என் மலர்
நீங்கள் தேடியது "The car hit a tree and"
- கார் சாலையின் பக்க வாட்டில் உள்ள தென்னை மரத்தின்மீது மோதியது
- இதில் அருண்பிரசாத்துக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்தார்.
அரச்சலூர்:
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் வெங்மேட்டை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன். இவரது மகன் அருண்பிரசாத் இவர் டாக்டராக உள்ளார்.
இவருக்கு திருமணம் செய்வதற்காக நிச்சம் செய்யப்பட்டு அடுத்த மாதம் திருமணம் நடக்க உள்ளது.
இந்த நிலையில் டாக்டர் அருண்பிரசாத்திற்கு அவரது மாமனார் புதிய கார் ஒன்றை வாங்கி தந்தார். இதையடுத்து அந்த காரில் அவர் காங்கேயத்தில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்றார்.
அங்கு அந்த காரை மாமனாரிடம் காட்டினார். பின்னர் அவர் காங்கேயம் அருகே உள்ள ஒரு கோவிலில்அந்த காருக்கு பூஜை போட்டு விட்டு தனது தாயுடன் அரச்சலூருக்கு வந்து கொண்டிருந்துள்ளார் .
தொடர்ந்து அவர் அரச்சலூர் நல்லமங்கா பாளையம் அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையின் பக்க வாட்டில் உள்ள தென்னை மரத்தின்மீது மோதியது. இதில் கார்முழுவதுமாக நொறுங்கி சேதமடைந்தது.
இதில் அருண்பிரசாத்துக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். அவரது தாயார் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினார்.
இதை கண்ட அக்கம் பக்கத்தினர் வந்து அருண்பிரசாத் மற்றும் அவரது தாயாரை மீட்டு ஆம்புலன்சு மூலம் சிகி ச்சைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேல் சிகிச்சைக்காக அருண்பிரசாத் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க ப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து அரச்சலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






