மதுவிற்ற 5 பேர் மீது வழக்கு

விற்பனைக்காக வைத்திருந்த 35 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுவிற்ற 5 பேர் மீது வழக்கு
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்ட பகுதி களில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என ஈரோடு டவுன், கோபி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது ஈரோடு டவுன், கருங்கல்பாளையம், தாளவாடி, ஆசனூர், நம்பியூர் சுற்று வட்டார பகுதிகளில் அனுமதியின்றி மது விற்று கொண்டிருந்த சென்னிமலை பகுதியை சேர்ந்த செல்வம் மகன் லெட்சுமணன் (வயது 29),

கருங்கல்பாளையம் கக்கன் நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் பாபு (52), தாளவாடி நாயக்கர் தெருவை சேர்ந்த அல்லம்மா (55), கோத்தகிரி பகுதியை சேர்ந்த மதன் மகன் பரமேஸ்வரன் (34),

கோபிசெட்டிபாளையம் கடைசெல்லிபாளையத்தை சேர்ந்த பழனி மகன் ரெங்கசாமி (21) ஆகியோரை போலீசார் பிடித்தனர்.

பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 35 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை போல் பவானி மெயின் ரோடு பகுதியில் பொது இடத்தில் குடிபோதையில் சுற்றி திரிந்த பி.பி.அக்ரஹாரத்தை சேர்ந்த சுப்பிரமணியம் மகன் சுரேஷ் (38) என்பவரை கருங்கல்பாளையம் போலீசார் கைது செய்தனர்.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com