என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேடசந்தூரில் செல்போன் திருடிய வாலிபரை மடக்கி பிடித்த மக்கள்
    X

    கைது செய்யப்பட்ட மாதவன்.

    வேடசந்தூரில் செல்போன் திருடிய வாலிபரை மடக்கி பிடித்த மக்கள்

    • கடந்த 2018-ம் ஆண்டு ஜாமீனில் வெளிவந்த மாதவன் அதன்பிறகு தலைமறைவாகவே வாழ்ந்து வந்தார்.
    • போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்த நிலையில் தற்போது செல்போன் திருடிய போது சிக்கி கொண்டது தெரிய வந்தது.

    வேடசந்தூர்:

    வேடசந்தூர் கணபதி நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக வாலிபர் சுற்றித்திரிந்தார். அப்பகுதியில் உள்ள வீட்டில் தூங்கி கொண்டு இருந்தவரின் செல்போனை திருட முயன்றபோது அப்பகுதி பொதுமக்கள் வாலிபரை மடக்கிபிடித்து வேடசந்தூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    கடந்த 2012-ம் ஆண்டு ரேசன் கடைக்குள் புகுந்து பொருட்களை திருடியதாக திண்டுக்கல் நாகல்நகர் பாரதிபுரத்தை சேர்ந்த மாதவன்(35) என்பவரை போலீசார் கைது செய்தனர். கடந்த 2018-ம் ஆண்டு ஜாமீனில் வெளிவந்த மாதவன் அதன்பிறகு தலைமறைவாகவே வாழ்ந்து வந்தார்.

    வேடசந்தூர் கோர்ட்டு அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்தது. இதனைதொடர்ந்து போலீ சார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலை யில் தற்போது செல்போன் திருடிய போது சிக்கி கொண்டது தெரிய வந்தது. இதனைதொடர்ந்து போலீ சார் அவரை வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவுப்படி சப்-இன்ஸ்பெக்டர் வேல்மணி தலைமையிலான போலீசார் மாதவனை சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×