என் மலர்
ஈரோடு
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி தேர்தல் நடத்தைகள் அமலில் உள்ளது.
- வேட்பு மனு தாக்கலுக்கு முன்னதாக துப்பாக்கிகளை பெற போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி தேர்தல் நடத்தைகள் அமலில் உள்ளது. தேர்தலை அமைதியாகவும், நியாயமான முறையில் நடத்திட போலீசார் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருப்பவர்கள் துப்பாக்கி உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உரிமம் பெற்ற துப்பாக்கிகள் (பிஸ்டல்) 110, இரட்டை குழல் துப்பாக்கி 100, ஒற்றை குழல் மற்றும் ரைபிள் துப்பாக்கி 85 என மொத்தம் 295 துப்பாக்கிகள் உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் உத்தரவிட்டிருந்தார். இதனால் வேட்பு மனு தாக்கலுக்கு முன்னதாக துப்பாக்கிகளை பெற போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
துப்பாக்கிகளை அந்தந்த பகுதி போலீஸ் நிலையங்களிலோ அல்லது தனியார் ஆயுதக்கிடங்கிலோ ஒப்படைத்து ரசீது பெற்றுக்கொள்ளலாம். தேர்தல் நடத்தை விதிமுறை நிறைவுக்கு பின் துப்பாக்கிகளை உரிய ரசீது காண்பித்து பெற்றுக் கொள்ளலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
தற்போது 10 சதவீதம் பேர் துப்பாக்கியை ஒப்படைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
- 238 வாக்குசாவடிகளில் 32 வாக்குசாவடிகள் பதற்றமானவை என கண்டறிப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- மத்திய அரசு ஊழியர்கள் தேர்தல் நுண்பார்வையாளராக நியமிக்கப்படுவார்கள்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரம் வாக்காளர்கள் கொண்ட இத்தொகுதியில் 52 அமைவிடங்களில் 238 வாக்குசாவடிகள் அமைக்கப்பட உள்ளது.
இதற்காக 500 வாக்குபதிவு எந்திரங்கள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் தெரிந்து கொள்ளும் வசதி கொண்ட விவிபேடு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 238 வாக்குசாவடிகளில் 32 வாக்குசாவடிகள் பதற்றமானவை என கண்டறிப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாக்குசாவடி அமைந்துள்ள இடம், கடந்த காலத்தில் வாக்குபதிவின் போது எழுந்த புகார், வாக்காளர்கள் எண்ணிக்கை உள்ளிட்டவை களை கருத்தில் கொண்டு பதற்றமான வாக்கு சாவடிகள் கண்டறிப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். இதில் பெரும்பாலான வாக்குசாவடிகள் அதாவது 15 வாக்குசாவடிகள் கருங்கல்பாளையம் போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது.
இரண்டாவது இடத்தில் ஈரோடு டவுன் போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட 13 இடங்களும், மற்றவை ஈரோடு வீரப்பன் சத்திரம் மற்றும் ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் அமைந்துள்ளதாக அதிகாரிகள் கூறினர். பதற்றமான வாக்குசாவடிகளில் மத்திய பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும், வாக்கு சாவடியில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு நடவடிக்கைகள் பதிவு செய்யப்படும். மேலும் மத்திய அரசு ஊழியர்கள் தேர்தல் நுண்பார்வையாளராக நியமிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
- இடைத்தேர்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படையினர் நேற்று முதல் கிழக்கு தொகுதி முழுவதும் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
- கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் பறக்கும் படையினர் வாகனங்களை தீவிர சோதனை நடத்தினர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.
இந்நிலையில் வாக்காளர்களுக்கு பணம் பரிசுப் பொருட்கள் எடுத்து செல்வதை தடுக்கும் வகையில் 3 பறக்கும் படைகள், 3 நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் தலா 3 அதிகாரிகளும், ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 3 போலீசார், ஒரு வீடியோ கிராபர் பணியில் இருப்பார்கள்.
இந்த குழுவினர் சுழற்சி முறையில் 24 மணி நேர முறையில் பணியில் இருப்பார்கள். இதில் முதல் குழுவில் பறக்கும் படை அதிகாரிகளாக சையது முஸ்தபா, பழனிச்சாமி, அருள்மொழிவர்மன், 2-வது குழுவில் கோபால், அசோக்குமார், இளங்கோ, 3-வது குழுவில் சந்திரசேகரன், செந்தில்குமார், சண்முக சுந்தரம் ஆகியோர் உள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் உள்ள அதிகாரிகள் தனித்தனி குழுவாக செயல்படுவார்கள்.
இதேபோல் 9 அதிகாரிகள் கொண்ட 3 நிலை கண்காணிப்புக்கு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அவர்களும் வெவ்வேறு இடங்களில் கண்காணிப்பு பணிகள் சோதனைகள் மேற்கொள்வார்கள்.
இடைத்தேர்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படையினர் நேற்று முதல் கிழக்கு தொகுதி முழுவதும் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரை, கோண வாய்க்கால், அக்ரஹாரம் போன்ற பகுதியில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த கார்கள், மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோக்கள் போன்றவற்றை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை விடிய விடிய நடைபெற்றது. இன்று காலை கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் பறக்கும் படையினர் வாகனங்களை தீவிர சோதனை நடத்தினர். காரில் செல்பவர்கள் விவரத்தையும் சேகரித்தனர்.
- கவுந்தப்பாடி தென்காட்டுபாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.
- பவானி வட்டார கல்வி அலுவலர் கேசவன் கவுந்தப்பாடி போலீஸ் நிலையத்தில் ஆசிரியை மீது புகார் அளித்தார்.
கவுந்தப்பாடி:
ஈரோடு மாவட்டம் பவானி கல்வி வட்டத்துக்கு உட்பட்ட கவுந்தப்பாடி தென்காட்டுபாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.
இங்கு கடந்த 17 ஆண்டுகளாக கவுந்தப்பாடி காந்திபுரத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரது மனைவி இயேசு மரியா ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 1996 முதல் தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணி செய்து வருகிறார்.
கடந்த 2007-ம் ஆண்டு முதல் தென்காட்டுபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்து வருகிறார். இவர் 1992-ல் பட்டய படிப்பு படிக்கும்போது சான்றிதழை திருத்தி பணியில் சேர்ந்து உள்ளதாக தெரிகிறது.
இது குறித்து துறை ரீதியாக கடந்த 2020-ம் ஆண்டு சான்றிதழ் உண்மைத்தன்மை சரிபார்க்கும் பணி தொடங்கியது. இதில் பட்டய படிப்பு கல்வி சான்று போலியானது என கண்டறியப்பட்டது.
இது பற்றி பவானி வட்டார கல்வி அலுவலர் கேசவன் கவுந்தப்பாடி போலீஸ் நிலையத்தில் ஆசிரியை இயேசு மரியா மீது புகார் அளித்தார். இதுகுறித்து கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷ், சப்-இன்ஸ்பெக்டர் சின்னராஜ் ஆகியோர் விசாரணை நடத்தி ஆசிரியை இயேசு மரியா மீது மோசடி உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இது தொடர்பாக கல்வி அதிகாரிகளும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தம்பி மகன் இறந்த துக்கம் தாளாமல் மோகன்குமார் மதுவில் விஷம் கலந்து குடித்தார்.
- இது குறித்து கோபி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோபி:
ஈரோடு மாவட்டம், கோபியை அடுத்துள்ள கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் கங்காதரன் (52). இவரது சகோதரர் மோகன் குமார் (60). பெயிண்டிங் தொழிலாளி.
கங்காதரனின் மகன் நவீன் கடந்த 4-ந் தேதி விபத்தில் உயிரிழந்தார். இதற்கான அவரது 16-ம் நாள் காரியம் நேற்று நடை பெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த மோகன்குமார் மிகுவும் துக்கத்துடன் காணப்பட்டார்.
இந்த நிலையில், வீட்டுக்கு செல்வதாக கூறிச் சென்ற மோகன்குமார் கோபி, குப்பைமேடு டாஸ்மாக் அருகே நேற்று மதியம் வாந்தி எடுத்த நிலையில் கிடந்துள்ளார்.
அப்பகுதியினர் அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசேதானை செய்து மோகன்குமார் ஏற்கனவே இறந்து விட்ட தாகத் தெரிவித்தனர்.
தம்பி மகன் இறந்த துக்கம் தாளாமல் மோகன்குமார் மதுவில் விஷம்கலந்து குடித்து உயிரிழந்து விட்டதாக விசாரணையில் தெரிய வந்தது.
இது குறித்து, கோபி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- ஈரோடு ரெயில் நிலையம் அருகே பெண் ஒருவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு படுத்து கிடந்தார்.
- அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
ஈரோடு:
ஈரோடு ரெயில் நிலையம் அருகே, சுமார் 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு படுத்து கிடந்தார்.
இதை கண்ட அப்பகுதியில் உள்ளவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்சு மூலமாக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இறந்த பெண் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என தெரியவில்லை. கடந்த சில நாட்களாக ரெயில் நிலையம் பகுதியில் சுற்றி திரிந்ததாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கத்தியை எடுத்து பெண்ணின் தோள்பட்டை, விரல்கள் உள்பட பல்வேறு இடங்களில் சரமாரியாக குத்தினார்.
- பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷ் மற்றும் காந்தன் ஆகியோரை கைது செய்தனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பொதுப் பணித்துறை பணியாளர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் நஞ்சுண்டப்பன். இவரது மகன் சந்தோஷ் (வயது 32). இரு சக்கர வாகன மெக்கானிக்.
பவானிசாகர் பகுதியை சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் தற்காலிக திடக்கழிவு மேலாண்மை அலுவலராக பணி புரிந்து வருகிறார். அந்த பெண் மற்றும் சந்தோஷ் ஆகிய 2 பேரும் கடந்த 2 ஆண்டுகளாக காலித்து வந்ததாக தெரி கிறது.
இந்த நிலையில் சந்தோஷ் காதலித்த அந்த பெண் வேறு ஒருவரை காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுபற்றி கேள்பட்டதும் ஆத்திரமடைந்த சந்தோஷ் தனது நண்பர் பவானிசாகர் இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாமை சேர்ந்த காந்தன் (38) என்பவருடன் தான் காதலித்த பெண் வேலை செய்யும் அலுவலகத் துக்கு சென்றார்.
அங்கு சந்தோசுக்கும் அந்த பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் தகராறில் ஈடுபட்டனர். அப்போது சந்தோஷ் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த பெண்ணின் கன்ன, தோள்பட்டை, விரல்கள் உள்பட பல்வேறு இடங்களில் சரமாரியாக குத்தினார்.
இதில் அவர் படுகாயம் அடைந்து அலறி துடித்தார். அப்போது அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் வந்து பார்த்தனர்.
இதையடுத்து படுகாயம் அடைந்த அந்த பெண்ணை மீட்டு சத்திய மங்கலம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷ் மற்றும் காந்தன் ஆகியோரை கைது செய்தனர்.
இதையடுத்து அவர்கள் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபிசெட்டிபாளையம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
- வீட்டில் தனியாக இருந்த முகமது ராஜா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு சூரம்பட்டி வலசு பகுதியை சேர்ந்தவர் மஸ்தான். இவரது மகன் முகமது ராஜா (18). இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் விபத்து ஏற்பட்டு தலையில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
விபத்து ஏற்பட்டதில் இருந்து அவருக்கு அடிக்கடி தலைவலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த முகமது ராஜா திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து முகமது ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவ–மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மளிகை கடையில் சோதனையிட்டபோது புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
- புளியம்பட்டி போலீசார் பாபு மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
பு.புளியம்பட்டி:
கேரள மாநிலம், திருச்சூர் அருகே உள்ள குளிங்கரா பகுதியை சேர்ந்தவர் பாபு (53). இவர் தற்போது ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டி சத்தி ரோட்டில் உள்ள புங்கம்பள்ளி பகுதியில் வசித்து வருகிறார்.
மேலும் அங்குள்ள அரசு தொடக்க பள்ளிக்கு அருகில் மளிகை கடை வைத்துள்ளார்.
இந்த நிலையில் பாபு தனது மளிகை கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக புளியம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் பாபுவின் மளிகை கடையில் சோதனையிட்டனர்.
அப்போது அங்கு அரசால் தடைசெய்யப்பட்ட 10.5 கிலோ எடையிலான ரூ.8,800 மதிப்பிலான புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து புளியம்பட்டி போலீசார் பாபு மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மேலும் அவர் அளித்த தகவலின் பேரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பாபுவுக்கு விற்பனைக்காக வினியோகம் செய்த புளியம்பட்டி சேரன் வீதியை சேர்ந்த வேலுசாமி (68) என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- மாடுகளை வாகனங்களில் ஏற்றி செல்வது பற்றி அந்தியூர் போலீசார் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- அதிக அளவில் ஏற்றினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் வாரம் தோறும் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம்.
அந்த மாடுகளை வாங்குவதற்கு ஈரோடு, கோவை, தர்மபுரி, சேலம், கோபி மற்றும் கேரளா மாநிலத்திலிருந்தும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வருவார்கள்.
இது மட்டுமன்றி அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளான தவிட்டுப்பாளையம், வெள்ளியம்பாளையம், புதுக்காடு, காந்திநகர், எண்ணமங்கலம், செல்லம்பாளையம், அண்ணா மடுவு, காட்டூர், கந்தம்பாளையம், பச்சாபாளையம், உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் தங்கள் மாடுகளை விற்பனைக்காக வாகனங்களில் ஏற்றி கொண்டு வருவார்கள்.
அதேபோல் சந்தையில் வாங்கிய மாடுகளை மினி டெம்போ மூலம் ஏற்றி செல்வார்கள்.
இது தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவுபடி மாடுகளை வாகனங்களில் ஏற்றி செல்வது பற்றி அந்தியூர் போலீசார் சார்பில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி தலைமையிலான போலீசார் வியாபாரிகள், விவசாயிகள் மத்தியில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அதில் வாகனங்களில் அதிக அளவில் மாடுகளை ஏற்றி அதனை துன்புறுத்தக் கூடாது. மினி ஆட்டோ என்றால் ஒரு மாட்டை மட்டும் ஏற்ற வேண்டும். அதிக அளவில் ஏற்றினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
- தைப்பூச தேர்த்திருவிழாவை நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
சென்னிமலை:
சென்னிமலை முருகன் கோவிலில் வருகிற 28-ந் தேதி தைப்பூச தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் 5-ந் தேதி காலையில் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், 9-ந் தேதி இரவு மகா தரிசனமும் நடைபெறுகிறது. இதுதவிர பல்வேறு நிகழ்ச்சிகள் தினமும் நடைபெறும்.
தைப்பூச தேரோட்டத்தின் போது ஏராளமான பக்தர்கள் சென்னிமலை முருகன் கோவிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக தைப்பூச தேர்த்திருவிழாவை நடத்துவது குறித்த அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பெருந்துறை தாசில்தார் சிவசங்கர் தலைமை தாங்கினார். சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக், போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், கோவில் ஆய்வாளர் ரவிக்குமார், செயல் அலுவலர் ஏ.கே.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தைப்பூச தேரோட்டம் நடைபெறும் நாளான வருகிற 5-ந் தேதி மற்றும் 6-ந் தேதி ஆகிய 2 நாட்களும் மலைப்பாதை வழியாக முருகன் கோவிலுக்கு செல்ல கார்கள் உள்ளிட்ட கனரக வாகனங்களை அனுமதிப்பதில்லை என்றும், அந்த சமயத்தில் கூடுதல் பஸ்கள் ஏற்பாடு செய்து அதில் பக்தர்களை அழைத்து செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
மேலும் திருவிழா காலங்களில் மலைக்கோவில் மற்றும் அடிவாரத்தில் மருத்துவ முகாம்கள் அமைப்பது, பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் பார்த்திபன், பேரூராட்சி துணை தலைவர் சவுந்தர்ராஜன் மற்றும் உள்ளாட்சி, மின்சா ரம், சுகாதாரம், உள்ளிட்ட அனைத்து துறைகளை சேர்ந்த அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- தாளவாடியில் இருந்து கர்நாடகா நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.
- காரை நிறுத்தி சோதனை செய்த போது ரேஷன் அரிசி கடத்தி செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் இருந்து கர்நாடகாவுக்கு சமீப காலமாக ரேஷன் அரிசி கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது.
இதனை தடுக்க ஈரோடு மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் கூடுதல் காவல்துறை இயக்குனர் அருண் உத்தரவின் பெயரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பன்னீர் செல்வம் தலைமையில் போலீசார் மாவட்டம் முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே மல்லன்குழி என்ற பகுதியில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் மற்றும் தாளவாடி போலீசார் ஒன்றிணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது தாளவாடியில் இருந்து கர்நாடகா நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது காரில் 200 கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து காரில் இருந்த நபரிடம் இது குறித்து விசாரித்த போது அவர் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் கோட்டப் பள்ளி, உப்பார்வீதியை சேர்ந்த உமேஷா (23) என்பதும் கூடுதல் விலைக்கு விற்பதற்காக ரேஷன் அரிசியை கடத்தி சென்றதை ஒப்புக் கொண்டார்.
இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கார் மற்றும் 200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்க ப்பட்டார்.






