search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "violating road rules"

    • ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வருடத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் போக்குவரத்து போலீசாரால் மேற்கொள்ளப்பட்டன.
    • சாலை விதி மீறல்கள் தொடர்பாக மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் 4 லட்சத்து 16 ஆயிரத்து 612 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வருடத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டு பல்வேறு தடுப்பு நடவடி க்கைகள் போக்குவரத்து போலீசாரால் மேற்கொள்ளப்பட்டன.

    குறிப்பாக சாலை விதி மீறல்கள் தொடர்பாக மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் 4 லட்சத்து 16 ஆயிரத்து 612 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதன் மூலம் ரூ.5 கோடியே 78 லட்சத்து 81 ஆயிரத்து 200 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

    இதில் 21,945 ஓட்டுநர்களின் உரிமத்தை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு அதில் 21,837 ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 2022-ம் ஆண்டு மது போதையில் வாகனம் ஓட்டியவர்கள் மீது 7,400-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. இதன் மூலம் சாலை விபத்துக்கள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

    விபத்து மற்றும் குற்ற தடுப்பு நடவடிக்கைக்காக மாவட்டம் முழுவதும் கடந்த ஆண்டு நிறுவப்பட்ட 7268 கண்காணிப்பு கேமிராக்கள் உட்பட மொத்தம் 12,923 கண்காணிப்பு கேமிராக்கள் பயன்பாட்டில் உள்ளது.

    கடந்த ஆண்டில் 39 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் மற்றும் ஒரு நபர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப் பட்டனர்.

    966 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது சிறப்பு பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சம்பந்த ப்பட்ட கோட்டாட்சியர் மூலம் நன்னடத்தைக்கான பிணைப்பத்திரம் பெறப்பட்டுள்ளது.

    மேலும் புதிதாக 51 குற்றவாளிகளை கண்காணிக்கும் பொருட்டு சரித்திர பதிவேடு தொடங்கப்பட்டு அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

    இணையதள மற்றும் சைபர் குற்றங்கள் தொடர்பாக பெறப்பட்ட மனுக்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு இணைய வழி மூலமாக மோசடி செய்து ஏமாற்றப்பட்ட ரூ.55 லட்சத்து 11 ஆயிரத்து 41 ரூபாய் பறிமுதல் செய்யப் பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    மேலும் கடந்த ஆண்டு 240 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு சிறப்பான முறையில் செயல்பட்டு காணாமல் போன 685 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டில் 3,246 பொதுமக்கள் குறை தீர்ப்பு கோரிக்கை மனு பெறப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.

    மேலும் தொடர்ந்து சட்ட ஒழுங்கை நன்முறையில் பராமரிக்கவும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் சாலை விபத்துகளை தடுக்கவும் போலீஸ் சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். 

    ×