பவானி ஆற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை

பவானி ஆற்றில் பாப்பாத்தி தண்ணீரில் மூழ்கிய நிலையில் இறந்து கிடந்தார்.பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பவானி ஆற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்துள்ள எர நாயக்கனூரைச் சேர்ந்தவர் பாப்பாத்தி (63). இவரது கணவர் பெரியமாரநாயக்கர். இவர்களது மகன் நந்தகோபால் (46).

பெரிய மார நாயக்கர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் உடல் நலக் குறைவால் இறந்துவிட்டார். இதனால் பாப்பாத்தி மன முடைந்த நிலையில் காணப்பட்டார்.

இந்த நிலையில், மகன் நந்தகோபால் காலையில் எழுந்து பார்த்தபோது பாப்பாத்தியை காணவில்லை.

சுற்றுவட்டாரப்பகுதியில் தேடியதில், பெரிய மோளபாளையம் பகுதியில் உள்ள பவானி ஆற்றில், பெண்கள் குளிக்கும் பகுதியில் பாப்பாத்தி தண்ணீரில் மூழ்கிய நிலையில் இறந்து கிடந்தார்.

கணவர் இறந்த விரக்தியில் இருந்த பாப்பாத்தி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.இதுகுறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com