கீழ்பவானி பாசனத்திற்கு 2 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

நீர்மட்டம் 89.89 அடியாக குறைந்து உள்ளது.2,800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கீழ்பவானி பாசனத்திற்கு 2 ஆயிரம் கன அடி நீர் திறப்பு
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை.

இந்த அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 89.89 அடியாக குறைந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 657 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்திற்காக 4-ம் சுற்று தண்ணீர் நேற்று முதல் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

இன்று மேலும் அதிகரித்து வினாடிக்கு 2000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இதேபோல் காளிங்க ராயன் பாசனத்திற்காக 600 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து 2,800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com