108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது

ஜீவலதாவுக்கு பிரசவ வலி அதிகமானது.இதில் 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகா தேவர்மலை கல்வாரை பகுதியை சேர்ந்தவர் மாதேஷ். இவருடைய மனைவி ஜீவலதா (22). ஜீவலதா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்த நிலையில் ஜீவலதாவுக்கு பிரசவ வலி அதிகமானது. இதனை அறிந்த அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவயிடத்துக்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கார்த்திக் ராஜா, அவசரகால மருத்துவ நுட்புநர் பூபதி ஜீவலதாவை மீட்டு பர்கூர் அரசு மருத்துவமனை நோக்கி விரைந்து சென்றனர்.

ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்த போது ஜீவலதாவுக்கு பிரசவ வலி அதிகமாகவே வாகனத்தை சாலை ஓரத்தில் நிறுத்தி மருத்துவ நுட்புநர் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார். இதில் 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

பின்னர் மருத்துவ சிகிச்சை அளித்து பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பாதுகா ப்பாக அழைத்து சென்று அங்கு தாய், சேய் 2 பேரும் பாதுகாப்பாக அனுமதிக்கப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com