என் மலர்
நீங்கள் தேடியது "transportation of"
- மாடுகளை வாகனங்களில் ஏற்றி செல்வது பற்றி அந்தியூர் போலீசார் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- அதிக அளவில் ஏற்றினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் வாரம் தோறும் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம்.
அந்த மாடுகளை வாங்குவதற்கு ஈரோடு, கோவை, தர்மபுரி, சேலம், கோபி மற்றும் கேரளா மாநிலத்திலிருந்தும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வருவார்கள்.
இது மட்டுமன்றி அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளான தவிட்டுப்பாளையம், வெள்ளியம்பாளையம், புதுக்காடு, காந்திநகர், எண்ணமங்கலம், செல்லம்பாளையம், அண்ணா மடுவு, காட்டூர், கந்தம்பாளையம், பச்சாபாளையம், உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் தங்கள் மாடுகளை விற்பனைக்காக வாகனங்களில் ஏற்றி கொண்டு வருவார்கள்.
அதேபோல் சந்தையில் வாங்கிய மாடுகளை மினி டெம்போ மூலம் ஏற்றி செல்வார்கள்.
இது தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவுபடி மாடுகளை வாகனங்களில் ஏற்றி செல்வது பற்றி அந்தியூர் போலீசார் சார்பில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி தலைமையிலான போலீசார் வியாபாரிகள், விவசாயிகள் மத்தியில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அதில் வாகனங்களில் அதிக அளவில் மாடுகளை ஏற்றி அதனை துன்புறுத்தக் கூடாது. மினி ஆட்டோ என்றால் ஒரு மாட்டை மட்டும் ஏற்ற வேண்டும். அதிக அளவில் ஏற்றினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.






