என் மலர்
ஈரோடு
- மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது.
- ஒரு டன் ரூ.13 ஆயிரம் என்ற விலைக்கு வாங்கி செல்கின்றனர்.
ஈரோடு:
ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர் மாவட்டங்களில் அதிக அளவில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது.
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள சேகோ ஆலைக்கு மொத்த மாக மரவள்ளி கிழங்கு வாங்கி சென்று ஜவ்வரிசி, ஸ்டார்ச் மாவு போன்றவை உற்பத்தி செய்கின்றனர்.
இவை தவிர கேரளா, புதுச்சேரி, தமிழகத்தில் பரவலாகவும் மரவள்ளி கிழங்கை உணவுக்காகவும் பயன்படுத்துகின்றனர். சிப்ஸ் உள்ளிட்ட தின்ப ண்டங்கள் தயாரி ப்புக்கும் பயன்படுத்து கின்றனர்.
நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை சீசன் காலமாக இருந்தாலும் பிற காலங்களிலும் ஓரளவு மரவள்ளி கிழங்கு வரத்தாகும். தற்போது சீசன் முடிந்து பல பகுதிகளிலும் மரவள்ளி கிழங்கு நடவு செய்து வருகின்றனர்.
இதுபற்றி தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் கே.ஆர்.சுதந்திரராசு கூறியதாவது:-
தற்போது சீசன் நிறை வடைவதால் 10 சதவீத த்துக்கும் குறைவாகவே மரவள்ளி கிழங்கு பயிர்கள் உள்ளன. அவற்றில் இருந்து அறுவடை செய்யப்படும் கிழங்கில் 70 சதவீதம் சேகோ ஆலைகள் ஒரு டன் ரூ.13 ஆயிரம் என்ற விலைக்கு வாங்கி செல்கின்றனர்.
மறுபுறம் கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் உணவு பயன்பாடு, சிப்ஸ் போன்றவை தயாரிப்புக்காக ஒரு டன் ரூ.15 ஆயிரத்துக்கு வாங்கி செல்கின்றனர்.
வரும் மாதங்களில் இதைவிட அறுவடையும், வரத்தும் குறையும். வரும் நவம்பர் மாதம் மீண்டும் சீசன் தொடங்கும்.
தற்போது 90 கிலோ எடை கொண்ட ஜவ்வரிசி மூட்டை ரூ.5,750-க்கும், 90 கிலோ எடை கொண்ட ஸ்டார்ச் மாவு மூட்டை ரூ.4,800-க்கும் விற்பனையாகிறது.
சீசன் நேரத்தில் இந்த விலை இருந்திருந்தால் விவசாயிகள் கூடுதல் பயன் பெற்றிருப்பா ர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மோட்டார் சைக்கிளை திருடி செல்வது தெரியவந்தது.
- மடக்கி பிடித்து காஞ்சிக்கோயில் போலீசில் ஒப்படைத்தனர்.
ஈரோடு, மார்ச். 31-
ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோயில் தெற்கு வீதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (57). இவர் அங்குள்ள கைத்தறி நெசவாளர் சங்கத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் பாலசுப்பிரமணியன் மதிய உணவுக்காக வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டுக்கு வெளியில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளை யாரோ இயக்கும் சத்தம் கேட்டுள்ளது.
உடனடியாக பாலசுப்பி ரமணியம் வெளியில் சென்று பார்த்தபோது ஒருவர் அவரது மோட்டார் சைக்கிளை திருடி செல்வது தெரியவந்தது.
ஆனால் மோட்டார் சைக்கிளை திருடி சென்றவர் அந்த பாதையில் அதற்கு மேல் செல்ல வழி இல்லாததால் திரும்பி வந்துள்ளார்.
அவரை பாலசுப்பிர மணியம் மற்றும் அக்கம் பக்கத்தினர் மடக்கி பிடித்து காஞ்சிக்கோயில் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணை யில் அவர் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள செம்மண் குழி மேடு பகுதியை சேர்ந்த கன்னியப்பன் (33) என்பது தெரியவந்தது.
இதையடுத்து காஞ்சிக்கோயில் போலீசார் கன்னியப்பன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் அவர் திருடி செல்ல முயன்ற மோட்டார் சைக்கிளை மீட்டு பாலசுப்பிரமணியத்திடம் ஒப்படைத்தனர்.
- உரங்கள் ரெயில் மூலம் ஈரோடு வந்தடைந்ததை ஆய்வு செய்தனர்.
- உர விற்பனை நிலையங்களில் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் நெல், கரும்பு, மஞ்சள், நிலக்கடலை, மக்காச் சோளம், எள், காய்கறிகள், வாழை, மரவள்ளி, தென்னை ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில் மாவட்டத்தில் நல்ல மழை பெய்துள்ள காரணத்தால் பயிர் சாகுபடிக்கு உகந்த சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து 301 மெட்ரிக் டன் யூரியா, 127 மெட்ரிக் டன் டி.ஏ.பி, 893 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் மற்றும் கொச்சியில் இருந்து 1,370 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் ரெயில் மூலம் ஈரோடு வந்தடைந்ததை வேளா ண்மை இணை இயக்குநர் சின்னசாமி, வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டு ப்பாடு) வைத்தீஸ்வரன், வேளாண்மை அலுவலர் (தரக்கட்டுபாடு) ஜெய சந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது வேளா ண்மை இணை இயக்குநர் சின்னசாமி கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் பயிர் சாகுபடி மேற்கொள்ள ஏதுவாக தற்போது யூரியா உரம் 4,027 மெ.டன்னும், டி.ஏ.பி உரம் 2,894 மெ.டன்னும், பொட்டாஷ் உரம் 3,133 மெ.டன்னும், காம்ப்ளக்ஸ் உரம் 11,086 மெ.டன்னும், சூப்பர் பாஸ்பேட் 856 மெ.டன்னும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் போதிய அளவு தட்டுப்பாடின்றி இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் விவசாயிகள் தங்கள் வட்டார வேளா ண்மை விரிவாக்க மையங்க ளில் வழங்கப்படும் திரவ உயிர் உரங்களை பெற்று பயன்படுத்துவ தோடு, திண்டலில் உள்ள வேளா ண்மைத் துறையின் மண் பரிசோதனை நிலையத்தில் மண் பரிசோதனை செய்து அதில் பரிந்துரைக்கப்படு வதற்கு ஏற்ப உரங்களை பெற்று பயன்படுத்தி உர செலவை குறைத்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- கோடை வெப்பத்தில் இருந்து பாதுகாப்பது குறித்தும் விளக்கம் அளித்தனர்.
- கொரோனா, டெங்கு பரவலை தடுக்க வேண்டுகோள் விடுத்தனர்.
ஈரோடு:
ஈரோடு அடுத்த சித்தோடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்கு உட்பட்ட எலவமலை பஞ்சாயத்து சென்னா நாயக்கனார் பகுதியில் 100 நாள் வேலை உறுதி திட்ட பணியாளர்களிடம் புகையிலை மற்றும் கோடை வெப்ப தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தது.
புகையிலை பயன்பா ட்டின் தீமைகள், புற்று நோய் பாதிப்பு, புகையிலை தடுப்பு சட்டங்கள், போதை பழக்கத்தால் ஏற்படும் சீரழிவுகள், கோடை வெப்ப தாக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள்,
மாரடைப்பு நோய் பிரச்சனை மற்றும் பாதுகாப்பு முறைகள், கோடை கால உணவு முறை, கோடை வெப்ப தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்தும் விளக்கம் அளித்தனர்.
மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பயன் பெற யோசனை தெரிவித்தனர். தற்போதைய நிலையில் கொரோனா, டெங்கு பரவலை தடுக்க வேண்டுகோள் விடுத்தனர்.
ஈரோடு மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், மாவட்ட புகையிலை தடுப்பு நல ஆலோசகர் டாக்டர்.கலைச்செல்வி,
சமூக சேவகர் சங்கீதா, வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் ரமேஷ், சுகாதார ஆய்வாளர்கள் மூர்த்தி, குமார், ராஜா ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடைபெற்றது.
- மொத்தம் ரூ.4 லட்சத்து 36 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
அந்தியூர், மார்ச். 31-
ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடைபெற்றது.
அந்தியூரை சுற்றியுள்ள செம்புளிச்சம்பாளையம், பருவாச்சி, காட்டூர், பச்சம்பாளையம், புதுப்பா ளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து நிலக்கடலை காய் விவசாயி கள் கொண்டு வந்திருந்தனர்.
இதில் 7 மூட்டைகள் பச்சை நிலக்கடலை காய் 24 ரூபாயில் இருந்து 31 ரூபாய் வரையிலும், 152 மூட்டைகள் காய்ந்த நிலக்கடலை காய் 63 ரூபாயில் இருந்து 74 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.
மொத்தம் ரூ.4 லட்சத்து 36 ஆயிரத்துக்கு நிலக்கடலை விற்பனை செய்யப்பட்டதாக விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
- பர்கூர் வன சரகம் செங்குளம் பிரிவு பகுதியில் ஒரு யானையை விவசாயி ஒருவர் மின்சாரம் பாய்ச்சி கொன்றதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- யானையின் உடல் சிதைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட தாளவாடி, கேர்மாளம், ஆசனூர் வனப்பகுதி மற்றும் அந்தியூர் வன சரகத்துக்குட்பட்ட பர்கூர் வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான்கள் உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.
இந்த நிலையில் மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கும் முன்பே தற்போது 103 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் வனப்பகுதிகளில் உள்ள குளம், குட்டைகள் வறண்டு வருகிறது. இதையொட்டி வனப்பகுதிகளில் இருந்து யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி இடம் பெயர்ந்து வரும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது. இப்படி வெளியேறும் யானைகள் அருகே உள்ள கிராமங்களில் உள்ள விவசாய தோட்டங்களில் புகுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதையொட்டி யானைகள் ஊருக்குள் மற்றும் விவசாய நிலங்களில் புகாமல் இருக்க ஒரு சில பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அனுமதியின்றி விவசாய நிலங்களையொட்டி மின் வேலிகள் அமைத்துள்ளனர். அந்த மின்வேலிகளில் சிக்கி யானைகள் பலியாகும் சம்பவங்களும் நடக்கிறது.
ஈரோடு வனக்கோட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் வன சரகம் செங்குளம் பிரிவு கோவில் நத்தம் பகுதியை சேர்ந்தவர் சடையப்பன் (வயது 58). விவசாயி. இவருக்கு அந்த பகுதியில் விவசாய தோட்டம் உள்ளது. இந்த விவசாய தோட்டத்தில் யானைகள் வராமல் இருக்க அனுமதியின்றி மின்வேலி அமைத்து இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த வழியாக வந்த ஒரு யானை மின்வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி பலியானது. இதையடுத்து அவர் இறந்த யானையை வனத்துறையினருக்கு தெரியாமல் அந்த பகுதியிலேயே குழிதோண்டி புதைத்து விட்டார்.
இந்த நிலையில் பர்கூர் வன சரகம் செங்குளம் பிரிவு பகுதியில் ஒரு யானையை விவசாயி ஒருவர் மின்சாரம் பாய்ச்சி கொன்றதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் பர்கூர் வன சரக அலுவலர் பிரகாஷ் தலைமையில் வனத்துறையினர் அந்த பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த பகுதியில் அவர் மின்சாரம் தாக்கி பலியான யானையை புதைத்தது தெரிய வந்தது. இதையடுத்து பணியாளர்கள் மூலம் வனத்துறையினர் புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டினர். அப்போது அங்கு யானையின் உடல் சிதைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து யானையின் உடல் பாகங்களை வனத்துறையினர் கைப்பற்றினர்.
இதையடுத்து வனத்துறையினர் மின்சாரம் பாய்ச்சி யானையை கொன்று புதைத்தாக கூறி சடையப்பனை கைது செய்தனர். பின்னர் அவரை பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பவானி மாவட்ட கிளையில் அடைத்தனர்.
- மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
- 17 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 696 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற வந்த ஒருவர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்.
இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 945 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
தற்போது மாவட்டம் முழுவதும் 17 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- தண்டவாளத்தில் ஆணின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- இறந்த நபர் யார் போன்ற விவரம் தெரியவில்லை.
ஈரோடு:
ஈரோடு அடுத்த மாவேலிபாளையம் ரெயில் நிலையத்துக்கும்-சங்ககிரி ரெயில் நிலையத்துக்கும் இடையே தண்டவாளத்தில் சம்பவத்தன்று சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் ஈரோடு ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை. அந்த நபர் ரெயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடந்த போது ரெயில் மோதி இறந்தாரா? அல்லது ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்து இறந்தாரா? என தெரியவில்லை.
இறந்த நபர் புளூ கலர் அரை பனியன். புளூ கலர் பேண்ட் அணிந்து இருந்தார். வலது கணுக்காலுக்கு மேல் ஒரு கருப்பு மச்சமும், வலது முழங்காலுக்கு கீழே பழைய தழும்பு உள்ளது.
இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஈரோடு மாவட்டம் பண்ணாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட காளிசாமி வந்திருந்தார்.
- சாமி கும்பிட்டவர் கோவில் பிரகாரத்தில் உட்கார்ந்திருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.
ஈரோடு:
கோவை மாவட்டம் குருடம்பாளையம், நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் காளிசாமி (57). இவர் தனது மகன் பாலசுப்பிரமணியனுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பண்ணாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட காளிசாமி வந்திருந்தார். சாமி கும்பிட்ட அவர் கோவில் பிரகாரத்தில் உட்கார்ந்திருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.
அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே காளிசாமி இறந்துவிட்டதாக கூறினார்.
இது குறித்து காளிசாமியின் மகன் பாலசுப்பிரமணி அளித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- பக்தர்கள் குண்டத்தில் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
- இரவு கம்பம் பிடுங்குதல் நடக்கிறது.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி அருகே கணக்கம்பாளையம் ஊராட்சியில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலின் குண்டம் திருவிழாவையொட்டி இன்று அதிகாலை 4 மணியளவில் அம்மை அழைப்பு, அம்பாள் ஊஞ்சலாடுதல் மற்றும் அக்னி கும்பம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் சுமார் 7 மணியளவில் குண்டம் இறங்கும் நிகழ்வு நடைபெற்றது. 60 அடி குண்டத்தில் பூசாரி பவுன் என்கிற பழனிச்சாமி மாலை அணிந்து முதலில் தீ மிதித்தார்.
அதனை தொடர்ந்து ஆண்கள், பெண்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டத்தில் தீ மிதித்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
மேலும் குண்டம் திருவிழாவில் கணக்கம்பா ளையம், பெருமுகை, கொண்டையம்பாளையம் ஆகிய கிராமங்களை சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு மாரியம்மன் மாவிளக்கு பூஜை, இரவு 9 மணிக்கு அம்மை அழைத்து கம்பம் பிடுங்குதல் மற்றும் அபிஷேக ஆராதனை நடக்கிறது.
- நீர்மட்டம் 89.89 அடியாக குறைந்து உள்ளது.
- 2,800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை.
இந்த அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 89.89 அடியாக குறைந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 657 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்திற்காக 4-ம் சுற்று தண்ணீர் நேற்று முதல் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
இன்று மேலும் அதிகரித்து வினாடிக்கு 2000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதேபோல் காளிங்க ராயன் பாசனத்திற்காக 600 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து 2,800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- சனீஸ்வரபகவானுக்கு சனி பெயர்ச்சி விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
- மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது.
பவானி:
பவானி சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில் சனீஸ்வர பகவானுக்கு என்று ஒரு தனி சன்னதி உள்ளது.
அங்கு அமைந்துள்ள சனீஸ்வர பகவானுக்கு வாக்கிய பஞ்சாங்கப்படி நேற்று மதியம் 1.06 நிமிடத்திற்கு சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்ததை தொடர்ந்து மூலவருக்கு பால், தயிர், திருமஞ்சனம், பன்னீர், இளநீர் உட்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்ய ப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பவானி சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.
இதில் பவானி, குமாரபாளையம், லட்சுமி நகர், காலிங்கராயன் பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.
கடந்த ஜனவரி மாதம் 17-ந் தேதி திருக்கணித பஞ்சாங்கப்படி சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறிய நிலையில் வாக்கிய பஞ்சாங்கப்படி நேற்று மதியம் 1.06 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிப்பெயர்ச்சி இடம் பெயர்ந்ததை தொடர்ந்து பவானி சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள சனீஸ்வர பகவானுக்கு இந்த சனி பெயர்ச்சி விழா நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.






