என் மலர்
திண்டுக்கல்
- ‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் தற்போது குளுகுளு சீசன் நிலவி வருகிறது.
- கொடைக்கானலில் கோடை விழா வருகிற 26-ந்தேதி 60-வது மலர் கண்காட்சியுடன் தொடங்குகிறது.
கொடைக்கானல்:
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் தற்போது குளுகுளு சீசன் நிலவி வருகிறது. இதையொட்டி கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கொடைக்கானலில் நடந்தது. இதற்கு ஆர்.டி.ஓ. ராஜா தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் பெருமாள்சாமி, உதவி இயக்குனர் சைனி, தோட்டக்கலை அலுவலர்கள் பார்த்தசாரதி, சிவபாலன், தாசில்தார் முத்துராமன், சுற்றுலா அலுவலர் சுதா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் ஆர்.டி.ஓ. ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
கொடைக்கானலில் கோடை விழா வருகிற 26-ந்தேதி 60-வது மலர் கண்காட்சியுடன் தொடங்குகிறது. இதில் 3 நாட்கள் மலர் கண்காட்சியும், 8 நாட்கள் கோடை விழாவும் நடைபெறுகிறது. அடுத்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி நிறைவு விழா நடைபெறுகிறது. மலர் கண்காட்சியினை தமிழக அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். விழாவில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட கலெக்டர், பல்வேறு துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். கோடை விழாவில் பல்வேறு பாரம்பரிய மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், படகு போட்டிகள், நாய் கண்காட்சி, படகு அலங்காரப் போட்டி ஆகியவை நடைபெற உள்ளது. விழா நடைபெறும் நாட்களில் பிரையண்ட் பூங்கா இரவு 7 மணி வரை திறந்து இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மலைக்கிராமங்களில் ஓட்டை, உடைசலான பஸ்களே இயக்கப்படுகிறது.
- இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மலைப்பகுதிக்கு முறையாக பஸ்கள் இயக்க வேண்டும்
பெரும்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு விலிருந்து சித்தரேவு, பெரும்பாறை, தடியன்குடிசை வழியாக பண்ணைக்காட்டுக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. பகல் 11.45 மணிக்கு வத்தலகுண்டுவில் இருந்து புறப்படும். இந்த பஸ் பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு, பெரும்பாறை, தடியன்குடிசை, தாண்டிக்குடி வழியாக பண்ணைக்காடு செல்கிறது.
நேற்று இந்த அரசு பஸ் பெரும்பாறை வழியாக பண்ணைக்காடு சென்றது. அப்போது பஸ்சின் பின்னால் டயர் பஞ்சரானது. அதனால் பண்ணைக்காடு செல்லாமல் தடியன்குடிசைக்கு திரும்பியது. மங்களம்கொம்பு, தாண்டிக்குடி, பண்ணைக்காடு சென்ற பயணிகள் மாற்று பஸ்சில் சென்றனர். மலைச்சாலைகளில் இயக்கப்படும் அரசு பஸ் பெரும்பாலும் தரமற்றதாக உள்ளது என டிரைவர்கள் மற்றும் பயணிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பயணிகள் தெரிவிக்கையில், இந்த மலைக்கிராமங்களில் ஓட்டை, உடைசலான பஸ்களே இயக்கப்படுகிறது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றோம். குறிப்பாக குறித்த நேரத்தில் ஊர்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
எனவே இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மலைப்பகுதிக்கு முறையாக பஸ்கள் இயக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பழனி முருகன்கோவிலில் போகர் சன்னதி உள்ளது.
- 18-ந்தேதி போகர் ஜெயந்தி விழா நடக்கிறது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி புலிப்பாணி ஆசிரமத்தை சேர்ந்த சிவானந்தா புலிப்பாணி சுவாமிகள், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
பழனி முருகன்கோவிலில் போகர் சன்னதி உள்ளது. இது, புலிப்பாணி ஆசிரமத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் போகர் ஜெயந்தி விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வருகிற 18-ந் தேதி அந்த விழா நடக்கிறது. ஆனால் இந்த ஆண்டு போகர் ஜெயந்தியை நடத்த அறநிலையத்துறை அதிகாரிகள் தடை விதித்து உள்ளனர்.
இது சட்டத்துக்கும், ஆன்மிகத்துக்கும் புறம்பானது. பழனி கோவிலில் போகர் சன்னதியில் தொன்றுதொட்டு புலிப்பாணி பாத்திர சாமிகள் முறையாக பூஜை செய்து தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். கடந்த ஆண்டுகளில் போகர் ஜெயந்தி விழா அபிஷேக பூஜைகள் நடத்தியதற்கான ஆதாரமாக வீடியோ பதிவுகள் உள்ளன. எனவே வருகிற 18-ந்தேதி அன்றும் வழக்கம் போல போகர் ஜெயந்தி பூஜையை நடத்த அனுமதிக்கும்படி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஸ்ரீமதி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, போகர் சன்னதியில் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வரும் பூஜைக்கு தடை விதிப்பது என்பது சட்டவிரோதம். ஏராளமான பக்தர்களின் எதிர்பார்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக இது அமைந்துள்ளது என தெரிவித்தார். விசாரணை முடிவில், வருகிற 18-ந்தேதி புலிப்பாணி ஆசிரமம் சார்பில் காலை 11 மணி முதல் பகல் 2 மணி வரை போகர் ஜெயந்தி விழாவை முறைப்படி நடத்த அனுமதிக்கப்படுகிறது. போகர் ஜெயந்தியின் போது, மரகதலிங்கத்திற்கும், புவனேஸ்வரி அம்மனுக்கும் வழக்கம் போல் அபிஷேகம் நடத்தவும் அனுமதி வழங்கப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- பணிகள் விரைந்து முடிக்கப்படாத தால் அப்பகுதியின் வழியே செல்லும் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டு உள்ளது .
- பெரும் அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பு பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் அருகே பாம்பார்புரம் பகுதி அமைந்துள்ளது . இந்த பகுதிக்கு செல்லக்கூடிய பிரதான சாலை சுற்றுலா பகுதிகளுக்கு செல்லும் முக்கியசாலையாகவும் இருந்து வருகிறது. பாம்பா ர்புரம் மற்றும் பசுமை பள்ளத்தாக்கு செல்ல க்கூடிய பிரதான சாலை களில் நெடுஞ்சாலைத்துறை மூலமாக பாலம் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது .
இந்தப் பணிகள் விரைந்து முடிக்கப்படாத தால் அப்பகுதியின் வழியே செல்லும் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டு உள்ளது . மேலும் அப்பகுதியில் முறையான எச்சரிக்கை பலகையும் வைக்கப்படாத தால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்ற னர் . எனவே பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. இரவு நேரங்களில் வரும் வெளியூர் வாகனங்கள் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். பெரும் அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பு பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பக்தர்கள் 10 அடி நீள வேல்கம்பை அலகு குத்தியபடி பூக்குழி இறங்கி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
- ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
செம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம், பிள்ளையார்நத்தத்தில் 55-வது மகாமுத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு அனுமந்தராயன்கோட்டை அருகே உள்ள குடகனாற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். இதைதொடர்ந்து கோவிலில் பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாலை பிள்ளையார் கோவிலில் இருந்து அக்னிசட்டி எடுத்துவரப்பட்டது.
சிலர் ஒருகையில் குழந்தையுடனும், மறுகையில் அக்னிசட்டியுடனும் பூக்குழி இறங்கிய காட்சி பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்தது. சில பக்தர்கள் 10 அடி நீள வேல்கம்பை அலகு குத்தியபடி பூக்குழி இறங்கி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இதைதொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு வழிபாடும், தீபாராதனைகளும் காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.
- மாடுபிடி வீரர்கள் 100 பேர் குழுக்களாக பிரிக்கப்பட்டு காளைகளை அடக்க அனுமதிக்கப்பட்டனர்.
- ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்குவதற்கு வீரர்களிடையே கடும் போட்டி நிலவியது.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே அய்யாபட்டியில் காளியம்மன், கருப்புசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவையொட்டி, அங்குள்ள மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. இதனை திண்டுக்கல் ஆர்.டி.ஓ. ஜீவா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பின்னர் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். அதன்பின்னர் ஜல்லிக்கட்டு தொடங்கியது.
ஜல்லிக்கட்டில் பங்கேற்க வந்த காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனை யாரும் பிடிக்கவில்லை. இதைத்தொடர்ந்து திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, திருச்சி, கோபால்பட்டி, கொசவபட்டி தவசிமடை நத்தமாடிப்பட்டி, சொரிப்பாறைப்பட்டி, அலங்காநல்லூர் பாலமேடு ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 300 காளைகள் ஜல்லிக்கட்டில் களம் இறங்கின. மாடுபிடி வீரர்கள் 100 பேர் குழுக்களாக பிரிக்கப்பட்டு காளைகளை அடக்க அனுமதிக்கப்பட்டனர்.
ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்குவதற்கு வீரர்களிடையே கடும் போட்டி நிலவியது. துள்ளிக்குதித்த காளைகளை அடக்க காளையர்கள் மல்லுக்கட்டினர். வீரர்களிடம் சிக்காமல் சில காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின. பல காளைகளை வீரர்கள் போட்டிபோட்டு மடக்கி பிடித்து அடக்கினர்.
காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத மாடுகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம், வெள்ளி காசுகள், கட்டில், நாற்காலி, சைக்கிள், பீரோ, எவர்சில்வர் மற்றும் பித்தளை பாத்திரங் கள், வேட்டி, துண்டுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக் கட்டு நிகழ்ச்சியை திண்டுக்கல் மட்டுமின்றி பிற மாவட்டங் களை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் வந்திருந்தனர்.
முன்னதாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை திண்டுக்கல் கோட்டாட்சியர் பிரேம்குமார், நத்தம் தாசில்தார் சுகந்தி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை அய்யாபட்டி கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.
- பொதுமக்கள் நாளை கண்டிப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தியே ஆக வேண்டும் என கூறினர்.
- சாலை மறியலில் ஈடுபட்ட பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார்.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அய்யாபட்டியில் காளியம்மன், கருப்புசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு திருவிழா நடைபெறும். அதன்படி நாளை (12-ந்தேதி) ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டன. வாடிவாசல் அமைத்தல், பார்வையாளர்களுக்கான கேலரி உள்ளிட்டவை அமைக்கப்பட்டிருந்த நிலையில் ஆர்.டி.ஓ பார்வையிட இன்று வருகை தந்தார்.
அப்போது வாடிவாசல் பகுதி ஈரமாக இருப்பதால் பாதுகாப்பு குறைபாடு உள்ளது எனக்கூறி அடுத்தவாரம் நடத்திக்கொள்ளலாம் எனக்கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்ட நிலையில் எதற்காக அனுமதி தர மறுக்கிறீர்கள் என கூறி அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாலைமறியல் செய்தனர்.
இதனால் அங்கு கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தாசில்தார் சுகந்தி மற்றும் நத்தம் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் நாளை கண்டிப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தியே ஆக வேண்டும் என கூறினர். இதனிடையே சாலை மறியலில் ஈடுபட்ட பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார்.
அவரை ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அதிகாரிகளின் சமரசத்தை ஏற்க மறுத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
- இரு வீட்டிலும் தங்க நகைகளை திருடியவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் .
- ரூ.20 ஆயிரம் அபராதம் கட்ட வேண்டும் என்றும் கட்ட தவறினால் மேலும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார்.
கொடைக்கானல்:
தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்த ராமையா மகன் பொன்ராஜ் (47). தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இவர் மீது 17 திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் தேதி கொடைக்கானல் கீழ் மலைப் பகுதியான தாண்டிக்குடி பகுதியை சேர்ந்த விவசாயி பொன் ரமேஷ் என்பவரது வீட்டில் பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகைகளை திருடி சென்றுள்ளார்.
இதே போல கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நான்காம் தேதி பண்ணைக்காடு பகுதியில் சண்முகம் மனைவி வீரலட்சுமி வீட்டில் பீரோவில் இருந்த 16 பவுன் தங்க நகைகளை திருடி சென்றுள்ளார். இது பற்றி பொன் ரமேஷ் மற்றும் வீரலட்சுமி ஆகியோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தாண்டி குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து இரு வீட்டிலும் தங்க நகைகளை திருடிய பொன்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர் .
இந்த வழக்கை விசாரித்த கொடைக்கானல் நீதிபதி கார்த்திக் 2 திருட்டு வழக்குகளிலும் தலா 3 ஆண்டுகள் என மொத்தம் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். ரூ.20 ஆயிரம் அபராதம் கட்ட வேண்டும் என்றும் கட்ட தவறினால் மேலும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார். கொடைக்கானல் கீழ் மலையில் இரண்டு திருட்டு வழக்குகளில் ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தேக்கடி 15வது மலர் கண்காட்சி குமுளி-தேக்கடி ரோடு கல்லறைக்கல் மைதானத்தில் கடந்த ஏப்.1-ந்தேதி தொடங்கியது.
- நீட்டிக்கப்பட்ட நாட்களில் புதியதாக கருத்தரங்கம், நாடகம், முக்கிய பொழுதுபோக்கு நிகழ்வுகள் நடப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
கூடலூர்:
தேக்கடி வேளாண் தோட்டக்கலை சங்கம், குமுளி பஞ்சாயத்து நிர்வாகம், மன்னாரத்தரை கார்டன் இணைந்து நடத்தும் தேக்கடி 15வது மலர் கண்காட்சி குமுளி-தேக்கடி ரோடு கல்லறைக்கல் மைதானத்தில் கடந்த ஏப்.1-ந்தேதி தொடங்கியது.
நூற்றுக்கணக்கான மலர் வகைகள், அலங்கார செடிகள், சமையலறைத் தோட்டம் அமைக்க தேவையான செடிகள், நாற்றுகள் அனைத்தும் பார்வையாளர்களை கவரும் வகையில் இந்த மலர் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. தற்போது தமிழகம்-கேரள மாநிலம் பகுதியில் கோடை விடுமுறை காலமாக உள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனைத் தொடர்ந்து, தேக்கடி மலர் கண்காட்சி வரும் 21-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் தாமஸ் கூறுகையில்,
மலர் கண்காட்சி கடந்த ஏப். 1-ந் தேதி முதல் மே 14-ந்தேதி வரை நடப்பதாக அறிவிக்கப்பட்டு நடந்துவருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோடை விடுமுறையை தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமானதால் மே 14-ந்தேதி வரை நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த மலர் கண்காட்சி மேலும் ஒரு வாரம், அதாவது வரும் 21-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நீட்டிக்கப்பட்ட நாட்களில் புதியதாக கருத்தரங்கம், நாடகம், முக்கிய பொழுதுபோக்கு நிகழ்வுகள் நடப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. கண்காட்சிக்கு நுழைவுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 7 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கும், ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லத்தில் இருப்பவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் கட்டணம் கிடையாது என்று அவர் தெரிவித்தார்.
- பூரணத்திற்கு 103 வயது எட்டியதை தொடர்ந்து அவரிடம் குடும்பத்தினர் அனைவரும் ஆசிபெறும் நிகழ்ச்சி தன்னார்வலர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
- நான் சுற்றிப்பார்க்க நினைத்த அனைத்து ஆன்மீக தலங்களுக்கும் எனது பிள்ளைகள் என்னை அழைத்துச்சென்று வந்துள்ளனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லை சேர்ந்த சுப்பையா மனைவி பூரணம்(103). இவருக்கு 3 மகன், 3 மகள்கள் உள்ளனர். கணவர் இறந்துவிட்ட நிலையில் தனது மகள், மகன்களை படிக்க வைத்து அனைவருக்கும் திருமணம் செய்து வைத்தார். இவர்கள் மூலம் பேரன், கொள்ளுபேரன், எள்ளுபேரன் என இவர்கள் குடும்பத்தில் 40-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
பூரணத்திற்கு 103 வயது எட்டியதை தொடர்ந்து அவரிடம் குடும்பத்தினர் அனைவரும் ஆசிபெறும் நிகழ்ச்சி தன்னார்வலர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், கொள்ளுபேரன்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அனைவரையும் ஒரே நேரத்தில் சந்தித்த பூரணம் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
நான் 1921-ம் ஆண்டு பிறந்தேன். மாதம், தேதி எதுவும் தெரியாது. எனக்கு தற்போது 103 வயது ஆகிறது. தற்போது எனது 5-வது தலைமுறையை பார்ப்பதில் மகிழ்ச்சி. நீண்ட ஆயுளை கொடுத்த கடவுளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தற்போதும் நான் ஆரோக்கியமாகத்தான் உள்ளேன். அதற்கு காரணம் சிறுவயது முதலே உடற்பயிற்சிகள் போல பல்வேறு வேலைகளை செய்துள்ளேன். சத்தான உணவுகளை சாப்பிட்டு வந்தேன். அந்த காலத்தில் திண்டுக்கல் நகரில் தண்ணீர் பிடிப்பதற்கு பல மைல் தூரம் கடந்து செல்ல வேண்டும்.
அப்போது நானும் குடத்தை இடுப்பில் வைத்துக்கொண்டு பல மைல் தூரம் சென்று தண்ணீர் எடுத்து வந்துள்ளேன். இதுபோன்ற சம்பவம் தினந்தோறும் நடக்கும். 20 ஆண்டுகளுக்கு மேலாக பழனிக்கு பாதயாத்திரையாக நடந்து சென்று சாமி தரிசனம் செய்து வந்துள்ளேன். நான் சுற்றிப்பார்க்க நினைத்த அனைத்து ஆன்மீக தலங்களுக்கும் எனது பிள்ளைகள் என்னை அழைத்துச்சென்று வந்துள்ளனர்.
தற்போது எனது வாரிசுகளுடன் நிம்மதியாக வாழ்கிறேன். எனது குடும்பத்தினர் அனைவரும் என்னிடம் ஆசிபெற்றதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. தற்போதுள்ள குழந்தைகள் சாப்பிடும் துரித உணவுகளை தவிர்த்து பாரம்பரிய உணவுகளை சாப்பிட்டு அன்றாட வீட்டு வேலைகளை நாமே செய்தால் அனைவரும் என்னைப்போல 100 வயதை கடந்தும் ஆரோக்கியமாக வாழலாம் என்றார்.
- பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவிகளிடம் இருந்து ஆன்லைன்மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
- முதலா மாண்டு மாணவிகளுக்கான வகுப்புகள் ஜூன் 22-ந்தேதி முதல் தொடங்கும் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
நிலக்கோட்ைட:
நிலக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் பி.ஏ தமிழ், ஆங்கிலம், பொரு ளாதாரம், பி.பி.ஏ., பி.எஸ்.சி., கணிதம், வேதியியல், இயற்பியல், கணினி அறிவியல், புவியியல் உள்ளிட்ட பாடப்பிரிவு களுக்கு பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவிகளிடம் இருந்து ஆன்லைன்மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
கடந்த 8-ந்தேதி முதல் வருகிற 19-ந்தேதி வரை காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை கல்லூரியில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஓ.சி, பி.சி, எம்.பி.சி, மாணவிகளுக்கு ரூ.50 கட்டணம் நிர்ணயிக்கப்ப ட்டுள்ளது. எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு ரூ.2 பதிவு கட்டணம் செலுத்தினால் போதும். மாற்றுத்திறனாளி கள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரரின் குழந்தைகள் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீட்டு மாணவி களுக்கான கலந்தாய்வு 25-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடைபெறும்.
முதற்கட்ட கலந்தாய்வு மே 30 முதல் ஜூன் 9-ந்தேதி வரையிலும், 2-ம் கட்ட கலந்தாய்வு ஜூன் 12 முதல் 20 வரையும் நடைபெற உள்ளது. முதலா மாண்டு மாணவிகளுக்கான வகுப்புகள் ஜூன் 22-ந்தேதி முதல் தொடங்கும் என கல்லூரி முதல்வர் சீனிவாசன் தெரிவித்து ள்ளார்.
- கடந்த 2018-ம் ஆண்டு ஜாமீனில் வெளிவந்த மாதவன் அதன்பிறகு தலைமறைவாகவே வாழ்ந்து வந்தார்.
- போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்த நிலையில் தற்போது செல்போன் திருடிய போது சிக்கி கொண்டது தெரிய வந்தது.
வேடசந்தூர்:
வேடசந்தூர் கணபதி நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக வாலிபர் சுற்றித்திரிந்தார். அப்பகுதியில் உள்ள வீட்டில் தூங்கி கொண்டு இருந்தவரின் செல்போனை திருட முயன்றபோது அப்பகுதி பொதுமக்கள் வாலிபரை மடக்கிபிடித்து வேடசந்தூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
கடந்த 2012-ம் ஆண்டு ரேசன் கடைக்குள் புகுந்து பொருட்களை திருடியதாக திண்டுக்கல் நாகல்நகர் பாரதிபுரத்தை சேர்ந்த மாதவன்(35) என்பவரை போலீசார் கைது செய்தனர். கடந்த 2018-ம் ஆண்டு ஜாமீனில் வெளிவந்த மாதவன் அதன்பிறகு தலைமறைவாகவே வாழ்ந்து வந்தார்.
வேடசந்தூர் கோர்ட்டு அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்தது. இதனைதொடர்ந்து போலீ சார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலை யில் தற்போது செல்போன் திருடிய போது சிக்கி கொண்டது தெரிய வந்தது. இதனைதொடர்ந்து போலீ சார் அவரை வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவுப்படி சப்-இன்ஸ்பெக்டர் வேல்மணி தலைமையிலான போலீசார் மாதவனை சிறையில் அடைத்தனர்.






