என் மலர்
நீங்கள் தேடியது "shadowing in Kriveethi"
- பழனியில் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் அடிவாரத்தில் பக்தர்கள் செருப்பின்றி நடந்து செல்லும்போது சிரமம் அடைந்து வருகின்ற னர்.
- குடமுழுக்கு நினைவரங்கம் முதல் பாதவிநாயகர் கோவில் வரை கிரிவலப்பாதையில் பக்தர்கள் வசதிக்காக நிழற்பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.
பழனி:
தமிழ்கடவுள் முருகனின் 3-ம் படைவீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர். கடந்த சில நாட்களாக பங்குனி உத்திர திருவிழா முடிந்தபின்னரும் பக்தர்கள் கூட்டம் அலை மோதி வருகிறது.
வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் அடிவாரத்தில் பக்தர்கள் செருப்பின்றி நடந்து செல்லும்போது சிரமம் அடைந்து வருகின்ற னர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மலைக்கோவிலில் பக்தர்கள் வசதிக்காக கூலிங்பெயிண்ட் பூசப்பட்டது.
ஆனால் அடிவாரப்பகுதி யில் வெயில் கொடுமையால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வந்தனர். இந்தநிலையில் குடமுழுக்கு நினைவரங்கம் முதல் பாதவிநாயகர் கோவில் வரை கிரிவலப்பாதையில் பக்தர்கள் வசதிக்காக நிழற்பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் வெறும்காலுடன் நடந்து வரும் பக்தர்கள் ஓரளவு சிரமமின்றி செல்லமுடியும்.
கோடைகாலம் முடியும் வரை இந்த பந்தல் இருக்கும் என கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல் ஆங்காங்கே பக்தர்கள் இளைப்பாற தகர பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மே மாதத்தில் கோடைவிடுமுறை தொடங்கும் என்பதால் மேலும் பக்தர்கள் வருகை அதிகரிக்கும் அதற்கு ஏற்ப அவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.






