search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Critical care for"

    • கத்தியை எடுத்து பெண்ணின் தோள்பட்டை, விரல்கள் உள்பட பல்வேறு இடங்களில் சரமாரியாக குத்தினார்.
    • பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷ் மற்றும் காந்தன் ஆகியோரை கைது செய்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பொதுப் பணித்துறை பணியாளர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் நஞ்சுண்டப்பன். இவரது மகன் சந்தோஷ் (வயது 32). இரு சக்கர வாகன மெக்கானிக்.

    பவானிசாகர் பகுதியை சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் தற்காலிக திடக்கழிவு மேலாண்மை அலுவலராக பணி புரிந்து வருகிறார். அந்த பெண் மற்றும் சந்தோஷ் ஆகிய 2 பேரும் கடந்த 2 ஆண்டுகளாக காலித்து வந்ததாக தெரி கிறது.

    இந்த நிலையில் சந்தோஷ் காதலித்த அந்த பெண் வேறு ஒருவரை காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதுபற்றி கேள்பட்டதும் ஆத்திரமடைந்த சந்தோஷ் தனது நண்பர் பவானிசாகர் இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாமை சேர்ந்த காந்தன் (38) என்பவருடன் தான் காதலித்த பெண் வேலை செய்யும் அலுவலகத் துக்கு சென்றார்.

    அங்கு சந்தோசுக்கும் அந்த பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் தகராறில் ஈடுபட்டனர். அப்போது சந்தோஷ் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த பெண்ணின் கன்ன, தோள்பட்டை, விரல்கள் உள்பட பல்வேறு இடங்களில் சரமாரியாக குத்தினார்.

    இதில் அவர் படுகாயம் அடைந்து அலறி துடித்தார். அப்போது அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் வந்து பார்த்தனர்.

    இதையடுத்து படுகாயம் அடைந்த அந்த பெண்ணை மீட்டு சத்திய மங்கலம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷ் மற்றும் காந்தன் ஆகியோரை கைது செய்தனர்.

    இதையடுத்து அவர்கள் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபிசெட்டிபாளையம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ×