என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்வியைக் கைவிடக்கூடாது"

    • கொடைக்கானல் மலைப்பகுதியிலுள்ள வடகரைப்பாறை ஊரில் உலகத் தொல்குடிகள் நாள் விழா கொண்டாடப்பட்டது.
    • பழங்குடிகள் எந்தக் காரணத்தினாலும் கல்வியைக் கைவிடக்கூடாது என கூட்டத்தில் பேசப்பட்டது.

    சின்னாளபட்டி:

    காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலை க்கழகத் தமிழ்த்துறை சார்பாக கொடைக்கானல் மலைப்பகுதியிலுள்ள வடகரைப்பாறை ஊரில் உலகத் தொல்குடிகள் நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்குத் காந்தி கிராமியப் பல்கலைகழகத் தமிழ்த்துறைத் தலைவர், பேராசிரியர் முத்தையா தலைமை தாங்கி பேசியதாவது,

    இந்தியாவின் வரலாறு பழங்குடிகளிட மிருந்தே எழுதப்பட வேண்டும். இசை, பண்பாடு முதலான எல்லாவற்றிலும் தனித்த அடையாளங்க ளுடன் இந்தியா முழுவதும் 37 பழங்குடி இனங்கள் வாழ்ந்து வருகின்றன. ஐ.நா.சபை பழங்குடி இளைஞர்களின் வழியாக அவர்களது பண்பாட்டை மீட்டெடுக்க வேண்டும் என்பதை இந்த ஆண்டுக்கான இலக்காக அறிவித்துள்ளது.

    ஆகவே, பழங்குடிகளின் பாரம்பரிய அறிவைப் போற்றிப் பாதுகாப்பதுடன் அதைப் பரவச்செய்வது நமது கடமையாகும் என்று அவர் பேசினார். இதையடுத்து மதுரைத் தியாகராசர் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் கோவிந்தராஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசியதாவது, கல்வியால் மட்டுமே ஒரு இனம் தலைநிமிரும். நம்முடைய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மூ கல்வியால் உயர்ந்த பழங்குடிக்கு மிகச் சிறந்த சான்றாவார்.

    சவ்வாது மலையில் வாழும் மலை யாளிப் பழங்குடி இனத்தில் பிறந்த நான் இன்றைக்குப் பேராசிரியராக உயர்ந்திரு ப்பதற்கும் கல்வியே காரணம். பழங்குடிகள் எந்தக் காரணத்தினாலும் கல்வியைக் கைவிடக்கூடாது என்று அவர் பேசினார். நிகழ்ச்சியில், நிலக்கோட்டை, ஆதி திராவிடர் நலத்துறைத் தனி வட்டாட்சியர் காளி முத்து, வடகரைப்பாறையில் அரசுபழங்குடியினர் உண்டு உறைவிடத் தொடக்கப்ப ள்ளியின் தலைமையாசிரியர் செல்வி, பண்ணைக்காடு பேரூராட்சித் தலைவர் மணிகண்டன், மாவட்டத் திட்டக்குழு உறுப்பினர் திருமலைச்செல்வன்,

    பேரூராட்சி மன்ற உறுப்பி னர் தங்கதுரை, ஆண்டனி, மோனா ஆகியோர் பழங்குடிகளுக்கான அரசு நலத்திட்டங்களை எடுத்துக்கூறி வாழ்த்துரை வழங்கினர். விழாவில் பழங்குடியின மாண வர்களுக்குத் திருக்குறள் ஒப்புவித்தல், ஆடல், பாடல் முதலான போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்கப்பட்டன. பளியர் இனத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள் பாரம்பரிய இசைக் கருவிகளை இசைத்தனர். ஊர் மக்கள், பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள், முதுகலை மாணவர்கள் முதலானோர் திரளாகக் கலந்து கொண்டனர். தமிழ்த்துறை யின் உதவிப்பேராசிரியர் சிதம்பரம் அனைவரையும் வரவேற்றார். தமிழ்த்துறை விரிவுரையாளர் முனைவர் சிவா அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

    ×