என் மலர்
நீங்கள் தேடியது "புனித சலேத் அன்னை"
- புனித சலேத் அன்னை 157-ம் ஆண்டு புனிதப் பெருவிழா கடந்த மாதம் 30 - ஆம் தேதி கொடியேற்ற த்துடன் தொடங்கியது.
- இரவு முழுவதும் பவனி வந்த தேர் பவனியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் வரலாற்றுச்சிறப்பு மிக்க புனித சலேத் அன்னை 157-ம் ஆண்டு புனிதப் பெருவிழா கடந்த மாதம் 30 - ஆம் தேதி கொடியேற்ற த்துடன் தொடங்கியது. கடந்த 10 - நாட்களுக்கு மேலாக ஒவ்வொரு நாளும் சலேத் அன்னைக்கு சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது.
பாரிஸ் நகரில் லா சலேத் எனும் சிற்றூரில் காட்சி கொடுத்து 1886 -ஆம் ஆண்டு கொடைக்கானலில் சிருஷ்டிக்கப்பட்ட புனித சலேத் அன்னை திருத்தலத்தில் ஒவ்வொரு வருடம் ஆகஸ்டு மாதத்தில் 15 நாட்களுக்கு இங்கு சிறப்பு திருப்பலிகளுடன் நடைபெறும். பெருவிழா ஆகஸ்ட் 14, 15 ஆகிய தேதியில் நிறைவுறும். அதன்படி உயர்மறை மாவட்ட அருட்தந்தையர்கள் மற்றும் பங்குத் தந்தைகள், பேராயர்கள் கலந்து கொண்டு திருப்பலிகளை நிறைவேற்றினர்.
அதன் பின்னர் புனித சலேத் அன்னை ,காவல் தெய்வம், திருஇருதய ஆண்டவர்,புனித சூசையப்பர் ஆகிய திருஉருவங்களின் மின் அலங்கார தேர்பவனி செயின்ட் மேரீஸ் சாலையில் தொடங்கி பஸ் நிலையம், அண்ணா சாலை வழியாக மூஞ்சிக்கல் புனித இருதய ஆண்டவர் திருத்தலத்தை சென்றடைந்தது.இரவு முழுவதும் பவனி வந்த தேர் பவனி மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதில் பல ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டு புனித சலேத் அன்னையின் ஆசி பெற்று சென்றனர்.
- 15 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் தினமும் சிறப்பு திருப்பலி நடத்தப்படுகிறது.
- 14-ந்தேதி இரவும், 15-ந்தேதி பகலிலும் தேர்பவனி நடக்கிறது.
கொடைக்கானலில் பிரசித்தி பெற்ற புனித சலேத் அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. அதனை தொடர்ந்து பங்கு தந்தையர்கள் நடத்திய சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிக்கு வட்டார அதிபர் ஜான் திரவியம் தலைமை தாங்கினார். பங்குத் தந்தையர்கள் தேவராஜ், விசுவாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மதுரை தெற்கு வட்டார அதிபர் ஆனந்தம் கலந்து கொண்டு சிறப்பு திருப்பலியை நடத்தி, கொடியினை ஏற்றி வைத்தார். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் குடைகளை பிடித்தபடி பங்கேற்றனர். முன்னதாக அவர்கள் ஊர்வலமாக ஆலயத்துக்கு வந்தனர்.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணை தலைவர் மாயக்கண்ணன், முன்னாள் நகராட்சி தலைவர்கள் முகமது இபுராகிம், ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 15 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் தினமும் சிறப்பு திருப்பலி நடத்தப்படுகிறது. விழாவின் முக்கிய நாளான வருகிற 14-ந்தேதி இரவும், 15-ந்தேதி பகலிலும் தேர்பவனி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தையினர், பங்கு பேரவையினர், அருட்சகோதரிகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.






