என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோட்டார்சைக்கிளை திருடியவரை"

    • மோட்டார் சைக்கிளை திருடி செல்வது தெரியவந்தது.
    • மடக்கி பிடித்து காஞ்சிக்கோயில் போலீசில் ஒப்படைத்தனர்.

    ஈரோடு, மார்ச். 31-

    ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோயில் தெற்கு வீதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (57). இவர் அங்குள்ள கைத்தறி நெசவாளர் சங்கத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் பாலசுப்பிரமணியன் மதிய உணவுக்காக வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டுக்கு வெளியில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளை யாரோ இயக்கும் சத்தம் கேட்டுள்ளது.

    உடனடியாக பாலசுப்பி ரமணியம் வெளியில் சென்று பார்த்தபோது ஒருவர் அவரது மோட்டார் சைக்கிளை திருடி செல்வது தெரியவந்தது.

    ஆனால் மோட்டார் சைக்கிளை திருடி சென்றவர் அந்த பாதையில் அதற்கு மேல் செல்ல வழி இல்லாததால் திரும்பி வந்துள்ளார்.

    அவரை பாலசுப்பிர மணியம் மற்றும் அக்கம் பக்கத்தினர் மடக்கி பிடித்து காஞ்சிக்கோயில் போலீசில் ஒப்படைத்தனர்.

    விசாரணை யில் அவர் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள செம்மண் குழி மேடு பகுதியை சேர்ந்த கன்னியப்பன் (33) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து காஞ்சிக்கோயில் போலீசார் கன்னியப்பன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவர் திருடி செல்ல முயன்ற மோட்டார் சைக்கிளை மீட்டு பாலசுப்பிரமணியத்திடம் ஒப்படைத்தனர்.

    ×