திண்டுக்கல் அருகே மனநலம் பாதித்த பெண்ணை கற்பழித்த வாலிபர் கைது

வாலிபர் ஒருவர் சேர்ந்த 32 வயது மனநலம் பாதித்த பெண்ணை தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார்.புகாரின் பேரில் போலீசார் வாலிபரை கைது செய்தனர்.
பிரசாந்த்.
பிரசாந்த்.
Published on

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகில் உள்ள ஆவிளிபட்டியை சேர்ந்தவர் பிரசாந்த்(29). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தை உள்ளனர். டைல்ஸ்ஒட்டும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதேபகுதியை சேர்ந்த 32 வயது மனநலம் பாதித்த பெண்ணை தொட ர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இதனால் அந்த பெண் 4 மாத கர்ப்பிணியானார். அவரது உடலில் ஏற்பட்ட மாற்றங்களை அடுத்து பெற்றோர் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அழைத்து ச்சென்ற னர். அப்போது அவர் கர்ப்பிணி யாக இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடை ந்தனர். இதுகுறித்து சாணா ர்பட்டி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி வழக்கு பதிவு செய்து பிரசாந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com