என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல்லில் மரக்கடையில் பயங்கர தீ விபத்து
    X

    மரக்கடையில் கொளுந்து விட்டு எரிந்த தீயை படத்தில் காணலாம்.

    திண்டுக்கல்லில் மரக்கடையில் பயங்கர தீ விபத்து

    • தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணை த்தனர்.
    • கடையில் இருந்த மரங்கள் மற்றும் ஏராளமான பொருட்கள் எரிந்து சாம்பலானது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 40). இவர் நந்தவனப்பட்டியில் மரக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் வியாபாரத்தை முடித்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இரவு 11.45 மணியளவில் மரக்கடையில் தீ பிடித்து எரிவதாக அவருக்கு செல்போன் மூலம் தகவல் தெரி வித்துள்ளனர்.

    இதை கேட்டதும் அலறியடித்து பாலசுப்பிரமணி ஓடி வந்தார். மேலும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். நிலைய அலுவலர் மயில்ராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இருந்த போதும் கடையில் இருந்த மரங்கள் மற்றும் ஏராளமான பொரு ட்கள் எரிந்து சாம்பலானது.

    இது குறித்து போலீசாரு க்கும் தகவல் தெரிவிக்கப்ப ட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்ட னர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது யாரேனும் வேண்டுமென்றே தீயை கொளுத்திச் சென்றார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×