என் மலர்
திண்டுக்கல்
- வல்லாரை ஜாம் குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை அதிகரி க்கும். வயதானவர்களுக்கு அல்சைமர் நோய் வராமல் தடுக்கும்.
- ஜாம் மற்றும் இட்லி பொடியினை பல்கலைகழக வளாகத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.
செம்பட்டி:
திண்டுக்கல் அருகே காந்திகிராம கிராமிய பல்கலைகழகத்தில் 4-ஆம் ஆண்டு இளங்கலை வேளாண் பட்டபடிப்பு பயின்று வரும் மாணவிகள் பாலமுனீஸ்வரி, ஷெர்லி, பிளஸ்சி, ஹேமபிரியா, லெட்சுமி, அபிநயா ஆகியோர் ஜெ.ஊத்துப்பட்டி கிராமத்தில் நடந்த திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு வகுப்பின் கீழ் இயற்கை முறையில் வல்லாரை கீரை உற்பத்தி செய்து, வல்லாரை இலை களோடு பழங்களையும் சேர்த்து ஜாம் மற்றும் இட்லி பொடி தயார் செய்து வருகின்றனர்.
கீரைகளை குழந்தைகள் உண்ணுவதற்கு ஏற்ற வகையில் தயாரிக்கும் நோக்கமாக கொண்டுள்ளனர். இந்த வல்லாரை ஜாம் குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை அதிகரி க்கும். வயதானவர்களுக்கு அல்சைமர் நோய் வராமல் தடுக்கும். பெண்கள் மாதவிடாய் காலங்களில் சந்திக்கும் வயிற்று வலியை குறைக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.
இந்த ஜாம் மற்றும் இட்லி பொடியினை பொது மக்கள் ஆர்வத்துடன் அதிக அளவில் வாங்கி செல்வதால் தொடர்ந்து இவற்றை தயாரித்து அவர்கள் பல்கலைகழக வளாகத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.
- அதிகாலை 3 மணியளவில் கடை தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது.
- கடையில் இருந்த பல்வேறு பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.
பழனி:
பழனி அருகே திருநகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் பழனி மலைக்கோவில் பின்பு உள்ள ஆவின்பால்பண்ணை எதிரே பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
இன்று அதிகாலை 3 மணியளவில் கடை தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது. இதனை பார்தத அக்கம்பக்க த்தினர் பழனி தீயணைப்பு த்துறை யினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுப்படுத்த முயன்றனர். இதனால் தீ பக்கத்து கடைகளுக்கு பரவுவது தடுக்கப்பட்டது.
சுமார் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின்பு தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் கடையில் இருந்த பல்வேறு பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. காற்றின்மூலம் தீ பரவியதா, மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது மர்மநபர்கள் யாரேனும் கடைக்கு தீ வைத்து சென்றனரா என்பது குறித்து பழனி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- கடந்த 2019-ம் ஆண்டு ஓராவி அருவி சுற்றுலா பட்டியலில் இணைக்கப்பட்டது.
- சுற்றுலா பயணிகள் எழில் கொஞ்சும் அருவியை காணமுடியாத நிலை உள்ளது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். நகர் பகுதியில் ஏராளமான சுற்றுலா இடங்கள் உள்ளன. தற்போது போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால் மலைகிராமங்களுக்கு சென்று இயற்கை அழகை கண்டு ரசிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக வனப்பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும் அழகுடன் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் அருவியை கண்டு ரசித்து வருகின்றனர். வெள்ளிநீர்வீழ்ச்சி, கரடிசோலை அருவி, வட்டக்கானல் பாம்பார் அருவி, தேவதை அருவி உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகள் உள்ளன. இந்நிலையில் வெளிஉலகுக்கு தெரியாத வண்ணம் கொடைக்கானல்-பழனி சாலையில் பேத்துப்பாறை அருகே பாரதிஅண்ணாநகர் பகுதியில் ஓராவி அருவி அமைந்துள்ளது.
இந்த அருவியில் ஆண்டு முழுவதும் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு ஓராவி அருவி சுற்றுலா பட்டியலில் இணைக்கப்பட்டது. ஆனால் இந்த அருவிக்கு செல்ல பாதை வசதி இல்லை. இதனால் சுற்றுலா பயணிகள் எழில் கொஞ்சும் அருவியை காணமுடியாத நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் ஓராவி அருவிக்கு சாலை வசதி ஏற்படுத்தி கொடுத்து சுற்றுலா பயணிகள் சென்றுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் அப்பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கடந்த 10 நாட்களில் 29 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 13 பேருக்கு தொற்று உறுதியானது.
- காய்ச்சல், சளி, இருமல் அறிகுறி தென்பட்டால் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
பழனி:
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வரு கிறது. தமிழகத்திலும் இதேநிலை ஏற்பட்டுள்ள தால் ஆஸ்பத்திரிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா தடுப்பு, சிகிச்சைகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்ட த்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. 26 பேர் வரை பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் குணமடைந்துள்ளார். பழனி பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்து வரு கிறது. கடந்த 10 நாட்களில் 29 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ப்பட்டதில் 13 பேருக்கு தொற்று உறுதியானது. இதில் 2 பேர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்ற னர். மற்றவர்கள் வீடுகளி லேயே தனிமைப்படுத்தி கொண்டனர். ஆயக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு தினசரி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் அதில் ஒருவருக்காவது கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவதால் பழனி மற்றும் ஆயக்குடி பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். பழனி அரசு ஆஸ்பத்திரியில் கட்டிட பணிகள் நடை பெற்று வருவதால் கொரோ னாவுக்கான சிறப்பு வார்டு ஏற்படுத்தப்படவில்லை.
பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அச்சப்பட தேவையில்லை. முககவசம் மற்றும் கைகளை நன்றாக கழுவுதல் உள்ளிட்ட முறைகளை பின்பற்ற வேண்டும். மேலும் காய்ச்சல், சளி, இருமல் அறிகுறி தென்பட்டால் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். டாக்டர் பரிந்துரையின்றி மருந்து கடைகளில் மருந்து வாங்கி பயன்படுத்த கூடாது.
மேலும் கொரோனா தடுப்பு முறைகளை விழிப்புணர்வுடன் பின்பற்ற வேண்டும் என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்
- ஒரு கிலோ செடி முருங்கை ரூ.12-க்கும், மர முருங்கை ரூ.8-க்கும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.
- அரசு முருங்கை பவுடர் தொழிற்சாலை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், இடையகோட்டை, மார்க்கம்பட்டி, மாம்பாறை, கோவிந்தாபுரம், அய்யம்பாளையம், கள்ளிமந்தயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முருங்கைக்காய் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இந்த முருங்கைக்காய்கள் ஒட்டன்சத்திரம் மற்றும் மார்க்கம்பட்டி பகுதியில் உள்ள சந்தைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது முருங்கை வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.100-க்கு விற்ற முருங்கை தற்போது விலை கடுமையாக சரிந்துள்ளது.
ஒரு கிலோ செடி முருங்கை ரூ.12-க்கும், மர முருங்கை ரூ.8-க்கும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. பல்வேறு இன்னல்களுக்கிடையே விவசாயம் செய்து காய்கறிகளை சந்தைக்கு கொண்டு வந்தால் செலவு செய்த பணத்திற்கு கூட விலை கிடைக்காததால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர். இதனால் பெரும்பாலான விவசாயிகள் முருங்கை காய்களை கால்நடைகளுக்கு தீவனமாக போட்டு வருகின்றனர்.
நிலத்தை உழுது பயிரிட்டு முறையாக தண்ணீர் பாய்ச்சி, உரம் வைத்து பராமரித்து வருடம் முழுவதும் வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காதது வேதனையை ஏற்படுத்தி உள்ளது. எனவே இதற்கு அரசு தீர்வு காணவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சீசன் காலங்களில் அதிகளவில் முருங்கை விளைகிறது. இதனை பவுடராக்கி வருடம் முழுவதும் பயன்படுத்தலாம். இதற்கு அரசு முருங்கை பவுடர் தொழிற்சாலை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
- கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது
- வாழ்க்கையில் விரக்தியடைந்த தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம்-கோவில்பட்டியை சேர்ந்தவர் முரளிகுமார் (25). ரெடிமேட் ஜவுளி வியாபாரி. இவருக்கு திருமணமாகி ஆண்குழந்தை ஒன்று உள்ளது.
இந்நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு ள்ளது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த முரளிகுமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் போலீசார் முரளி குமார் உடலை கைப்பற்றி நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
- உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி யானைகள் வயல்வெளி களுக்குள் புகுந்து விடுவது வழக்கம்.
- கொடைக்கானல் சாலையில் தேக்கந்தோட்டம் பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடைக்குள் யானை புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பழனி:
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பாலாறு, பொருந்தலாறு, தேக்கந்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு யானைகள் உள்ளன. இவை அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி வயல்வெளி களுக்குள் புகுந்து விடுவது வழக்கம். தற்போது கோடை க்காலம் என்பதால் அடி க்கடி யானை நடமாட்டம் இருந்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் வனப்பகு தியை ஒட்டியுள்ள பகுதி களில் உள்ள விவசாயிகள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் அறிவுறு த்தியுள்ளனர்.
இந்நிலையில் பழனி - கொடைக்கானல் சாலையில் தேக்கந்தோட்டம் பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடை க்குள் யானை புகுந்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இரை தேடி வந்த ஒற்றை யானை அந்த பெட்டிக்க டையை உடைக்க முயலும் காட்சி அதில் பதிவாகியு ள்ளது. ஆனால் நீண்ட நேரமாக அந்த கடையில் நின்று கொண்டு இருந்த யானை அதன் பிறகு அங்கி ருந்து நகர்ந்து சென்றது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் வனத்துறை யினருக்கு தகவல் தெரி வித்துள்ளனர்.
குடியிருப்பு பகுதி மற்றும் விவசாய நிலங்களுக்குள் யானை வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ள னர். மேலும் கோடை காலம் முடியும் வரை யானை களுக்கு வனப்பகுதியில் தண்ணீர் தொட்டியில் நீரை தேக்கி வைக்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பழனியில் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் அடிவாரத்தில் பக்தர்கள் செருப்பின்றி நடந்து செல்லும்போது சிரமம் அடைந்து வருகின்ற னர்.
- குடமுழுக்கு நினைவரங்கம் முதல் பாதவிநாயகர் கோவில் வரை கிரிவலப்பாதையில் பக்தர்கள் வசதிக்காக நிழற்பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.
பழனி:
தமிழ்கடவுள் முருகனின் 3-ம் படைவீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர். கடந்த சில நாட்களாக பங்குனி உத்திர திருவிழா முடிந்தபின்னரும் பக்தர்கள் கூட்டம் அலை மோதி வருகிறது.
வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் அடிவாரத்தில் பக்தர்கள் செருப்பின்றி நடந்து செல்லும்போது சிரமம் அடைந்து வருகின்ற னர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மலைக்கோவிலில் பக்தர்கள் வசதிக்காக கூலிங்பெயிண்ட் பூசப்பட்டது.
ஆனால் அடிவாரப்பகுதி யில் வெயில் கொடுமையால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வந்தனர். இந்தநிலையில் குடமுழுக்கு நினைவரங்கம் முதல் பாதவிநாயகர் கோவில் வரை கிரிவலப்பாதையில் பக்தர்கள் வசதிக்காக நிழற்பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் வெறும்காலுடன் நடந்து வரும் பக்தர்கள் ஓரளவு சிரமமின்றி செல்லமுடியும்.
கோடைகாலம் முடியும் வரை இந்த பந்தல் இருக்கும் என கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல் ஆங்காங்கே பக்தர்கள் இளைப்பாற தகர பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மே மாதத்தில் கோடைவிடுமுறை தொடங்கும் என்பதால் மேலும் பக்தர்கள் வருகை அதிகரிக்கும் அதற்கு ஏற்ப அவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.
- தூய்மை பணி யாளர்கள் பணிகளுக்கு செல்லாததால் திருக்கோவில் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டது.
- கோவில் அதிகாரிகள் மே 1 ஆம் தேதி ஊதிய உயர்வு தருவதாக உறுதி அளித்தனர்.
பழனி:
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் 330 தூய்மை பணியாளர்கள் படிப்பாதை, மலை க்கோவில், மின் இழுவை ரயில் நிலையம், ரோப் கார் நிலையம், பஞ்சாமிர்தம் தயாரிப்பு நிலையம், கோவில் விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்பட வில்வலை. இது குறித்து பல முறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் இன்று அதிகாலை 5 மணி முதல் தூய்மை பணியில் ஈடுபடச் செல்லாமல் அவர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணிகள் நடைபெற உள்ளதால் பெரும்பாலும் தூய்மை பணியாளர்களே உண்டியல் பெட்டிகளை தூக்கிச் செல்வது நாணயங்களை பிரித்து தருவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருவார்கள். இந்த நிலையில் தூய்மை பணி யாளர்கள் பணிகளுக்கு செல்லாததால் திருக்கோவில் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் கோவில் அதிகாரிகள் மே 1 ஆம் தேதி ஊதிய உயர்வு தருவதாக உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் தற்காலிகமாக பணிக்கு திரும்பினர்.
- பல நாட்களாக இந்தியாவின் பல்வேறு நகரங்களை கடந்து வந்த அவர்கள் தற்போது கேரள மாநில த்திலிருந்து ஆட்டோவில் கொடைக்கானலுக்கு வந்தனர்.
- இங்குள்ள பருவநிலை ஸ்காட்லாந்து நாட்டை நினைவுபடுத்துவதாக உள்ளது என தெரிவித்தனர்.
கொடைக்கானல்:
இந்தியா முழுவதும் ஆட்டோவில் சுற்றி வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் உள்ள சுற்றுலாத் தலங்களை கண்டு களித்தனர்.
ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் மார்க். இவரும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பிராய் என்பவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் ஆட்டோவில் இந்தியா முழுவதும் சுற்றி பார்க்க முடிவு செய்தனர். அதன்படி டெல்லிக்கு வந்த அவர்கள் அங்கிருந்து தங்களது பயணத்தை தொடங்கினர். பல நாட்களாக இந்தியாவின் பல்வேறு நகரங்களை கடந்து வந்த அவர்கள் தற்போது கேரள மாநில த்திலிருந்து ஆட்டோவில் கொடைக்கானலுக்கு வந்தனர்.
பின்னர் இங்குள்ள அடர்ந்த வனப் பகுதிகளான மோயர் பாய்ண்ட், பைன் மரக்காடுகள், குணா குகை, பில்லர் ராக்ஸ், நட்சத்திர ஏரி ஆகியவற்றை பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் நிருபர்களிடம் கூறுகையில், ஸ்காட்லாந்து மற்றும் தாய்லாந்து நாட்டில் இருந்து வந்துள்ளோம். இந்தியா மிகவும் நல்ல மகிழ்ச்சியான நாடு. பல்வேறு மாநிலங்களுக்கு சென்று சுற்றி பார்த்த பின்னர் தற்போது கொடைக்கானல் நகருக்கு வந்துள்ளதாகவும், இங்குள்ள பருவநிலை ஸ்காட்லாந்து நாட்டை நினைவுபடுத்துவதாக உள்ளது என தெரிவித்தனர். நாளை பழனிக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து சிக்கிம் மாநிலம் செல்ல உள்ளதாக தெரி வித்தனர். அவர்கள் வந்த ஆட்டோ அலங்கரிக்கப்பட்டு இருந்ததை சுற்றுலா பயணி களும் பொதுமக்களும் ஆச்சரியத்துடன் கண்டு களித்தனர்.
- பணத்தையும் திருப்பித் தராமல் மோசடி செய்ததோடு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
- அவரை கைது செய்து இது போல் வேறு யாரிடமும் அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டு ள்ளரா? என்ற கோணத்தி லும் விசாரணை நடத்த ப்பட்டு வருகிறது.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி பூஞ்சோலையைச் சேர்ந்த ராமசாமி மகன் பாஸ்கரன். இவர் தனக்கு அரசு வேலை கோரி தேனி மாவட்டம் வீரபாண்டியைச் சேர்ந்த முத்துப்பாண்டி (வயது 40) என்பவரை அணுகினார். இதற்காக ரூ.15 லட்சம் பணமும் பாஸ்ரகன் அவரிடம் கொடுத்தார்.
ஆனால் பணத்தை பெற்றுக் கொண்ட முத்து ப்பாண்டி சொன்னபடி வேலை வாங்கித் தரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாஸ்கரன் தான் கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் பணத்தையும் திருப்பித் தராமல் மோசடி செய்ததோடு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாஸ்கரன் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு எஸ்.பி. உத்தரவிட்டார். அதன் பேரில் டி.எஸ்.பி. இமானுவேல்ராஜ்குமார் தலைமையில் இன்ஸ்பெ க்டர் வினோதா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோ பால் கொண்ட போலீசார் முத்துப்பாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர் இது போல் வேறு யாரிடமும் அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டு ள்ளரா? என்ற கோணத்தி லும் விசாரணை நடத்த ப்பட்டு வருகிறது.
- தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணை த்தனர்.
- கடையில் இருந்த மரங்கள் மற்றும் ஏராளமான பொருட்கள் எரிந்து சாம்பலானது.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 40). இவர் நந்தவனப்பட்டியில் மரக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் வியாபாரத்தை முடித்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இரவு 11.45 மணியளவில் மரக்கடையில் தீ பிடித்து எரிவதாக அவருக்கு செல்போன் மூலம் தகவல் தெரி வித்துள்ளனர்.
இதை கேட்டதும் அலறியடித்து பாலசுப்பிரமணி ஓடி வந்தார். மேலும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். நிலைய அலுவலர் மயில்ராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இருந்த போதும் கடையில் இருந்த மரங்கள் மற்றும் ஏராளமான பொரு ட்கள் எரிந்து சாம்பலானது.
இது குறித்து போலீசாரு க்கும் தகவல் தெரிவிக்கப்ப ட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்ட னர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது யாரேனும் வேண்டுமென்றே தீயை கொளுத்திச் சென்றார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






