என் மலர்
உள்ளூர் செய்திகள்

பூக்குழி இறங்கி நேர்த்திக்கடனை நிறைவேற்றிய பெண் பக்தர்.
பிள்ளையார்நத்தத்தில் மகாமுத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி
- பக்தர்கள் 10 அடி நீள வேல்கம்பை அலகு குத்தியபடி பூக்குழி இறங்கி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
- ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
செம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம், பிள்ளையார்நத்தத்தில் 55-வது மகாமுத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு அனுமந்தராயன்கோட்டை அருகே உள்ள குடகனாற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். இதைதொடர்ந்து கோவிலில் பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாலை பிள்ளையார் கோவிலில் இருந்து அக்னிசட்டி எடுத்துவரப்பட்டது.
சிலர் ஒருகையில் குழந்தையுடனும், மறுகையில் அக்னிசட்டியுடனும் பூக்குழி இறங்கிய காட்சி பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்தது. சில பக்தர்கள் 10 அடி நீள வேல்கம்பை அலகு குத்தியபடி பூக்குழி இறங்கி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இதைதொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு வழிபாடும், தீபாராதனைகளும் காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.






