    இன்னும் சில இளைஞர்கள் அதிக அளவில் மதுபோதையில் இருந்ததால் அவர்களது வாகனங்களை வாங்கிக் கொண்டு அவர்களது உறவினர்களுக்கு தகவல் கொடுத்து பின்னர் அந்த வாகனங்களை திரும்ப ஒப்படைத்தனர்.

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பொது மக்களுடன் இணைந்து புத்தாண்டு வரவேற்கும் வகையில் கேக் வெட்டி கொண்டாடினார்.

    ஈரோடு காளைமாட்டு சிலை, ரெயில் நிலையம், பஸ் நிலையம், ஸ்வஸ்திக் கார்னர், மணிக்கூண்டு ஜி.எச். ரவுண்டானா , மக்கள் அதிக கூடும் இடங்கள், வழிபாட்டு தளங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    புத்தாண்டையொட்டி இன்று அதிகாலையிலேயே கோவில் நடைகள் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மக்கள் புத்தாடைகள் அணிந்து சாமியை வழிபட்டனர்.

    புத்தாண்டையொட்டி ஈரோடு ரெயில் நிலையத்தில் கடந்த 2 நாட்களாக பயணிகள் கூட்டம் அலை மோதி காணப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு ரெயில்வே போலீசார் பயணிகளின் உடைமை களை தீவிர பரிசோதனை செய்து அதன் பிறகு உள்ளே அனுமதித்தனர்.

    மேலும் மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு சோதனையும் செய்தனர். மேலும் ரெயிலில் வந்த பயணிகள் உடைமை களையும் பரிசோதனை செய்தனர்.

    கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி, மொடக்குறிச்சி,கொடுமுடி, சத்தியமங்கலம், பெருந்துறை என மாவட்ட முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது. 

    • சம்பவத்தன்று சாந்தாமணி விஜயமங்கலம் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
    • இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள நடுப்பட்டி, புலவர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி சாந்தாமணி (வயது 55). பழனிச்சாமி கடந்த 40 வருடங்களாக விஜயமங்கலம் அருகே உள்ள கள்ளியம் புதூரில் சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர்களுக்கு 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    இந்நிலையில் சாந்தாமணிக்கு அடிக்கடி முழங்கால், மூட்டு வலி இருந்துள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். சம்பவத்தன்று சாந்தாமணி விஜயமங்கலம் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

    இந்த நிலையில் மதியம் விஜயமங்கலம் பகுதியில் உள்ள மொடவாண்டி குட்டையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் உடல் மிதப்பதாக அந்த பகுதியில் தகவல் பரவியது.

    இதனையடுத்து அங்கு வந்த பழனிச்சாமி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உடலை மேலே எடுத்துப் பார்த்தபோது அது இறந்து போன தனது மனைவி சாந்தாமணி என தெரிய வந்தது.

    பின்னர் சாந்தாமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வருடத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் போக்குவரத்து போலீசாரால் மேற்கொள்ளப்பட்டன.
    • சாலை விதி மீறல்கள் தொடர்பாக மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் 4 லட்சத்து 16 ஆயிரத்து 612 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வருடத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டு பல்வேறு தடுப்பு நடவடி க்கைகள் போக்குவரத்து போலீசாரால் மேற்கொள்ளப்பட்டன.

    குறிப்பாக சாலை விதி மீறல்கள் தொடர்பாக மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் 4 லட்சத்து 16 ஆயிரத்து 612 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதன் மூலம் ரூ.5 கோடியே 78 லட்சத்து 81 ஆயிரத்து 200 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

    இதில் 21,945 ஓட்டுநர்களின் உரிமத்தை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு அதில் 21,837 ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 2022-ம் ஆண்டு மது போதையில் வாகனம் ஓட்டியவர்கள் மீது 7,400-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. இதன் மூலம் சாலை விபத்துக்கள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

    விபத்து மற்றும் குற்ற தடுப்பு நடவடிக்கைக்காக மாவட்டம் முழுவதும் கடந்த ஆண்டு நிறுவப்பட்ட 7268 கண்காணிப்பு கேமிராக்கள் உட்பட மொத்தம் 12,923 கண்காணிப்பு கேமிராக்கள் பயன்பாட்டில் உள்ளது.

    கடந்த ஆண்டில் 39 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் மற்றும் ஒரு நபர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப் பட்டனர்.

    966 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது சிறப்பு பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சம்பந்த ப்பட்ட கோட்டாட்சியர் மூலம் நன்னடத்தைக்கான பிணைப்பத்திரம் பெறப்பட்டுள்ளது.

    மேலும் புதிதாக 51 குற்றவாளிகளை கண்காணிக்கும் பொருட்டு சரித்திர பதிவேடு தொடங்கப்பட்டு அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

    இணையதள மற்றும் சைபர் குற்றங்கள் தொடர்பாக பெறப்பட்ட மனுக்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு இணைய வழி மூலமாக மோசடி செய்து ஏமாற்றப்பட்ட ரூ.55 லட்சத்து 11 ஆயிரத்து 41 ரூபாய் பறிமுதல் செய்யப் பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    மேலும் கடந்த ஆண்டு 240 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு சிறப்பான முறையில் செயல்பட்டு காணாமல் போன 685 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டில் 3,246 பொதுமக்கள் குறை தீர்ப்பு கோரிக்கை மனு பெறப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.

    மேலும் தொடர்ந்து சட்ட ஒழுங்கை நன்முறையில் பராமரிக்கவும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் சாலை விபத்துகளை தடுக்கவும் போலீஸ் சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். 

    • பவானி ஆற்றில் பாப்பாத்தி தண்ணீரில் மூழ்கிய நிலையில் இறந்து கிடந்தார்.
    • பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்துள்ள எர நாயக்கனூரைச் சேர்ந்தவர் பாப்பாத்தி (63). இவரது கணவர் பெரியமாரநாயக்கர். இவர்களது மகன் நந்தகோபால் (46).

    பெரிய மார நாயக்கர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் உடல் நலக் குறைவால் இறந்துவிட்டார். இதனால் பாப்பாத்தி மன முடைந்த நிலையில் காணப்பட்டார்.

    இந்த நிலையில், மகன் நந்தகோபால் காலையில் எழுந்து பார்த்தபோது பாப்பாத்தியை காணவில்லை.

    சுற்றுவட்டாரப்பகுதியில் தேடியதில், பெரிய மோளபாளையம் பகுதியில் உள்ள பவானி ஆற்றில், பெண்கள் குளிக்கும் பகுதியில் பாப்பாத்தி தண்ணீரில் மூழ்கிய நிலையில் இறந்து கிடந்தார்.

    கணவர் இறந்த விரக்தியில் இருந்த பாப்பாத்தி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.இதுகுறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • விபத்தில் சிக்கி பலியான சிறுமி மகாஸ்ரீ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • புத்தாண்டில் விபத்தில் சிக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த சென்னபட்டி, முரளி காலனி பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார். கூலி தொழிலாளி. இவரது மனைவி கோகிலா. இவர்களுக்கு மகாஸ்ரீ (3) என்ற மகள் இருந்தார்.

    இந்நிலையில் சம்பத்குமார் தனது உறவினர்களுடன் மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்ல முடிவு செய்திருந்தார்.

    அதன்படி இன்று அதிகாலை 4.30 மணியளவில் சம்பத்குமார் தனது மகள், மனைவி, உறவினர்களுடன் ஒரு வாடகை வேனில் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு கிளம்பி சென்றார். வேனை சேலம் மாவட்டம் கொளத்தூர் பகுதியை சேர்ந்த கவுதம் (27) என்பவர் ஓட்டினார்.

    வேன் முரளி பிரிவு என்ற இடம் அருகே இன்று அதிகாலை 4.45 மணி அளவில் வந்தது. அப்போது திடீரென வேன் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அந்த பகுதியில் சாலை ஓரமாக இருந்த ஒரு மரத்தின் மீது பயங்கரமாக மோதி கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் சிறுமி மகாஸ்ரீ சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். வேனில் பயணம் செய்த சம்பத்குமார் அவரது மனைவி உள்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விபத்தை நேரில் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து அந்தியூர் போலீசாருக்கும், வெள்ளி திருப்பூர் போலீசருக்கும், அந்தியூர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கிய 10 பேரை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்தில் சிக்கி பலியான சிறுமி மகாஸ்ரீ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புத்தாண்டில் விபத்தில் சிக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கணவன் -மனைவி இருவரும் கடந்த சில நாட்களாகவே மன வேதனையுடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள வெள்ளோடு அடுத்த கள்ளியங்காடு பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணகவுண்டர் (85). இவரது மனைவி பழனியம்மாள் (66). இவர்களது மகன் ராஜா கந்தசாமி (43).

    கணவன்-மனைவி இருவரும் கள்ளியங்காட்டு தோட்டத்தில் குடியிருந்து கொண்டு தங்களது சொந்த தோட்டத்தில் விவசாயம் செய்து வந்தனர்.

    இந்நிலையில் பழனியம்மாள் கிட்னி பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்துள்ளார். இதேபோல் கருப்பண்ணகவுண்டருக்கு காது சரியாக கேட்காமலும், கண்பார்வை குறைபாடும் இருந்து வந்துள்ளது.

    இதனால் கணவன் -மனைவி இருவரும் கடந்த சில நாட்களாகவே மன வேதனையுடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் கருப்பண்ணகவுண்டரும், பழனியம்மாளும் தற்கொலை செய்ய முடிவு எடுத்து வீட்டில் இருந்த தென்னை மர வண்டுகளுக்கு வைக்கும் சல்பாஸ் மாத்திரையை சாப்பிட்டனர். பின்னர் சிறிது நேரத்திலேயே கணவன்- மனைவி இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

    இது குறித்து அவரது மகன் ராஜா கந்தசாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தாய், தந்தை உடலை பார்த்து கதறி அழுதார்.

    இதுகுறித்து வெள்ளோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வரைந்து வந்து விசாரணை நடத்தினர். வயது முதிர்வு காரணமாக கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு என்ன பிரச்சனை என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பவானிசாகர் அணையில் இருந்து காளிங்கராயன் வாய்க்கால் 2-ம் பருவ பாசனத்துக்கு நாளை முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.
    • நாள் ஒன்றுக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து காளிங்கராயன் வாய்க்கால் 2-ம் பருவ பாசனத்துக்கு நாளை முதல் (ஞாயிற்றுக்கிழமை) ஏப்ரல் மாதம் 30-ந் தேதி வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

    மொத்தம் 5,184 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் நாள் ஒன்றுக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதன் மூலம் பவானி, ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி தாலுகாவில் 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சிகிச்சையில் இருந்த அந்த நபர் சிகிச்சை பலனின்றி பரிதாமாக இறந்தார்.
    • இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு காளைமாட்டு சிலை அருகே பேக்கரி கடை முன்பு சம்பவத்தன்று சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மயங்கிய நிலையில் இருந்து உள்ளார்.

    இது குறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 108 ஆம்புலன்சில் வந்த மருத்துவக்குழுவினர் அந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சையில் இருந்த அந்த நபர் சிகிச்சை பலனின்றி பரிதாமாக இறந்தார். இறந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை.

    இறந்தவர் சிவப்பு வெள்ளை நிறத்தில் கோடு போட்ட அரக்கை சட்டை, வெள்ளை ப்ளூ கலரில் கட்டம் போட்ட லுங்கி அணிந்திருந்தார்.

    அவரது வலது பக்க கால் எலும்பின் மேல் காயத் தழும்பு, இடது கால் முட்டியில் காய தழும்பும், தலை வழுக்கையாகவும், மீசை தாடியுடன் கருப்பு நிற முடிகளுடன் இருந்தார்.

    இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொள்ளையர்களை கண்டுபிடிக்க தாலுகா இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
    • கொள்ளை நடந்த இடத்தின் அருகே பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு, மூலப்பாளையம் ரைஸ் மில் சாலையை சேர்ந்தவர் முரளிகண்ணன் (35). இவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக உள்ளார். இவர் சம்பவத்தன்று இரவு வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தார்.

    அப்போது மர்மநபர்கள் இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த ரொக்கப்பணம் 1.95 லட்சம் ரூபாயை கொள்ளை அடித்தனர்.

    இவரது வீட்டுக்கு பக்கத்து வீட்டை சேர்ந்தவர் செல்வராஜ் (45). கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். இவரும் குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தார்.

    இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் பீரோவில் இருந்த 4.5 பவுன் நகை, 40 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை கொள்ளை அடித்தனர். இதற்கு அடுத்த வீட்டில் வசிப்பவர் சித்திக் அலி. இவரது வீட்டில் கொள்ளை அடிக்க முயற்சித்து தப்பிவிட்டனர்.

    இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாயும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது.

    வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து கொள்ளையர்களை கண்டுபிடிக்க தாலுகா இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் கொள்ளை நடந்த இடத்தின் அருகே பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
    • அணைக்கு வினாடிக்கு 814 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்ததால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு உபரி நீர் திறந்து விடப்பட்டது.

    பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில்அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதாலும் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103.98 அடியாக குறைந்தது. அணைக்கு வினாடிக்கு 814 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு 2 ஆயிரம் கன அடி, பவானி ஆற்றுக்கு 100 கன அடி, தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கனஅடி என மொத்தம் 2900 கன அடி வீதம் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. 

    • ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தலைமையில் உதவி ஆய்வாளர்கள் பல்வேறு கடைகள், நிறுவனங்களில் ஆய்வு செய்தனர்.
    • சட்ட விதிகளுக்கு மாறாக செயல்படும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உதவி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் பல்வேறு இடங்களில் எடையளவு சட்டம், குறைந்த பட்ச ஊதிய சட்டப்படி பல கடைகள், நிறுவனங்களில் ஆய்வு செய்தனர்.

    எல்.பி.ஜி. கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் 20 கிடங்குகளில் ஆய்வு செய்ததில் 3 நிறுவ னங்களின் முரண்பாடுகள் கண்டறியப்பட்டது. 19 பேக்கரிகளில் ஆய்வு செய்ததில் 1 நிறுவனத்திலும், பால், பால் பொருட்கள் விற்பனை செய்யும் 11 நிறுவன ஆய்வில் ஒரு இடத்திலும் முரண்பாடு கண்டறியப்பட்டது.

    பால் வழங்கும்போது அளவு குறைவு குறித்து 29 இடங்களில் நடந்த ஆய்வில் 11 இடங்களில் முத்திரையிடாமல் பயன்படுத்தியது தெரியவந்தது. பொட்டல பொருட்கள் விதிப்படி 17 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 2 இடத்திலும், சிகரெட் லைட்டர் விற்பனை செய்யும் 12 நிறுவனங்களில் நடந்த ஆய்வில் 1 இடத்தில் உரிய அனுமதியின்றி விற்பனை செய்ததால் பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    குறைந்த பட்ச ஊதிய சட்டப்படி 45 கடைகள், வர்த்தக நிறுவனங்களில் நடந்த ஆய்வில் தொழிலாளர்களுக்கு குறந்த பட்ச ஊதியம் வழங்காத 7 நிறுவனங்கள் மீது தொழிலாளர் இணை ஆணையர் முன்னிலையில் கேட்பு மனு தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ள்ளது.

    இதுபோன்ற சட்ட விதிகளுக்கு மாறாக செயல்படும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என உதவி ஆணையர் திருஞானசம்பந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • ஈரோடு மாவட்ட காவல்துறையினர் சிறந்த முறையில் பணியாற்றி கொலை, கொள்ளை வழக்குகள் வெகுவாக குறையும் வகையில் திறம்பட பணியாற்றியுள்ளனர்.
    • போலீஸ் நிலையத்திற்கு வரும் மனுக்கள் மீது விரைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் 2022-ம் ஆண்டு ஈரோடு மாவட்ட காவல்துறையினர் சிறந்த முறையில் பணியாற்றி கடந்த ஆண்டு காட்டிலும் கொலை, கொள்ளை வழக்குகள் வெகுவாக குறையும் வகையில் திறம்பட பணியாற்றியுள்ளனர்.

    குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு காவல் நிலையங்களில் ரோந்து பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. ரவுடிகள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. போலீஸ் நிலையத்திற்கு வரும் மனுக்கள் மீது விரைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இதன் விளைவாக கடந்த ஆண்டு 40 கொலைகள் பதிவான நிலையில் இந்த ஆண்டு 21 கொலைகள் மட்டுமே பதிவானது. இது கடந்த ஆண்டை விட 50 சதவீதம் குறைவாகும்.

    இந்த ஆண்டு பதிவான அனைத்து கொலைகளிலும் 100 சதவீதம் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு 38 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.

    குற்ற வழக்குகளை கண்டுபிடிக்க தனி படைகள் அமைக்கப்பட்டு 377 குற்ற வழக்குகள் கண்டுபிடி க்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 101 வாகனங்கள் மற்றும் 228 பவுன் நகைகள் உள்பட ரூ.2 கோடியே 24,87,957 மதிப்புள்ள களவு சொத்துக்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

    சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட 5,142 நபர்கள் மீது உரிய கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 315 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

    தீவிர கஞ்சா தடுப்பு வேட்டை மூலம் 244 கஞ்ச வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 396 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ. 23 லட்சத்து 93 ஆயிரத்து 948 மதிப்புள்ள 163 கிலோ கஞ்சா, 3,008 போதை மாத்திரைகள் மற்றும் 196 போதை சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டது. 79 கஞ்சா குற்றவாளிகள் வாங்கி கணக்குகள் முடக்கப் பட்டுள்ளன.

    தடை செய்யப்பட்ட புகையிலை விற்றதாக 419 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 465 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 12,017 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 17 குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

    அரசு மதுபானங்கள் வெளிநாட்டு மதுபானங்கள் கள்ள சந்தையில் பதுக்கியும் மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக 4,281 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4,368 நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 48 ஆயிரம் மது பாட்டில்கள், 52 லிட்டர் சாராயம் மற்றும் 745 லிட்டர் சாராய ஊரல் மற்றும் 107 லிட்டர் கள்ளும், 562 வெளிநாட்டு மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவை உரிய முறையில் அழிக்கப்பட்டன.

    மது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 138 இருக்கரவாகனம், 3 மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு அவை சட்ட விதிகளுக்கு உட்பட்டு ஏலம் விடப்பட்டது. இதன் மூலம் ரூ.63,5,744 தொகை பெறப்பட்டு அது அரசுடைமை ஆக்கப்பட்டது.

    மேலும் 14 மணல் திருட்டு வழக்குகளில் 19 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 34 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 115 சூதாட்டம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 667 நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.14,41,275 பறிமுதல் செய்ய ப்பட்டு நீதிமன்ற ங்களில் ஒப்படைக்கப் பட்டுள்ளது.

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பொருட்டு மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் கிராமங்களில் காவல்துறை மூலம் 3,509 விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    விழிப்புணர்வு காரணமாக 90 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 169 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

    இந்த ஆண்டு நீதிம ன்றத்தில் விசாரிக்கப்பட்ட 25 போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெறப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    ×