என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீட் தேர்வில் வெற்றி பெற்றும் மருத்துவ கல்லூரியில் சேர முடியாமல் தவிக்கும் மாணவி
    X

    மாணவி சுஜிதா.

    நீட் தேர்வில் வெற்றி பெற்றும் மருத்துவ கல்லூரியில் சேர முடியாமல் தவிக்கும் மாணவி

    • அதனைத் தொடர்ந்து 3-வது முறையாக கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் பங்கேற்று 720க்கு 581 மதிப்பெண்கள் பெற்றார்.
    • தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்தும் பொரு ளாதார சூழ்நிலையால் அடிப்படை கட்டணம் கூட தன்னால் கட்ட இயலாது என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் அருகே உள்ள மேல்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுஜிதா (வயது 20). இவர் கடந்த 2 முறை நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்தார். அதனைத் தொடர்ந்து 3-வது முறையாக கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் பங்கேற்று 720க்கு 581 மதிப்பெண்கள் பெற்றார். இதன் மூலம் அரசு ஒதுக்கீ ட்டில் இவருக்கு விழுப்புரம் மருத்துவக்கல்லூரி ஒதுக்கப்பட்டது.

    ஆனால் நீட் தேர்வில் வெற்றி பெற்றும் கல்லூரி யில் சேர முடியாமல் மாணவி தவித்து வருகிறார். இவரது தந்தை சந்திரசேகர் கடந்த வருடம் எதிர்பாராதவிதமாக உயிரிழந்து விட்டார். தாய் மற்றும் சகோதரி உதவியுடன் நீட் தேர்வை எழுதி வெற்றி பெற்றார்.

    தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்தும் பொரு ளாதார சூழ்நிலையால் அடிப்படை கட்டணம் கூட தன்னால் கட்ட இயலாது என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். மலை கிராமத்தில் அடிப்படை கல்வியே எட்டாக்கனியாக இருக்கும் நிலையில் மேல்நிலை தேர்வு வரை எழுதி அதன் பிறகு கடும் முயற்சியுடன் நீட் தேர்விலும் வெற்றி பெற்று மருத்துவ கல்லூரியில் சேர முடியாமல் தவிக்கும் மாணவிக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×