search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Purity workers"

    • தூய்மை பணி யாளர்கள் பணிகளுக்கு செல்லாததால் திருக்கோவில் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டது.
    • கோவில் அதிகாரிகள் மே 1 ஆம் தேதி ஊதிய உயர்வு தருவதாக உறுதி அளித்தனர்.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் 330 தூய்மை பணியாளர்கள் படிப்பாதை, மலை க்கோவில், மின் இழுவை ரயில் நிலையம், ரோப் கார் நிலையம், பஞ்சாமிர்தம் தயாரிப்பு நிலையம், கோவில் விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்பட வில்வலை. இது குறித்து பல முறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் இன்று அதிகாலை 5 மணி முதல் தூய்மை பணியில் ஈடுபடச் செல்லாமல் அவர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இன்று உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணிகள் நடைபெற உள்ளதால் பெரும்பாலும் தூய்மை பணியாளர்களே உண்டியல் பெட்டிகளை தூக்கிச் செல்வது நாணயங்களை பிரித்து தருவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருவார்கள். இந்த நிலையில் தூய்மை பணி யாளர்கள் பணிகளுக்கு செல்லாததால் திருக்கோவில் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் கோவில் அதிகாரிகள் மே 1 ஆம் தேதி ஊதிய உயர்வு தருவதாக உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் தற்காலிகமாக பணிக்கு திரும்பினர்.

    ×