search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kodaikanal flower show"

    • ‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் தற்போது குளுகுளு சீசன் நிலவி வருகிறது.
    • கொடைக்கானலில் கோடை விழா வருகிற 26-ந்தேதி 60-வது மலர் கண்காட்சியுடன் தொடங்குகிறது.

    கொடைக்கானல்:

    'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் தற்போது குளுகுளு சீசன் நிலவி வருகிறது. இதையொட்டி கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கொடைக்கானலில் நடந்தது. இதற்கு ஆர்.டி.ஓ. ராஜா தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் பெருமாள்சாமி, உதவி இயக்குனர் சைனி, தோட்டக்கலை அலுவலர்கள் பார்த்தசாரதி, சிவபாலன், தாசில்தார் முத்துராமன், சுற்றுலா அலுவலர் சுதா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் ஆர்.டி.ஓ. ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொடைக்கானலில் கோடை விழா வருகிற 26-ந்தேதி 60-வது மலர் கண்காட்சியுடன் தொடங்குகிறது. இதில் 3 நாட்கள் மலர் கண்காட்சியும், 8 நாட்கள் கோடை விழாவும் நடைபெறுகிறது. அடுத்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி நிறைவு விழா நடைபெறுகிறது. மலர் கண்காட்சியினை தமிழக அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். விழாவில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட கலெக்டர், பல்வேறு துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். கோடை விழாவில் பல்வேறு பாரம்பரிய மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், படகு போட்டிகள், நாய் கண்காட்சி, படகு அலங்காரப் போட்டி ஆகியவை நடைபெற உள்ளது. விழா நடைபெறும் நாட்களில் பிரையண்ட் பூங்கா இரவு 7 மணி வரை திறந்து இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கொடைக்கானல் கோடை விழாவில் 57-வது மலர் கண்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். #Kodaikanal #FlowerShow #TNCM #EdappadiPalanisamy
    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி எனப்படும் கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 57-வது மலர் கண்காட்சி பிரையண்ட் பூங்காவில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். பின்னர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    பின்னர் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் ரூ.1485 லட்சம் மதிப்பில் கொடைக்கானல் ரோஜா தோட்டம், கொய்மலர்கள் செயல்விளக்க மாதிரி தோட்டத்தை தொடங்கி வைத்தார்.

    கோடை விழாவை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.

    அதன்பின் வேளாண்மைத்துறை சார்பில் ரூ.960 லட்சம் மதிப்பில் முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ.385 லட்சம் மதிப்பில் 2 திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் ரூ.775.40 லட்சம் மதிப்பில் 3495 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை வகித்து பேசினார். அமைச்சர்கள் துரைக்கண்ணு, வெல்லமண்டி நடராஜன், உதயகுமார் எம்.பி., கலெக்டர் வினய் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அரசு முதன்மை செயலர் அபூர்வவர்மா, வேளாண்துறை முதன்மை செயலர் ககன்தீப்சிங்பேடி, மேலாண்மை இயக்குனர் பழனிகுமார், சுப்பையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  #Kodaikanal #FlowerShow #TNCM #EdappadiPalanisamy

    ×