என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் அபிராமி லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
    X

    நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    திண்டுக்கல் அபிராமி லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

    • திண்டுக்கல் விவேரா கிராண்டில் அபிராமி லயன்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.
    • இதில் ரூ.1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் விவேரா கிராண்டில் அபிராமி லயன்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. முன்னாள் மாவட்ட ஆளுநர் பாண்டியராஜன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக 324 பி மாவட்ட ஒப்புதல் சர்வதேச இயக்குனரும், முன்னாள் மாவட்ட ஆளுநர் பாரிபரமேஸ்வரன் கலந்து கொண்டு தலைவர் ராஜா என்ற முஜிபுர் ரஹ்மான், செயலாளர் செந்தில் குமார், பொருளாளர் பாபு சேட் ஆகியோருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    தொடர்ந்து புதிய உறுப்பினர்கள் லோகநாதன், மோகன்தாஸ், பெருமாள் மணி, பாலாஜி, திருமுருகன் ஆகியோருக்கு லயன்ஸ் பொத்தானை வழங்கி பாராட்டுக்கள் தெரிவித்தனர். இதனையடுத்து சேவை திட்டங்களை காஸ்மாஸ் லயன்ஸ் சங்க புரவலர் திபூர்சியஸ், புரவலர் நாட்டாண்மை காஜாமைதீன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இதில் கல்வி உதவித்தொகையாக 3 மாணவிகளுக்கு தலா ரூ. 10 ஆயிரம் வீதம் ரூ. 30 ஆயிரமும், முதியோர் இல்லத்திற்கு டேபிள், சேர் மற்றும் 5 ஏழை குடும்பங்களுக்கு தலா ஒரு மூடை அரிசி, மளிகை பொருட்கள் உட்பட ரூ.1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், மண்டல தலைவர் ராஜா, வட்டார தலைவர் டாக்டர் அமலாதேவி, நிர்வாகி கருணாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×