ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் சாவு

சிகிச்சையில் இருந்த அந்த நபர் சிகிச்சை பலனின்றி பரிதாமாக இறந்தார்.இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் சாவு
Published on

ஈரோடு:

ஈரோடு காளைமாட்டு சிலை அருகே பேக்கரி கடை முன்பு சம்பவத்தன்று சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மயங்கிய நிலையில் இருந்து உள்ளார்.

இது குறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 108 ஆம்புலன்சில் வந்த மருத்துவக்குழுவினர் அந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சையில் இருந்த அந்த நபர் சிகிச்சை பலனின்றி பரிதாமாக இறந்தார். இறந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை.

இறந்தவர் சிவப்பு வெள்ளை நிறத்தில் கோடு போட்ட அரக்கை சட்டை, வெள்ளை ப்ளூ கலரில் கட்டம் போட்ட லுங்கி அணிந்திருந்தார்.

அவரது வலது பக்க கால் எலும்பின் மேல் காயத் தழும்பு, இடது கால் முட்டியில் காய தழும்பும், தலை வழுக்கையாகவும், மீசை தாடியுடன் கருப்பு நிற முடிகளுடன் இருந்தார்.

இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com