என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • விபத்தில் சிக்கிய வாகனம் மற்றும் கோழிகளை அப்புறப்படுத்தி போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

    வடமதுரை:

    திருச்சியை சேர்ந்த பிலால்முகமது மகன் ராஜா (வயது25). இவர் சொந்தமாக சரக்கு வாகனம் வைத்து ஓட்டி வருகிறார். இவர் திருச்சியில் இருந்து வத்தலக்குண்டுவிற்கு கோழிகளை ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்தார். அவருடன் லோடுமேன்களாக திருச்சியை சேர்ந்த சபீர்முகமது (20), திருவெறும்பூரை சேர்ந்த லோகநாதன் ஆகியோரும் வந்தனர்.

    திண்டுக்கல்-திருச்சி ரோடு மூணாண்டிபட்டி அருகே இன்று காலை வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பின்பக்க டயர் வெடித்து வேன் கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த 3 பேரும் படுகாயம் அடைந்தனர். மேலும் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான கோழிகளும் உடல் நசுங்கி பலியானது. அப்போது நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் சிக்கிய வாகனம் மற்றும் கோழிகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

    இன்று அதிகாலை நடந்த இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பின்னர் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது.

    • வாலிபர் ஒருவர் சேர்ந்த 32 வயது மனநலம் பாதித்த பெண்ணை தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார்.
    • புகாரின் பேரில் போலீசார் வாலிபரை கைது செய்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகில் உள்ள ஆவிளிபட்டியை சேர்ந்தவர் பிரசாந்த்(29). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தை உள்ளனர். டைல்ஸ்ஒட்டும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதேபகுதியை சேர்ந்த 32 வயது மனநலம் பாதித்த பெண்ணை தொட ர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார்.

    இதனால் அந்த பெண் 4 மாத கர்ப்பிணியானார். அவரது உடலில் ஏற்பட்ட மாற்றங்களை அடுத்து பெற்றோர் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அழைத்து ச்சென்ற னர். அப்போது அவர் கர்ப்பிணி யாக இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடை ந்தனர். இதுகுறித்து சாணா ர்பட்டி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி வழக்கு பதிவு செய்து பிரசாந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • 109 ஆம் ஆண்டு பெருவிழா, கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • அ.தி.மு.க பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி. சீனிவாசன் கலந்து கொண்டு சப்பர பவனியை தொடங்கி வைத்தார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மறைமாவட்டம் மேற்கு மரியநாதபுரம் பங்கு புனித விண்ணேற்பு அன்னையின் ஆண்டு பெருவிழா வருடந்தோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் படி 109 ஆம் ஆண்டு பெருவிழா, கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து நாள்தோறும் நவநாள் திருப்பலி நடைபெற்றது.

    இந்நிலையில் நேற்று இரவு சப்பர பவனி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி. சீனிவாசன் கலந்து கொண்டு சப்பர பவனியை தொடங்கி வைத்தார்.

    இதில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பாரதி முருகன், இளைஞரணி மாவட்ட செயலாளர் வி.டி.ராஜன், பகுதி செயலாளர்கள் மோகன், சுப்பிரமணி, முரளி, வார்டு செயலாளர் சிரியோன், சக்கிரியஸ், வில்லியம் ஜான் போஸ்கோ மற்றும் பங்குத்தந்தை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கொடைக்கானல் மலைப்பகுதியிலுள்ள வடகரைப்பாறை ஊரில் உலகத் தொல்குடிகள் நாள் விழா கொண்டாடப்பட்டது.
    • பழங்குடிகள் எந்தக் காரணத்தினாலும் கல்வியைக் கைவிடக்கூடாது என கூட்டத்தில் பேசப்பட்டது.

    சின்னாளபட்டி:

    காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலை க்கழகத் தமிழ்த்துறை சார்பாக கொடைக்கானல் மலைப்பகுதியிலுள்ள வடகரைப்பாறை ஊரில் உலகத் தொல்குடிகள் நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்குத் காந்தி கிராமியப் பல்கலைகழகத் தமிழ்த்துறைத் தலைவர், பேராசிரியர் முத்தையா தலைமை தாங்கி பேசியதாவது,

    இந்தியாவின் வரலாறு பழங்குடிகளிட மிருந்தே எழுதப்பட வேண்டும். இசை, பண்பாடு முதலான எல்லாவற்றிலும் தனித்த அடையாளங்க ளுடன் இந்தியா முழுவதும் 37 பழங்குடி இனங்கள் வாழ்ந்து வருகின்றன. ஐ.நா.சபை பழங்குடி இளைஞர்களின் வழியாக அவர்களது பண்பாட்டை மீட்டெடுக்க வேண்டும் என்பதை இந்த ஆண்டுக்கான இலக்காக அறிவித்துள்ளது.

    ஆகவே, பழங்குடிகளின் பாரம்பரிய அறிவைப் போற்றிப் பாதுகாப்பதுடன் அதைப் பரவச்செய்வது நமது கடமையாகும் என்று அவர் பேசினார். இதையடுத்து மதுரைத் தியாகராசர் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் கோவிந்தராஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசியதாவது, கல்வியால் மட்டுமே ஒரு இனம் தலைநிமிரும். நம்முடைய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மூ கல்வியால் உயர்ந்த பழங்குடிக்கு மிகச் சிறந்த சான்றாவார்.

    சவ்வாது மலையில் வாழும் மலை யாளிப் பழங்குடி இனத்தில் பிறந்த நான் இன்றைக்குப் பேராசிரியராக உயர்ந்திரு ப்பதற்கும் கல்வியே காரணம். பழங்குடிகள் எந்தக் காரணத்தினாலும் கல்வியைக் கைவிடக்கூடாது என்று அவர் பேசினார். நிகழ்ச்சியில், நிலக்கோட்டை, ஆதி திராவிடர் நலத்துறைத் தனி வட்டாட்சியர் காளி முத்து, வடகரைப்பாறையில் அரசுபழங்குடியினர் உண்டு உறைவிடத் தொடக்கப்ப ள்ளியின் தலைமையாசிரியர் செல்வி, பண்ணைக்காடு பேரூராட்சித் தலைவர் மணிகண்டன், மாவட்டத் திட்டக்குழு உறுப்பினர் திருமலைச்செல்வன்,

    பேரூராட்சி மன்ற உறுப்பி னர் தங்கதுரை, ஆண்டனி, மோனா ஆகியோர் பழங்குடிகளுக்கான அரசு நலத்திட்டங்களை எடுத்துக்கூறி வாழ்த்துரை வழங்கினர். விழாவில் பழங்குடியின மாண வர்களுக்குத் திருக்குறள் ஒப்புவித்தல், ஆடல், பாடல் முதலான போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்கப்பட்டன. பளியர் இனத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள் பாரம்பரிய இசைக் கருவிகளை இசைத்தனர். ஊர் மக்கள், பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள், முதுகலை மாணவர்கள் முதலானோர் திரளாகக் கலந்து கொண்டனர். தமிழ்த்துறை யின் உதவிப்பேராசிரியர் சிதம்பரம் அனைவரையும் வரவேற்றார். தமிழ்த்துறை விரிவுரையாளர் முனைவர் சிவா அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

    • புனித சலேத் அன்னை 157-ம் ஆண்டு புனிதப் பெருவிழா கடந்த மாதம் 30 - ஆம் தேதி கொடியேற்ற த்துடன் தொடங்கியது.
    • இரவு முழுவதும் பவனி வந்த தேர் பவனியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் வரலாற்றுச்சிறப்பு மிக்க புனித சலேத் அன்னை 157-ம் ஆண்டு புனிதப் பெருவிழா கடந்த மாதம் 30 - ஆம் தேதி கொடியேற்ற த்துடன் தொடங்கியது. கடந்த 10 - நாட்களுக்கு மேலாக ஒவ்வொரு நாளும் சலேத் அன்னைக்கு சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது.

    பாரிஸ் நகரில் லா சலேத் எனும் சிற்றூரில் காட்சி கொடுத்து 1886 -ஆம் ஆண்டு கொடைக்கானலில் சிருஷ்டிக்கப்பட்ட புனித சலேத் அன்னை திருத்தலத்தில் ஒவ்வொரு வருடம் ஆகஸ்டு மாதத்தில் 15 நாட்களுக்கு இங்கு சிறப்பு திருப்பலிகளுடன் நடைபெறும். பெருவிழா ஆகஸ்ட் 14, 15 ஆகிய தேதியில் நிறைவுறும். அதன்படி உயர்மறை மாவட்ட அருட்தந்தையர்கள் மற்றும் பங்குத் தந்தைகள், பேராயர்கள் கலந்து கொண்டு திருப்பலிகளை நிறைவேற்றினர்.

    அதன் பின்னர் புனித சலேத் அன்னை ,காவல் தெய்வம், திருஇருதய ஆண்டவர்,புனித சூசையப்பர் ஆகிய திருஉருவங்களின் மின் அலங்கார தேர்பவனி செயின்ட் மேரீஸ் சாலையில் தொடங்கி பஸ் நிலையம், அண்ணா சாலை வழியாக மூஞ்சிக்கல் புனித இருதய ஆண்டவர் திருத்தலத்தை சென்றடைந்தது.இரவு முழுவதும் பவனி வந்த தேர் பவனி மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதில் பல ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டு புனித சலேத் அன்னையின் ஆசி பெற்று சென்றனர்.

    • 2 மின் இழுவை ரெயில்கள் செயல்படும் நிலையில் 3-வது மின் இழுவை ரெயிலுக்கான 2 பெட்டிகள் ரூ.1 கோடி மதிப்பில் சென்னையில் தயாரிக்கப்பட்டது.
    • பணிகள் நிறைவு பெற்றபின் நிபுணர்கள் ஆய்வுக்குப் பிறகு மீண்டும் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசிக்க வருகின்றனர். இந்நிலையில் மலைக்கோவில் சென்று வர மின் இழுவை ரெயில், ரோப்கார், படிப்பாதை பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2 மின் இழுவை ரெயில்கள் செயல்படும் நிலையில் 3-வது மின் இழுவை ரெயிலுக்கான 2 பெட்டிகள் ரூ.1 கோடி மதிப்பில் சென்னையில் தயாரிக்கப்பட்டது.

    குளிர்சாதன வசதி, கண்காணிப்பு கேமரா வசதி உள்ளிட்ட பலதரப்பட்ட வசதிகள் கொண்ட இந்த பெட்டிகள் தலா 3.6 டன் எடையுடையது. சில மாதங்களுக்கு முன்பு இந்த பெட்டிகளை இணைத்து சோதனை செய்யப்பட்ட நிலையில் முதல் பெட்டியில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து மாற்றங்கள் செய்யப்பட்டது.

    இதைத் தொடர்ந்து 2 பெட்டிகள் இணைக்கப்பட்டு தற்போது சோதனை செய்ய ப்பட்டது. புதிய பெட்டி களுக்கு ஏற்றாற்போல் பிளாட்பாரமும் மாற்றிய மைக்கப்படுகிறது. இதன் பணிகள் நிறைவு பெற்றபின் நிபுணர்கள் ஆய்வுக்குப் பிறகு மீண்டும் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.

    இதற்கு முன் படிப்படி யாக எடை அதிகரித்து மின் இழுவை ரெயிலை இயக்கி சரிபார்க்கப்படும். சோதனை ஓட்டத்துக்கு பின்பு நிபுணர்கள் ஒப்புதல் பெற்று பக்தர்கள் பயன்பா ட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது.

    • சுதந்திரதின விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், கலெக்டர் பூங்கொடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
    • இவ்விழாவில் 223 பயனாளிகளுக்கு ரூ.1.01 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.

    திண்டுக்கல்:

    சுதந்திரதின விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், கலெக்டர் பூங்கொடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் காவல்துறை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பை பார்வை யிட்டு அணிவகுப்பு மரியா தையை ஏற்றுக்கொண்டார்.

    தொடர்ந்து சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்தி, சமாதானத்தின் அடை யாளமாக வெண்புறாக்கள் மற்றும் வண்ண பலூன்களை பறக்கவிட்டார். திண்டுக்கல் டி.ஐ.ஜி. அபினவ்குமார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் சேக் முகையதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினர் 73 பேருக்கு பாராட்டுச் சான்றி தழ்கள் மற்றும் பதக்கங்களை கலெக்டர் வழங்கினார்.

    தொடர்ந்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி த்துறை அலுவலர்கள், பேரூராட்சித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 165 அலுவலர்களை பாராட்டி, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை கலெக்டர் வழங்கினார்.

    இவ்விழாவில் 223 பயனாளிகளுக்கு ரூ.1.01 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார். இதனைத் தொடர்ந்து மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாணவ, மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடை பெற்றன. இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல்லைச் சேர்ந்த பல்வேறு பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    முன்னதாக திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு கலெக்டர் பூங்கொடி மாலை அணிவித்து மலர் தூவி மாரியாதை செலுத்தினார்.

    இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊராட்சித் தலைவர் பாஸ்கரன், மாவட்ட ஊராட்சி துணை த்தலைவர் பொன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் நகரின் பல்வேறு சாலைகள் சுற்றுலா வாகனங்களால் போக்குவரத்து நெரிசலில் தினறி வருகிறது.
    • அதிக பணி சுமையால் தற்போது கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் உள்ள போக்குவரத்து போலீசார் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் நகரின் பல்வேறு சாலைகள் சுற்றுலா வாகனங்களால் போக்குவரத்து நெரிசலில் தினறி வருகிறது.

    வெள்ளி நீர் வீழ்ச்சி முதல் நகராட்சி அலுவலகம் அமைந்துள்ள ஏரி சாலை பகுதி வரை உள்ள நெடு ஞ்சாலையில் சாலையின் இரு புறங்களிலும் கடை களை அமைத்து போக்கு வரத்து நெரிசலை ஏற்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக பெருமாள் மலை முதல் கொடைக்கானல் சுங்கச்சாவடி வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

    இதேபோல் பெருமாள் மலை பகுதியிலிருந்து பழனிக்கு திரும்பும் சாலை யின் இரு பகுதிகளிலும் பிரதான சாலைகளிலேயே கடைகள் அமைத்துள்ளதால் அரசு பஸ்களும், சுற்றுலா வாகனங்களும், பொதுமக்களும் பெருமாள் மலைப் பகுதியை கடப்பதில் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் கொடைக்கானலில் பரபரப்பாகவும், நகரின் மையப்பகுதியாகவும் அமைந்துள்ளது மூஞ்சிக்கல் பகுதியாகும். இதே பகுதியில் தான் கொடைக்கானல் நெடுஞ்சாலை துறை அலுவலகம் உள்ளது. மூஞ்சிக்கல் பஸ் நிறுத்த பகுதியிலிருந்து கல்லறை மேடு பகுதி பஸ் நிறுத்தம் வரை தங்கள் இஷ்டம் போல் நெடுஞ்சாலைகளில் தற்காலிக கடைகள் அமைத்துள்ளனர்.

    இதனால் அதே சாலை பகுதியில் அமைக்கப்பட்டு ள்ள நிரந்தரக் கடைகளில் பொருட்களை வாங்கும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நிறுத்தப்படு வதால் கொடைக்கானல் நகருக்குள் நுழையும் உள்ளூர் மற்றும் வெளியூர் வாகனங்கள் நெடு ஞ்சாலைகளிலேயே நீண்ட நேரம் நிற்கும் அவலம் உள்ளது.

    பெருமாள் மலையில் இருந்து கொடைக்கானல் நகர் பகுதிக்குள் நுழையும் 12 கி.மீ. சாலையை கடப்ப தற்குள் கொடைக்கானலுக்கு ஏன் சுற்றுலா வந்தோம் என்ற நிலைமையை சுற்றுலா பயணிகளுக்கு ஏற்படுத்தி விடுகிறது.

    போலீசார் பற்றாக்குறை

    கொடைக்கானலில் மக்கள் தொகை 1 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களின் எண்ணிக்கையும் பல ஆயிர க்கணக்கில் உயர்ந்துள்ளது. மக்கள் தொகையும், வாகன ங்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது போல் குற்றச் சம்பவங்களும், போக்கு வரத்து விதிமீறல்களும் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆனால் கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் குற்ற பிரிவு போலீசாரும், போக்குவரத்து போலீசாரும் பல ஆண்டு களாக மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளனர். கொடைக்கானல் நகரின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் இல்லாத நிலை உருவாகியுள்ளது.

    மலைக்கிரமங்களில் நிகழும் குற்ற சம்பவங்களை தடுக்க மேல்மலை பகுதியில் போலீஸ் நிலையம் அமைக்க பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக கொடை க்கானல் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் குறைவான எண்ணிக்கை யில் உள்ள போலீசார் மேல்மலை கிராம பகுதியில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்க சென்று விட்டால் போலீஸ் நிலையத்தில் புகாரை பெறுவதற்கு கூட ஆளில்லாத நிலை உள்ளது. போக்குவரத்து நெரிசலில் பல இடங்களில் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

    நெடுஞ்சாலை போக்கு வரத்து நெரிசல்களை சீரமைக்க பைக் ரோந்து என்ற போலீஸ் அமைப்பை ஏற்படுத்தி 5 புல்லட்டுகளும் வழங்கப்பட்டது . குறைவான எண்ணிக்கையில் உள்ள போக்குவரத்து போலீசார் படும் அவலம் மிகவும் கொடுமையானதாக உள்ளது. அதிக பணி சுமையால் தற்போது கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் உள்ள போக்குவரத்து போலீசார் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.

    கடைக்கானலாக மாறிய கொடைக்கானலையும், போக்குவரத்தை சீர் செய்ய போலீசாரையும் நியமிக்கா மல் உள்ள காவல்துறையும், கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளையும், உள்ளூர் மக்களையும் பாதுகாக்க எடுக்கப் போகும் நடவடிக்கை என்ன என்பதை மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் முடிவு செய்ய வேண்டும் என சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    • பலியான சாமிநாதனின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அடுத்துள்ள தோப்புப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 34). இவர் பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி ஆவார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி நாகாத்தாள். இவர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இதனால் நாகாத்தாள் பழனியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் உள்ளார்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சாமிநாதன் தோப்புபட்டிக்கு வந்தார். பின்னர் மீண்டும் திருவள்ளூர் செல்வதற்காக அவர் புறப்பட்டார். ரெயில் நிலையம் அருகே நடந்து வந்து கொண்டு இருந்தபோது மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் விரைவு ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தார். ரெயில் என்ஜினில் சிக்கிக் கொண்ட அவரை டிரைவர் கவனித்து கோவிலூரை அடுத்துள்ள தங்கச்சியம்மாபட்டி பகுதியில் ரெயிலை நிறுத்தினார்.

    ரெயில்வே இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பலியான சாமிநாதனின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் ரெயில் போக்குவரத்து தாமதமானது. இது குறித்து திண்டுக்கல் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திண்டுக்கல் விவேரா கிராண்டில் அபிராமி லயன்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.
    • இதில் ரூ.1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் விவேரா கிராண்டில் அபிராமி லயன்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. முன்னாள் மாவட்ட ஆளுநர் பாண்டியராஜன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக 324 பி மாவட்ட ஒப்புதல் சர்வதேச இயக்குனரும், முன்னாள் மாவட்ட ஆளுநர் பாரிபரமேஸ்வரன் கலந்து கொண்டு தலைவர் ராஜா என்ற முஜிபுர் ரஹ்மான், செயலாளர் செந்தில் குமார், பொருளாளர் பாபு சேட் ஆகியோருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    தொடர்ந்து புதிய உறுப்பினர்கள் லோகநாதன், மோகன்தாஸ், பெருமாள் மணி, பாலாஜி, திருமுருகன் ஆகியோருக்கு லயன்ஸ் பொத்தானை வழங்கி பாராட்டுக்கள் தெரிவித்தனர். இதனையடுத்து சேவை திட்டங்களை காஸ்மாஸ் லயன்ஸ் சங்க புரவலர் திபூர்சியஸ், புரவலர் நாட்டாண்மை காஜாமைதீன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இதில் கல்வி உதவித்தொகையாக 3 மாணவிகளுக்கு தலா ரூ. 10 ஆயிரம் வீதம் ரூ. 30 ஆயிரமும், முதியோர் இல்லத்திற்கு டேபிள், சேர் மற்றும் 5 ஏழை குடும்பங்களுக்கு தலா ஒரு மூடை அரிசி, மளிகை பொருட்கள் உட்பட ரூ.1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், மண்டல தலைவர் ராஜா, வட்டார தலைவர் டாக்டர் அமலாதேவி, நிர்வாகி கருணாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • திண்டுக்கல்லில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி சார்பில் பேகம்பூர் அடுத்துள்ள பூச்சிநாயக்கம்பட்டி மாநகராட்சி பள்ளியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
    • இதில் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ரத்த தானம் செய்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி சார்பில் பேகம்பூர் அடுத்துள்ள பூச்சிநாயக்கம்பட்டி மாநகராட்சி பள்ளியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ஷேக் பரீத் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் நைனா முகமது, செயலாளர் நியாஜ்தீன், பொருளாளர் நத்தம் சேட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி, ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில செயலாளர் ஜமால் முகமது ஆகியோர் முகாமை தொடங்கி வைத்து ரத்த தானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர். இதில் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ரத்த தானம் செய்தனர்.

    முகாமில் அரசு ரத்த வங்கி டாக்டர் புவனா, ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில ஊடகப் பிரிவு செயலாளர் அப்துல் ஹாலிக், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முகமது யாசின், மாநகர பொருளாளர் சேக் முகமது, வைகறை தொழிற்சங்க செயலாளர் பாபுஜி, காங்கிரஸ் கட்சி மாநகர மாவட்ட தலைவர் துரை மணிகண்டன், தி.மு.க. மேற்கு மண்டல செயலாளர் பஜ்லூல் ஹக், கவுன்சிலர் ஹசீனா காஜா மைதீன், சமூக ஆர்வலர் சித்தாரா அன்சாரி, மாநகர தலைவர் சாதிக்கலி, ஊடக பிரிவு பொருளாளர் சஹின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதனைத் தொடர்ந்து 3-வது முறையாக கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் பங்கேற்று 720க்கு 581 மதிப்பெண்கள் பெற்றார்.
    • தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்தும் பொரு ளாதார சூழ்நிலையால் அடிப்படை கட்டணம் கூட தன்னால் கட்ட இயலாது என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் அருகே உள்ள மேல்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுஜிதா (வயது 20). இவர் கடந்த 2 முறை நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்தார். அதனைத் தொடர்ந்து 3-வது முறையாக கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் பங்கேற்று 720க்கு 581 மதிப்பெண்கள் பெற்றார். இதன் மூலம் அரசு ஒதுக்கீ ட்டில் இவருக்கு விழுப்புரம் மருத்துவக்கல்லூரி ஒதுக்கப்பட்டது.

    ஆனால் நீட் தேர்வில் வெற்றி பெற்றும் கல்லூரி யில் சேர முடியாமல் மாணவி தவித்து வருகிறார். இவரது தந்தை சந்திரசேகர் கடந்த வருடம் எதிர்பாராதவிதமாக உயிரிழந்து விட்டார். தாய் மற்றும் சகோதரி உதவியுடன் நீட் தேர்வை எழுதி வெற்றி பெற்றார்.

    தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்தும் பொரு ளாதார சூழ்நிலையால் அடிப்படை கட்டணம் கூட தன்னால் கட்ட இயலாது என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். மலை கிராமத்தில் அடிப்படை கல்வியே எட்டாக்கனியாக இருக்கும் நிலையில் மேல்நிலை தேர்வு வரை எழுதி அதன் பிறகு கடும் முயற்சியுடன் நீட் தேர்விலும் வெற்றி பெற்று மருத்துவ கல்லூரியில் சேர முடியாமல் தவிக்கும் மாணவிக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×