ரூ.4 லட்சத்து 36 ஆயிரத்துக்கு நிலக்கடலை விற்பனை

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடைபெற்றது.மொத்தம் ரூ.4 லட்சத்து 36 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
ரூ.4 லட்சத்து 36 ஆயிரத்துக்கு நிலக்கடலை விற்பனை
Published on

அந்தியூர், மார்ச். 31-

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடைபெற்றது.

அந்தியூரை சுற்றியுள்ள செம்புளிச்சம்பாளையம், பருவாச்சி, காட்டூர், பச்சம்பாளையம், புதுப்பா ளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து நிலக்கடலை காய் விவசாயி கள் கொண்டு வந்திருந்தனர்.

இதில் 7 மூட்டைகள் பச்சை நிலக்கடலை காய் 24 ரூபாயில் இருந்து 31 ரூபாய் வரையிலும், 152 மூட்டைகள் காய்ந்த நிலக்கடலை காய் 63 ரூபாயில் இருந்து 74 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.

மொத்தம் ரூ.4 லட்சத்து 36 ஆயிரத்துக்கு நிலக்கடலை விற்பனை செய்யப்பட்டதாக விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com