என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னிமலை அருகே விஷ மாத்திரை தின்று கணவன்-மனைவி தற்கொலை
    X

    சென்னிமலை அருகே விஷ மாத்திரை தின்று கணவன்-மனைவி தற்கொலை

    • கணவன் -மனைவி இருவரும் கடந்த சில நாட்களாகவே மன வேதனையுடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள வெள்ளோடு அடுத்த கள்ளியங்காடு பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணகவுண்டர் (85). இவரது மனைவி பழனியம்மாள் (66). இவர்களது மகன் ராஜா கந்தசாமி (43).

    கணவன்-மனைவி இருவரும் கள்ளியங்காட்டு தோட்டத்தில் குடியிருந்து கொண்டு தங்களது சொந்த தோட்டத்தில் விவசாயம் செய்து வந்தனர்.

    இந்நிலையில் பழனியம்மாள் கிட்னி பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்துள்ளார். இதேபோல் கருப்பண்ணகவுண்டருக்கு காது சரியாக கேட்காமலும், கண்பார்வை குறைபாடும் இருந்து வந்துள்ளது.

    இதனால் கணவன் -மனைவி இருவரும் கடந்த சில நாட்களாகவே மன வேதனையுடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் கருப்பண்ணகவுண்டரும், பழனியம்மாளும் தற்கொலை செய்ய முடிவு எடுத்து வீட்டில் இருந்த தென்னை மர வண்டுகளுக்கு வைக்கும் சல்பாஸ் மாத்திரையை சாப்பிட்டனர். பின்னர் சிறிது நேரத்திலேயே கணவன்- மனைவி இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

    இது குறித்து அவரது மகன் ராஜா கந்தசாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தாய், தந்தை உடலை பார்த்து கதறி அழுதார்.

    இதுகுறித்து வெள்ளோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வரைந்து வந்து விசாரணை நடத்தினர். வயது முதிர்வு காரணமாக கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு என்ன பிரச்சனை என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×