என் மலர்tooltip icon

    ஈரோடு

    • தன்னார்வமாக ரத்த தானம் செய்வோம் என உறுதி மொழி எடுக்கப்பட்டது.
    • பொதுமக்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    அந்தியூர்:

    மத்திய அரசால் ஆயுஷ்மான் பவ என்ற திட்டமானது தொடங்கப்பட்டது.

    இதன் தொடர்ச்சி யாக அந்தியூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உறுப்பு தானம் மற்றும் ரத்த தானம் செய்வ தன் அவசியம் குறித்து வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    ரத்தத்தின் தேவையை கருத்தில் கொண்டு ரத்த தானம் செய்வதன் அவசியம் குறித்தும், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், உறவினர்கள், சக ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன் என்றும்,

    ஒருவருக்கு ரத்தம் தேவைப்படும்போது இனம், மதம், பாகுபாடு இன்றி எந்த உயிரிழப்பும் ஏற்படாத இருக்க தன்னார்வமாக ரத்த தானம் செய்வோம் என உறுதி மொழி எடுக்கப்பட்டது.

    மேலும் நம் நாட்டில் உறுப்புகள் மற்றும் திசுக்களின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு உடல் உறுப்பு தேவைப்படுபவர்களுக்கு புதிய வாழ்வு அளிக்க தங்கள் மரணத்திற்கு பிறகு பயன்படுத்த கூடிய எனது மற்றும் எனது குடும்ப உறுப்பினர்களின் உறுப்புகள் மற்றும் திசுக்களை தானம் செய்வதாக உறுதி மொழி எடுக்கப்பட்டது.

    இந்நிகழ்வில் பொதுமக்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கருத்து கேட்பு கூட்டம் அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நடைபெற்றது.
    • சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் தொடர்புடைய அலுவலர்களுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் இருந்து வெளியேறும் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில், அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் அமைச்சர் முத்துசாமி தெரிவித்ததாவது:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டத்திற் குட்பட்ட சிப்காட் தொழிற் பேட்டை வளாகத்தில் இருந்து வெளியேறும் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக பொதுமக்கள் சார்பிலான தொழிற்சங்கங்கள், பல்வேறு அமைப்பினர் மற்றும் தொழிற்துறை யினருடனான கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் தொழிற்பேட்டை வளாகத்தில் இருந்து வெளியேறும் கழிவுகள் தொடர்பான பாதிப்புகள் குறித்தும் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்தும் அனைத்து தரப்பினரிடம் இருந்து பல்வேறு கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளது.

    மேலும் தமிழ்நாடு அரசை பொறுத்தளவில், தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலா ளர்களின் நலனுக்காக தொழிற்சாலைகளுக்கு அதிக சலுகைகள் வழங்கியுள்ளது.

    அதேபோன்று, தொழிற்சாலைகள் பொதுமக்கள் மற்றும் இயற்கையை பாதுகாக்கும் வகையில் அரசின் விதி முறைகளை முழுமையாக பின்பற்றிட வேண்டும்.

    அவ்வாறு இல்லாமல் காற்று மற்றும் குடிநீர் மாசு ஏற்படுத்தும் வகையில், விதி முறைகளை பின்பற்றாத தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்வதோடு, பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் விரைவில் நல்ல தீர்வு மேற்கொள்ளப்படும்.

    தொடர்ந்து வரும் நாட்களில் பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் தொடர்புடைய அலுவலர்களுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக அமைச்சர் முத்துசாமி பெருந்துறை சிப்காட் வளாகத்தில் இருந்து வெளியேறும் கழிவு களால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரிடம் இருந்து கருத்துக்களை கேட்டறிந்தார்.

    இக்கூட்டத்தில் அந்தியூர் செல்வராஜ் எம்.பி, அ.கணேசமூர்த்தி எம்.பி., மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மணிஷ், சென்னி மலை ஊராட்சி ஒன்றிய தலைவர் காயத்ரி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செல்வம், பெருந்துறை தாசில்தார் பூபதி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுலவர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், தொழில் துறையினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் பலர் கலந்து கொண்டனர்.

    • கிணற்றுக்குள் எதிர்பாராத விதமாக வள்ளியம்மாள் தவறி விழுந்தார்.
    • உடனடியாக இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு சூளை ஈ.பி.பி. நகரை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (80). இவர் அந்த பகுதியில் உள்ள காம்பவுண்ட் வீட்டில் வசித்து வருகிறார். அந்த காம்பவுண்ட் பகுதியில் 100 அடி பொது கிணறு உள்ளது. தற்போது அந்த கிணற்றில் 10 அடி ஆழத்திற்கு தண்ணீர் இருந்தது.

    இந்நிலையில் இன்று காலை வள்ளியம்மாள் ரேஷன் கடைக்கு செல்வதற்காக கிளம்பி சென்றார். அப்போது அந்த பகுதியில் உள்ள கிணற்றுக்குள் எதிர்பாராத விதமாக வள்ளியம்மாள் தவறி விழுந்தார். கிணற்றில் இருந்த கயிறை பிடித்து கொண்டு கூச்சலிட்டார்.

    இந்த நிலையில் நீண்ட நேரமாகியும் வள்ளியம்மாள் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அவரை தேடி அந்த பகுதி வழியாக வந்தனர். அப்போது கிணற்றில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. இதையடுத்து பதறி போய் கிணற்றை பார்த்தபோது வள்ளியம்மாள் கூச்சல் போட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த தீயணைப்பு உதவி அலுவலர் கலைச்செல்வம் தலைமையிலான தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கயிறு கட்டி இறங்கி மூதாட்டியை உயிருடன் மீட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 

    • போராட்டத்தில் ஈடுபட்ட கர்நாடகா மாநில விவசாயிகள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • சாம்ராஜ்நகர் போலீசார் மறியலில் ஈடுபட்ட 38-க்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்தனர்.

    தாளவாடி:

    தமிழக நெற்களஞ்சியமான தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரி நீரை நம்பியே சாகுபடி செய்து வருகிறார்கள்.

    நடப்பு ஆண்டில் கடந்த ஜூன் 12-ம் தேதி டெல்டா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடகா வழங்கவில்லை. இதனால் காவிரி டெல்டா பகுதியில் சாகுபடி செய்திருந்த பயிர்கள் கருகின.

    கடன் வாங்கி சாகுபடி செய்த பயிர்கள் சேதம் அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இதனை அடுத்து காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை திறந்து விடுமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். மேலும் காவிரி ஆணைய கூட்டத்திலும் தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    காவிரி ஆணைய உத்தரவின்படி கர்நாடகா அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் அரசியல் கட்சிகள், விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் குதித்தனர்.

    இந்நிலையில் இன்று காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறக்க கூடாது என்பதை வலியுறுத்தி கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய சங்க தலைவர் பாக்யராஜ் தலைமையில் 38-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈரோடு மாவட்டம் தாவாடி அருகே உள்ள தமிழக கர்நாடக எல்லையான புளிஞ்சூர் சோதனை சாவடியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் தங்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் இல்லாத நிலையில் தமிழகத்திற்கு எப்படி தண்ணீர் திறந்து விட முடியும் என்று கூறி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட கர்நாடகா மாநில விவசாயிகள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து சாம்ராஜ்நகர் போலீசார் மறியலில் ஈடுபட்ட 38-க்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்தனர். விவசாயிகளின் மறியல் போராட்டத்தால் தமிழக-கர்நாடகா இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் இரண்டு புறங்களிலும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. ஒரு மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது.

    • மரத்திலிருந்து தவறி விழுந்து வாலிபர் பலியானார்
    • தேனீ கொட்டியதால் விபரீதம் ஏற்பட்டுள்ளது

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த தூரபாளையம் திருவ ள்ளூவர் தெருவை சேர்ந்த வர் முத்துசாமி (வயது 34). இவருக்கு இன்னும் திரும ணம் ஆகவில்லை. கூலி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சம்பவ த்தன்று முத்துசாமி அவரது உறவினர் மணி மற்றும் அதே பகுதியை சேர்ந்த தேவராஜ் ஆகிய 3 பேரும் ஆலுச்சாம்பாளையத்தில் உள்ள குமாரசாமி கவுண்டர் என்பவரது தோட்டத்தில் மரம் வெட்டுவதற்கு சென்ற னர். இந்நிலையில் முத்து சாமி மரத்தில் ஏறி மரம் வெட்டிக் கொண்டிருந்த போது அவரை தேனீ கொட்டி விட்டது.

    இதனால் முத்துசாமி மரத்திலிருந்து எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு வலியால் துடித்த அவரை அங்கிரு ந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த முத்துசாமி சிகிச்சை பலனி ன்றி பரிதாபமாக இறந்தார். பின்னர் இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மீன் வளர்ச்சி கழகம் சார்பில் பவானிசாகர் அணை நீர் தேக்கத்தில் 2.90 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன
    • இந்த ஆண்டு இதுவரை 5 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்ப ட்டு ள்ளதா கவும் மீன் வளர்ச்சி கழக அதி காரிகள் தெரிவித்து ள்ளனர்.

    சத்தியமங்கலம்,

    பவானிசாகர் அணை நீர் தேக்கப் பகுதியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் சார்பில் மின் குஞ்சுகள் விடப்பட்டு மீன்கள் நன்கு வளர்ந்த பின் பிடிக்கப்பட்டு தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் விற்பனை நிலை யங்களில் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் ஆழியாறு மேலாளர் சுகுமார் தலைமை யில் பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் மீன் குஞ்சுகள் விடும் பணி நடைபெற்றது.

    மின் துறை சார்பில் வளர்க்கப்பட்ட கட்லா இனத்தைச் சேர்ந்த 1 லட்சத்து 70 ஆயிரம் மீன் குஞ்சுகளும், ரோகு இனத்தைச் சேர்ந்த 1 லட்சத்து 20 ஆயிரம் மீன் குஞ்சுகளும் என மொத்தம் 2.90 லட்சம் மீன் குஞ்சுகள் பவானிசாகர் அணியின் நீர்த்தேக்க பகுதியில் விடப்பட்டது. தற்போது விடப்பட்ட மீன் குஞ்சுகள் 60 நாட்களில் நன்கு வளர்ந்த உடன் மீனவ ர்கள் மூலம் பிடி க்கப்பட்டு விற்ப னைக்கு அனுப்பி வைக்க ப்படும் எனவும், ஆண்டொ ன்றுக்கு பவானி சாகர் அணையில் 39 லட்சம் மீன் குஞ்சுகள் விட ப்படுவ தாகவு ம் தற்போது இந்த ஆண்டு இதுவரை 5 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்ப ட்டு ள்ளதா கவும் மீன் வளர்ச்சி கழக அதி காரிகள் தெரிவித்து ள்ளனர்.

    • மதுவிற்ற 7 பேர் மீது வழக்கு பதியபட்டுள்ளது
    • 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யபட்டன

    ஈரோடு,

    ஈரோடு மாவட்ட பகுதி களில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என ஈரோடு டவுன், கோபி போலீசார் தீவிர கண்கா ணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பெரு ந்துறை, ஈரோடு டவுன், ஆசனூர் ஆகிய பகுதிகளில் அனுமதி இன்றி மது விற்று கொண்டி ருந்த புதுக்கோட்டை மாவ ட்டம் கறம்பக்குடி பகுதி யைச் சேர்ந்த தங்கராஜ் மகன் கண்ணன் (வயது 38), புதுக்கோட்டை மாவட்டம் பெரிய கோட்டை தங்கராசு மகன் பாரதி (24), கர்நாட காவைச் சேர்ந்த லிங்க ராஜூ (32), திருப்பூர் மாவ ட்டம் பல்லடத்தை சேர்ந்த பாபு மகன் ஜெயக்குமார் (34), கேரள மாநிலத்தைச் சேர்ந்த கிறிஸ்டோ (21) ஆகியோரை போலீசார் பிடித்தனர். பின்னர் அவ ர்கள் விற்ப னைக்காக வைத்திருந்த 16 மது பாட்டில்களை போலீ சார் பறிமுதல் செய்தனர். பின்னர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதை போல் தீனாரை பகுதியில் மது கடத்திய தாளவாடி பகுதியைச் சேர்ந்த கோபாலகிரு ஷ்ணன் 51 சித்தராஜ் 44 ஆகியோரை தாளவாடி போலீசார் பிடித்தனர். மேலும் அவ ர்கள் மது கடத்த பயன்ப டுத்திய 2 மோட்டார் சைக்கி ள்களை பறிமுதல் செய்த னர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மின்சாரம் தாக்கி முதியவர் பலியானார்
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு

    ஈரோடு மாவட்டம் கோனவாய்க்கால் சுக்கான் தோட்டத்தைச் சேர்ந்தவர் சேகர் (வயது 63). இவர் ஓய்வு பெற்ற மாநகராட்சி பூங்கா பராமரிப்பாளர் ஆவார்.இந்நிலையில் சம்பவத்தன்று இவர் வீட்டில் உள்ள மோட்டா ரை ஆப் செய்து விட்டு மோட்டாரின் வால்வை திறந்து விட்டார். அப்போ து எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சேகர் கீேழ விழுந்தார். இதை அடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் ஈரோடு அரசு தலைமை மருத்துவம னைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்து வர்கள் சேகர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவி த்தனர். பின்னர் இதுகுறித்து அவரது மகன் ஜனார்த்தனன் ஈரோடு தெற்கு போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • பவானிசாகர் அணை நிலவரம் வெளியிடபட்டுள்ளது
    • அணையில் இருந்து 2,900 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 75.62 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு வினாடி 1,512 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,900 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • காற்று மாசுபாட்டைத் தவிர்க்க 13 ஒன்றியங்களில் 126 பேட்டரி குப்பை வண்டிகள் வாங்கபட்டுள்ளன
    • ஈரோடு மாவட்டத்தில் நட ப்பு ஆண்டில் ரூ.4.24 கோடி மதிப்பில், 221 பேட்டரி குப்பை வண்டிகள் வாங்க திட்டமிடப்பட்டது

    ஈரோடு,

    ஈரோடு மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில், குப்பைகளை அகற்ற லாரி, டிராக்டர் மற்றும் மினி ஆட்டோ வடிவிலான சிறிய வேன்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் பய ன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றால் எரிபொருள் மற்றும் கூடுதல் பராமரிப்பு செலவு ஏற்பட்டு வந்தது. இச்செலவை தவிர்க்கவும், காற்று மாசுபாட்டை தவிர்க்கும் நோக்கிலும் மின்கல (பேட்டரி) குப்பை வண்டிகள் மாநகராட்சிகள், நகராட்சிகளில் பயன்ப டுத்தப்பட்டு வருகிறது.

    அதனடிப்படையில், ஈரோடு மாவட்டத்தில் நட ப்பு ஆண்டில் ரூ.4.24 கோடி மதிப்பில், 221 பேட்டரி குப்பை வண்டிகள் வாங்க திட்டமிடப்பட்டது.ஊரக வளர்ச்சி துறை மூலமாக மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் தாளவாடி தவிர மற்ற 13 ஒன்றியங்க ளிலும் இந்த குப்பை வண்டி கள் வாங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறியதாவது:- தாளவாடி ஒன்றியம் முற்றிலும் மலை ப்பகுதியாக உள்ளது.

    அங்கு பேட்டரியில் சார்ஜ் செய்து, மின்கல வண்டியை, குப்பை லோடு ஏற்றி இயக்குவது சிரமம் என்ப தால், அந்த ஒன்றியத்துக்கு மட்டும் பேட்டரி குப்பை வண்டிகள் வாங்கவில்லை. தாளவாடி நீங்கலாக, ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை உள்ளிட்ட 13 ஒன்றியங்க ளிலும் தேவையின் அடிப்ப டையில் முதல்கட்டமாக 221 பேட்டரி வாகனங்கள் வாங்க திட்டமிடப்பட்டது. இதில் தற்போது 126 பேட்டரி குப்பை வண்டிகள் வாங்கப்பட்டுள்ளன.

    மொத்தம் ரூ.2.42 கோடியில் இந்த வாகனங்கள் வாங்க ப்பட்டு தற்போது பயன்பா ட்டில் உள்ளன. குறிப்பாக ஈரோடு ஒன்றி யத்தில் –8, மொடக்குறிச்சி-32, கொடுமுடி-17, பெருந்து றை-20, அம்மாபேட்டை-10, அந்தியூர்-8, கோபி-11, டி.என்.பாளையம்-10, பவானிசாகரில்-10 வண்டிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. மேலும் 95 வண்டிகள் குப்பைகள் அள்ளுவதற்கு ஏற்றவாறு அதன் கட்டமைப்பில் மாறுதல் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அவை பயன்பா ட்டுக்கு வரும்.

    இதன் மூலமாக எரிபெ ாருள் செலவு மிச்சமாகிறது. மின்சாரத்தில் சார்ஜ் செய்வதால், பெரிய செலவு ஏற்படுவதில்லை. கூடுதல் தூரம் பயணிப்பதால் எரி பொருள் செலவும் அதிகரி க்காது. முக்கியமாக காற்று, ஒலி மாசுபாடு ஏற்பாடாது. டிரைவர்களும், இதுபோன்ற வாகனங்களை இயக்க விருப்பம் தெரிவிக்கி ன்றனர். நம் மாவட்டத்தில், ஏற்கனவே மாநகராட்சி, சில நகராட்சிகளில் குறைந்த எண்ணிக்கையில், இதுபோன்ற பேட்டரி குப்பை வண்டிகள் செய ல்பாட்டில் உள்ளன.

    தற்போ து பயன்பாட்டில் உள்ள பெட்ரோல், டீசல் வாக னங்களை மாற்றும்போது, அதற்கு பதிலாக வரும் காலங்களில் இதுபோன்ற மாசற்ற, எரிபொருள் செ லவற்ற பேட்டரி வண்டி களை வாங்க ஊரக வளர்ச்சி துறை திட்டமிட்டு ள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • வெப்பிலி விற்பனைக் கூடத்தில் ரூ.51 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது
    • ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 22 ரூபாய் 72 காசுக்கு விற்பனையானது

    சென்னிமலை,

    சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று நடந்த தேங்காய் ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 5,460 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்தனர். இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 22 ரூபாய் 72 காசுக்கும், அதிகபட்ச விலையாக 24 ரூபாய் 1 காசுக்கும், சராசரி விலையாக 23 ரூபாய் 23 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 2,176 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 51 ஆயிரத்து 375 ரூபாய்க்கு விற்பனையானது.

    • தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்
    • இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி,

    கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள சின்னாரி பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 24). இவர் கல்லூரி பஸ் டிரைவராக இருந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மாலதி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு பிரசாந்த் கோபி செட்டி பாளையம் அடுத்த மேவாணி ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவர் ஒரு வளைவில் திரும்பும் போது அந்த பகுதியில் இருந்த தடுப்பு சுவர் மீது எதிர் பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பிரசாந்த் படுகாயம் அடை ந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    ×