என் மலர்tooltip icon

    ஈரோடு

    • சிவகுமார் தொட்டில் மாட்டும் கம்பியில் கயிற்றால் தூக்குபோட்டு தொங்கிக் கொண்டிருந்தார்.
    • இது குறித்து புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன், ஈங்கூர் ஊராட்சி, குட்டப்பாளையம் காலனியை சேர்ந்தவர் குருநாதன். இவருடைய மனைவி சிவகா மி. இவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டனர்.

    இவர்களுடைய ஒரே மகன் சிவகுமார் (19). இவர் அதே பகுதியில் உள்ள தனது தாத்தா, பாட்டி வீட்டில் தங்கியிருந்து ஏதாவது ஒரு வேலைக்கு சென்று வந்தார்.

    சிவகுமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் மது குடிப்பதற்கு தனது தாத்தா, பாட்டியிடம் அடிக்கடி பணம் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. பணம் கொடுக்க விட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என அடிக்கடி சிவகுமார் கூறியதாக தெரிகிறது.

    இந்த நிலையில் சம்ப வத்தன்று இரவு மது குடிக்க பணம் கேட்டு தனது தாத்தா, பாட்டியிடம் சிவகுமார் தகராறு செய்துள்ளார். ஆனால் பணம் கொடுக்க மறுத்ததால் சிவகுமார் தற்கொலை செய்து கொள்வ தாக கூறி வீட்டுக்குள் செ ன்று கதவை தாழிட்டுள்ளார்.

    அப்போது ஜன்னல் வழியாக அவரது உறவினர் ஒருவர் பார்த்தபோது அ ங்கு சிவகுமார் பீடி புகைத்து கொண்டு இருந்ததால் வழக்கம்போல் ஏமாற்றுகிறார் என நினைத்து விட்டனர்.

    ஆனால் சிறிது நேரத்தில் சிவகுமார் தொட்டில் மாட்டும் கம்பியில் கயிற்றால் தூக்குபோட்டு தொங்கிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த அவரது உறவினர்கள் ஜன்னலை உடைத்து உள்ளே சென்று சிவகுமாரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு தனியார் ஆம்புல ன்ஸ் மூலம் கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே சிவகு மார் இறந்து விட்ட தாக தெரிவித்துள்ளார். இது குறித்து புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    தற்கொலை நாடகமாடி பணம் பெற்று மது குடிந்த வந்தவர் உண்மையில் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது.

    • ஜீவலதாவுக்கு பிரசவ வலி அதிகமானது.
    • இதில் 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகா தேவர்மலை கல்வாரை பகுதியை சேர்ந்தவர் மாதேஷ். இவருடைய மனைவி ஜீவலதா (22). ஜீவலதா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

    இந்த நிலையில் ஜீவலதாவுக்கு பிரசவ வலி அதிகமானது. இதனை அறிந்த அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவயிடத்துக்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கார்த்திக் ராஜா, அவசரகால மருத்துவ நுட்புநர் பூபதி ஜீவலதாவை மீட்டு பர்கூர் அரசு மருத்துவமனை நோக்கி விரைந்து சென்றனர்.

    ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்த போது ஜீவலதாவுக்கு பிரசவ வலி அதிகமாகவே வாகனத்தை சாலை ஓரத்தில் நிறுத்தி மருத்துவ நுட்புநர் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார். இதில் 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    பின்னர் மருத்துவ சிகிச்சை அளித்து பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பாதுகா ப்பாக அழைத்து சென்று அங்கு தாய், சேய் 2 பேரும் பாதுகாப்பாக அனுமதிக்கப்பட்டனர்.

    • பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.
    • கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 75.16 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு வினாடி 259 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிரு க்கிறது.

    அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் பவானி சாகர் அணையில் இருந்து 2,900 கன அடி தண்ணீர் வெ ளியேற்றப்பட்டு வருகிறது.

    • ஈரோடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    ஈரோடு:

    ஈரோடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இத்துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் ஈரோடு நகர் முழு வதும்,

    வீரப்பன்சத்திரம், இடையன் காட்டு வலசு, முனிசிபல் காலனி, டீச்சர்ஸ் காலனி, பெருந்துறை ரோடு, சம்பத் நகர், வெட்டு க்காட்டுவலசு, மாணிக்கம் பாளையம், பாண்டியன் நகர், சக்தி நகர்,

    வக்கீல் தோட்டம், பெரிய வலசு, பாப்பாத்தி காடு, பாரதி தாசன் வீதி, முனியப்பன் கோவில் வீதி, நாராயண வலசு, டவர்லைன் காலனி, திருமால் நகர், கருங்கல்பா ளையம்,

    கே.என்.கே. ரோடு, மூல பட்டறை, சக்தி ரோடு, நேதாஜி ரோடு, காந்திஜி ரோடு, பெரியார் நகர், ஈ.வி.என். ரோடு மற்றும் மேட்டூர் ரோடு ஆகிய பகுதிகளுக்கு நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    இதே போல் கவுந்தப்பாடி துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இத்துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் கவுந்தபாடி,

    ெகாள த்துப்பாளையம், ஓடத்துறை, ெபத்தாம் பாளையம், எல்லீஸ் பேட்டை, சிங்கா நல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோயில், ஆப்பக்கூடல்,

    கிருஷ்ணா புரம், தருமாபுரி, கவுந்த ப்பாடி புதூர், மாரப்பம்பா ளையம், அய்யம்பாளையம், வேலம்பாளையம், சந்திரா புரம், பெருமாபாளையம், தன்னாசிபட்டி,

    பாண்டி யம்பாளையம், குஞ்சரமடை, ஓடமேடு, கருக்கம்பாளையம், கண்ணாடி புதூர், மாணி க்கவலசு, அய்யன்வலசு, மணிபுரம், விராலிமேடு, தங்கமேடு, பி.மேட்டுப்பா ளையம்,

    செந்தாம்பாளை யம், செட்டிபாளையம், ஆவரங்காட்டுவலசு, ஆல ந்தூர், கவுண்டன்பாளையம் மற்றும் செரயாம்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை செயற்பொறியாளர் சாந்தி தெரிவித்துள்ளார்

    • பெற்றவர்களே ஆயிரம் ரூபாய் கொடுப்பது சாத்தியமில்லை
    • குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இந்த ஆட்சியால் பயன் அடைந்து வருகிறார்கள்- ஈரோடு பெண்

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று முறைப்படி தொடங்கி வைக்கிறார். ஆனால், தகுதியுடையவர்களுக்கு நேற்றில் இருந்து வங்கிக் கணக்கில் பணம் போடப்பட்டு வருகிறது.

    பணம் கிடைத்த பெண்கள் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டைத் சேர்ந்த வீட்டு வேலைக்குச் செல்லும் பெண் ஒருவர் 1000 ரூபாய் கிடைக்கப் பெற்றது குறித்து கூறியதாவது:-

    ஆயிரம் ரூபாய் கிடைத்ததில் ரொம்ப ரெம்ப மகிழ்ச்சி. முதலமைச்சர் பெண்களுக்காக இலவச பயணம், புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பெற்றவர்களே ஆயிரம் ரூபாய் கொடுப்பது சாத்தியமில்லை. முதலமைச்சர் கொடுப்பது தாய் வீட்டு சீர் போன்று உள்ளது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இந்த ஆட்சியால் பயன் அடைந்து வருகிறார்கள். பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் முதலமைச்சருக்கு நன்றி, வாழ்த்துக்கள். ஹேப்பி முதலமைச்சர் சார்... என மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.

    டெய்லர் வேலை பார்க்கும் பெண் கூறுகையில் ''இந்த பணத்தை செல்வ மகள் திட்டத்திற்கு பயன்படுத்துவேன். இதை நான் செலவு செய்ய மாட்டேன்'' என்றார்.

    வேலூரை சேர்ந்த பெண்கள் ''ஆயிரம் ரூபாய் கிடைத்தது மகிழ்ச்சி. இரண்டு வருடத்திற்கு முன்பாக இதை கொடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இதை வைத்து மளிகை பொருட்கள், ஆஸ்பத்திரி செலவை சமாளிக்கலாம்'' என்றனர்.

    சேலம் மாவட்டைச் சேர்ந்தவர் பெண் ஒருவர் ''சிலிண்டர் வாங்குவதற்கு, சொந்த செலவிற்கு, மருத்துவ செலவு ஏற்பட்டால் பயனுள்ளதாக இருக்கும்'' என்றார்.

    மற்றொரு பெண் ''எனது கணவர், கால் முறிந்து வேலைக்கு போகாமல் உள்ளார். நானும் காலில் அடிப்பட்டு வேலைக்கு செல்லவில்லை. இந்த நேரத்தில் இந்த பணம் உதவியாக இருக்கும். முதல்வருக்கு நன்றி. இவ்வளவுதான் எனக்கு பேசத்தெரியும்'' என்றார்.

    • 7 பேனர்களை விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு வைத்திருந்தனர்.
    • அனைத்து பேனர்களையும் நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இந்து முன்னணியினர் எஸ்.ஆர்.டி. கார்னர், சத்தியமங்கலம் பஸ் நிலையம், வடக்குப்பேட்டை, கோட்டுவீராம்பாளையம், பழைய மார்க்கெட் ஆகிய பகுதிகளில் மொத்தம் 7 பேனர்களை விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு வைத்திருந்தனர்.

    சத்தியமங்கலம் நகராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல் பேனர் வைத்ததால் இன்று காலை அனைத்து பேனர்களையும் நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

    இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலைக்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது
    • மொத்தம் ரூ.16 லட்சத்து 92 ஆயிரத்து 703-க்கு விற்பனையானது.

    சிவகிரி:

    சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலைக்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.

    இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 807 மூட்டைகளில் 24 ஆயிரத்து 262 கிலோ எடையுள்ள நிலக்கடலைக்காயை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இது கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.64.29 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.85.10 காசுகள், சராசரி விலையாக ரூ.77.60 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.16 லட்சத்து 92 ஆயிரத்து 703-க்கு விற்பனையானது.

    • காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இதனால் ஒரு மணி நேரத்துக்கு பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிறுவலூர் அருகே எலந்தகாடு என்ற கிராமம் உள்ளது. இங்கு ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் வசதி செய்து தருவதற்காக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது.

    இந்நிலையில் குடிநீர் குழாய்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைந்து விட்டது. இதனால் இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்ய முடியவில்லை.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் சிறுவலூர் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். ஆனாலும் இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பெண்கள் காலி குடங்களுடன் ஒன்று திரண்டு திடீரென சிறுவலூர்-கவுந்தபாடி ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது உங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனையேற்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர். இதனால் ஒரு மணி நேரத்துக்கு பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.

    • ரோட்டில் இருந்த பாலம் உடைந்து குழி ஏற்பட்டு விட்டது.
    • பஸ் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன், முருங்கத்தொழுவு ஊராட்சி, அம்மன்கோவில் புதூரில் இருந்து முருங்கத்தொழுவு செல்லும் ரோட்டில் இருந்த பாலம் உடைந்து குழி ஏற்பட்டு விட்டது.

    இந்த ரோட்டில் அரசு டவுன் பஸ் மட்டும் அல்லாமல், தனியார் நிறுவன கம்பெனி பஸ்கள், லாரிகள் என போக்குவரத்து மிகுந்த ரோடு. மேலும் இருசக்கர வாகனங்களும் அதிக அளவில் செல்கிறது. இந்த நிலையில் இந்த குழி ஏற்பட்டு கடந்த 3 மாதங்களாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

    தற்போது ரோட்டின் 2 பக்கமும் குழி ஏற்பட்டு பஸ் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களும், பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளும் பஸ் போக்குவரத்து இன்றி தடுமாறி வருகின்றனர்.

    மேலும் இந்த இடத்தில் இரவு நேரத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து விபத்து ஏற்படும் முன்னதாவது அதிகாரிகள் அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விற்பனைக்காக வைத்திருந்த 35 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட பகுதி களில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என ஈரோடு டவுன், கோபி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது ஈரோடு டவுன், கருங்கல்பாளையம், தாளவாடி, ஆசனூர், நம்பியூர் சுற்று வட்டார பகுதிகளில் அனுமதியின்றி மது விற்று கொண்டிருந்த சென்னிமலை பகுதியை சேர்ந்த செல்வம் மகன் லெட்சுமணன் (வயது 29),

    கருங்கல்பாளையம் கக்கன் நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் பாபு (52), தாளவாடி நாயக்கர் தெருவை சேர்ந்த அல்லம்மா (55), கோத்தகிரி பகுதியை சேர்ந்த மதன் மகன் பரமேஸ்வரன் (34),

    கோபிசெட்டிபாளையம் கடைசெல்லிபாளையத்தை சேர்ந்த பழனி மகன் ரெங்கசாமி (21) ஆகியோரை போலீசார் பிடித்தனர்.

    பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 35 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதை போல் பவானி மெயின் ரோடு பகுதியில் பொது இடத்தில் குடிபோதையில் சுற்றி திரிந்த பி.பி.அக்ரஹாரத்தை சேர்ந்த சுப்பிரமணியம் மகன் சுரேஷ் (38) என்பவரை கருங்கல்பாளையம் போலீசார் கைது செய்தனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கார் சாலையின் பக்க வாட்டில் உள்ள தென்னை மரத்தின்மீது மோதியது
    • இதில் அருண்பிரசாத்துக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்தார்.

    அரச்சலூர்:

    ஈரோடு மாவட்டம் அரச்சலூர் வெங்மேட்டை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன். இவரது மகன் அருண்பிரசாத் இவர் டாக்டராக உள்ளார்.

    இவருக்கு திருமணம் செய்வதற்காக நிச்சம் செய்யப்பட்டு அடுத்த மாதம் திருமணம் நடக்க உள்ளது.

    இந்த நிலையில் டாக்டர் அருண்பிரசாத்திற்கு அவரது மாமனார் புதிய கார் ஒன்றை வாங்கி தந்தார். இதையடுத்து அந்த காரில் அவர் காங்கேயத்தில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்றார்.

    அங்கு அந்த காரை மாமனாரிடம் காட்டினார். பின்னர் அவர் காங்கேயம் அருகே உள்ள ஒரு கோவிலில்அந்த காருக்கு பூஜை போட்டு விட்டு தனது தாயுடன் அரச்சலூருக்கு வந்து கொண்டிருந்துள்ளார் .

    தொடர்ந்து அவர் அரச்சலூர் நல்லமங்கா பாளையம் அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையின் பக்க வாட்டில் உள்ள தென்னை மரத்தின்மீது மோதியது. இதில் கார்முழுவதுமாக நொறுங்கி சேதமடைந்தது.

    இதில் அருண்பிரசாத்துக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். அவரது தாயார் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினார்.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் வந்து அருண்பிரசாத் மற்றும் அவரது தாயாரை மீட்டு ஆம்புலன்சு மூலம் சிகி ச்சைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சைக்காக அருண்பிரசாத் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க ப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து அரச்சலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • காலவரையற்ற வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    • இன்று ஊரக வளர்ச்சிதுறையினர் மீண்டும் பணிக்கு திரும்பினர்.

    ஈரோடு:

    காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், அரசு ஊழியர்களுக்கு வழங்க ப்படுவது போல தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதியம் ஊராட்சி செயலர்களுக்கு வழங்க வேண்டும்,

    100 நாள் திட்ட கணினி உதவியா ளர்களை பணி வரன்முறை செய்ய வே ண்டும், பதவி உயர்வு உள்ளி ட்ட 16 அம்ச கோரிக்கை களை வலியு றுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்க ப்பட்டது.

    இந்த போராட்டத்தின் காரணமாக ஈரோடு மாவ ட்டத்தில் கலெக்டர் அலுவ லகம், 14 ஊராட்சி ஒன்றி யங்கள், ஊராட்சி அலுவலக ங்களில் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டன.

    இந்நிலையில் அரசு தரப்பில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட சங்க நிர்வாகிகளிடம் சென்னையில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க த்தின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு அரசின் உறுதி மொழியை ஏற்று காலவரை யற்ற வேலை நிறுத்த போரா ட்டம் வாபஸ் பெறுவது என முடிவு செய்யப்பட்டது.

    இது குறித்து சங்கத்தின் மாநில துணை தலைவர் பாஸ்கர் பாபு கூறியதாவது:- 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கப்பட்டது.

    இதை யடுத்து ஊரக வளர்ச்சிதுறை இயக்கு நரிடம் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் 16 அம்ச கோரிக்கைகள் தொடர்பான அரசாணைகள் ஒரு மாத காலத்திற்குள் முழுமையாக வெளியிடப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.

    மேலும் ஊராட்சி செ யலாளர்கள் பணி விதிகள் தொடர்பான அரசாணை 2 நாட்களில் வெளியிடப்படும் என்று கூறியதையடுத்து மாநில செயற்குழு கூட்ட முடிவுகளின் படி காலவரையற்ற வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காலவரையற்ற வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதால் இன்று ஊரக வளர்ச்சிதுறையினர் மீண்டும் பணிக்கு திரும்பினர்.

    ×