என் மலர்
திண்டுக்கல்
- அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என 2 கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் எதிர்பார்த்து வருகின்றனர்.
- கிளம்பு கிளம்பு அந்து போச்சு கிளம்பு கிளம்பு” “அலப்பற கிளப்புறோம் தலைவரு நிரந்தரம்” என்ற வாசகங்களுடன் பா.ஜ.க. தகவல் தொழில்நுட்ப மற்றும் சமூக ஊடகப்பிரிவு சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு ள்ளது.
திண்டுக்கல்:
பேரறிஞர் அண்ணா குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கள் அ.தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனை யடுத்து அண்ணாமலை மீது அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கடும் விமர்ச னங்களை முன் வைத்தனர். அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி கிடையாது என்றும், அது தேர்தலின் போதே முடிவு செய்யப்படும் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
அதன் பிறகும் அண்ணா மலை தான் தெரிவித்த கருத்து உண்மை என்றும் இதற்காக மன்னிப்பு கேட்க முடியாது என்றும் கூறி வந்தார். இதனால் அண்ணா மலையை மாநில தலைவர் பதவியில் இருந்து மாற்ற வலியுறுத்தி டெல்லிக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சென்றனர்.
ஆனால் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க முடியாத நிலையில் கட்சியின் தலைவர் நட்டாவை மட்டும் சந்தித்து திரும்பினர். இந்நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. நீடிப்பது குறித்து இன்று மாலை கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
அதன்படி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று மாலை மாவட்ட செயலா ளர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்துக்கு பிறகு அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என 2 கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் எதிர்பார்த்து வருகின்றனர்.
இதனிடையே தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பா.ஜ.க. சார்பில் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு ள்ளது. இதில் "கிளம்பு கிளம்பு அந்து போச்சு கிளம்பு கிளம்பு" "அலப்பற கிளப்புறோம் தலைவரு நிரந்தரம்" என்ற வாசகங்க ளுடன் பா.ஜ.க. தகவல் தொழில்நுட்ப மற்றும் சமூக ஊடகப்பிரிவு சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு ள்ளது. இது அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அண்ணாமலை பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவரது ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர் மேலும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ராஜதானி க்கோட்டையைச் சேர்ந்த துரைப்பாண்டி என்ற மாற்றுத்திறனாளி திடீரென தன் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
- எங்கள் நிலத்து க்கு சென்று வந்த பொதுப்பாதையை சிலர் மறித்து இடையூறு செய்து கடந்த 15 நாட்களாக தொடர்ந்து எங்க ளிடம் தகராறு செய்வதால் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறோம்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு வந்த நிலக்கோ ட்டை அருகே உள்ள ஒருத்தட்டு கிராமம் ராஜதானி க்கோட்டையைச் சேர்ந்த துரைப்பாண்டி என்ற மாற்றுத்திறனாளி திடீரென தன் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர் தெரிவிக்கையில், மாற்றுத் திறனாளியான என்னை எனது அண்ணன் குடும்பத்தினர் மற்றும் எனது தாயார் கவனித்து வருகின்றனர். நாங்கள் விவசாயம் செய்து பிழைத்து வருகிறோம். எங்கள் நிலத்து க்கு சென்று வந்த பொதுப்பா தையை சிலர் மறித்து இடையூறு செய்து வரு கின்றனர்.
கடந்த 15 நாட்களாக தொடர்ந்து எங்க ளிடம் தகராறு செய்வதால் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறோம். ஜமீன்தார் காலத்தில் இருந்து 3 தலைமுறையாக பயன்படுத்தி வந்த இந்த நிலத்தை அபகரிக்க முயலும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்து தீக்குளிக்க முயன்றேன் என்றார். இதனையடுத்து அவரை மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்து செல்லுமாறு கூறினர்.
- கொசவபட்டி துணை மின் நிலையத்தில் நாளை (26ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
திண்டுக்கல்:
கொசவபட்டி துணை மின் நிலையத்தில் நாளை (26ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ெகாசவபட்டி, செம்மடை ப்பட்டி, கொழிஞ்சிபட்டி, தொட்டி யபட்டி, சட்டக்கா ரன்பட்டி, எமலக்காலாபுரம், கைலாசம்பட்டி, வேலாம்ப ட்டி, சாணார்பட்டி, ராம ன்செட்டியபட்டி, கோண ப்பட்டி, நத்தமாடி ப்பட்டி, பஞ்சம்பட்டி, ராகலா புரம், வீரசின்ன ம்பட்டி, கல்லு ப்பட்டி, தவசிமடை, விராலிப்பட்டி, நொச்சி ஓடைப்பட்டி, வடகாட்டு ப்பட்டி, குரும்ப ப்பட்டி, கவராயப்பட்டி, கூவனூத்து பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.
இதேபோல் செங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பரா மரிப்பு பணி காரணமாக ராஜக்காபட்டி, சிலுவத்தூர், புகையிலைப்பட்டி, வி.எஸ்.கோட்டை, மார்க்கம்பட்டி, வி.மேட்டுப்பட்டி, தேத்தா ம்பட்டி, கம்பிளியம்பட்டி, காட்டுப்பட்டி, செங்குறிச்சி, எஸ்.குரும்பபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என உதவி செயற்பொறி யாளர் மணிகண்டன் தெரிவித்து ள்ளார்.
- கடந்த 18-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைத்து, பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் தொடர்ந்து நடந்தது.
- இதில் சுமார் 33-க்கும் மேற்பட்ட சிலைகள், ஊர்வலத்தில் பங்கேற்றன.
நத்தம்:
நத்தம், மீனாட்சிபுரம், அண்ணாநகர், கொண்டையம்பட்டி, வேலம்பட்டி, உலுப்பகுடி, அய்யாபட்டி, செட்டியார்குளம், காந்திநகர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் கடந்த 18-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைத்து, பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் தொடர்ந்து நடந்தது.
இதை தொடர்ந்து நத்தம் கோவில்பட்டியில் இருந்து இந்து முன்னணி சார்பில் நேற்று விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ், மாநில பேச்சாளர் சிங்கை பிரபாகரன், நகர பொதுச் செயலாளர் வெங்கடேசபிரசாத், தலைவர் வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நத்தம்- கோவில்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் தொடங்கிய இந்த விநாயகர் சிலைகள் ஊர்வலம் தர்பார் நகர், பஸ்நிலையம் வழியாக அம்மன் குளத்தை சென்றடைந்தது. பின்னர் பூஜைகள், தீபாராதனைக்கு பின்னர் சிலைகள் அம்மன் குளத்தில் கரைக்கபட்டது. இதில் சுமார் 33-க்கும் மேற்பட்ட சிலைகள், ஊர்வலத்தில் பங்கேற்றன.
இதில் இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை நத்தம் தாசில்தார் ராமையா, மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு உதயகுமார், இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி ஆகியோர் மேற்பார்வையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நத்தம்சுற்று வட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- தெருவிளக்குகளில் டியூப் லைட், சோடியம் விளக்குகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
- மாற்றாக 70 வாட்ஸ் திறன் கொண்ட எல்.இ.டி. விளக்குகள் முக்கிய சாலைகளில் உள்ள மின் கம்பங்களில் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
பழனி:
பழனி நகராட்சியில் மின்சார சிக்கனம் மற்றும் செலவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். குடியிருப்பு, முக்கிய சாலைகள் உள்ளிட்ட பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் உள்ளன. அதில் டியூப் லைட், சோடியம் விளக்குகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இதனால் நகராட்சிக்கு மின் கட்டணமாக லட்சக்கணக்கான ரூபாய் செலவாகிறது. இது தவிர பராமரிப்பு செலவுகள் உள்ளன. எனவே நகராட்சியின் மின்சார செலவை கட்டுப்படுத்த இந்த விளக்குகளுக்கு மாற்றாக எல்.இ.டி. விளக்குகள் பயன்படுத்த முடிவு செய்தனர். ரூ.3.25 கோடி செலவில் 3214 எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட உள்ளன.
மேலும் ரூ.38.14 லட்சம் செலவில் புதிதாக மின் கம்பம் மற்றும் எல்.இ.டி. விளக்குகள் அமைக்கப்பட உள்ளன. தற்போது முதல் கட்டமாக 546 எல்.இ.டி. விளக்குகள் முக்கிய சாலைகளில் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. டியூப்லைட், சோடியம் விளக்குகளுக்கு மாற்றாக 70 வாட்ஸ் திறன் கொண்ட எல்.இ.டி. விளக்குகள் முக்கிய சாலைகளில் உள்ள மின் கம்பங்களில் பொரு த்தும் பணி நடைபெற்று வருகிறது.
விரைவில் அனைத்து வார்டுகளிலும் உள்ள மின் கம்பத்தில் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்படும். இதனால் நகராட்சியின் மின் கட்டணம் குறையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- கொடைக்கானலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டன.
- சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அரசு பள்ளி அருகே உள்ள நீரோடையில் கரைக்க ப்பட்டது.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டன. இந்த சிலைகள் நேற்று ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஏரியில் கரைக்க ப்பட்டது.
இதற்காக 500க்கும் மேற்பட்ட சிறிய சிலைகள், 50க்கும் மேற்பட்ட பெரிய சிலைகள் ஊர்வல மாக எடுத்து வரப்பட்டு அரசு பள்ளி அருகே உள்ள நீரோடையில் கரைக்க ப்பட்டது.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ப்பட்டது. ஊர்வலத்தில் அசம்பா விதம் ஏற்படாமல் இருக்க போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர். மதியம் தொடங்கிய இந்த ஊர்வலம் மாலை 6 மணி வரை நடைபெற்றது.
- வழக்கமான இடத்தில் பஸ்சை நிறுத்தி விட்டு டீக்குடிப்பதற்காக டிரைவர் மற்றும் கண்டக்டர் கடைக்குச் சென்றனர்.
- இந்த விபத்தில் 3 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் பஸ்நிலையத்தில் இருந்து மாங்கரை வழியாக கன்னிவாடி, தெத்துப்பட்டிக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. நேற்று மாலை இந்த பஸ் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு சென்றது. பஸ்சை ராஜேந்திரன் என்பவர் ஓட்டிச் சென்றார். பாலமுருகன் கண்டக்டராக இருந்தார். தெத்துப்பட்டிக்கு சென்று விட்டு மீண்டும் திண்டுக்கல் நோக்கி பஸ் வந்து கொண்டு இருந்தது. கன்னிவாடி பேரூராட்சி அலுவலகம் அருகே வழக்கமான இடத்தில் பஸ்சை நிறுத்தி விட்டு டீக்குடிப்பதற்காக டிரைவர் மற்றும் கண்டக்டர் கடைக்குச் சென்றனர்.
அப்போது பஸ் தானாக முன்னோக்கிச் சென்று சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது. எதேச்சையாக திரும்பிய டிரைவர் பஸ் கட்டுப்பாட்டை இழந்து செல்வதைப் பார்த்து உடனடியாக பஸ்சில் ஏறி அதனை நிறுத்தினார்.
இந்த விபத்தில் 3 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- ரெங்கநாதபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (26 ஆம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- எனவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
வேடசந்தூர்:
ரெங்கநாதபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (26 ஆம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சரளப்பட்டி, காசிபாளையம், மேட்டுப்பட்டி, வெள்ளையம் பட்டி, கே. ஜி.பட்டி, எல்லைப்பட்டி, கல்வார்பட்டி, ராஜாகவுண்டனூர், விடுதலைப்பட்டி, பூதிப்புரம், சீத்தப்பட்டி, நல்லபொம்பன்பட்டி, கன்னிமார்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
- 9ம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்த 16 வயது பள்ளி மாணவிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
- இந்நிலையில் அதே பகுதியில் பதுங்கியிருந்த வாலிபரை கைது செய்து திண்டுக்கல் சிறையில் சிறையில் அடைத்தனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே குளத்தூர் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் மணிகண்டன். (வயது 30). கூலித் தொழிலாளி. 9ம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்த 16 வயது பள்ளி மாணவிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து மாணவியின் உறவினர்கள் வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். வேடசந்தூர் டி.எஸ்.பி. துர்கா தேவி உத்தரவின் படி வடமதுரை மகளிர் இன்ஸ்பெக்டர் சுமதி விசாரணை செய்ததில் மாணவிக்கு மணிகண்டன் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை தேடி வந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் பதுங்கியிருந்த மணிகண்டனை கைது செய்து திண்டுக்கல் சிறையில் சிறையில் அடைத்தனர்.
- கடந்த 5 நாட்களில் மட்டும் கொடைக்கானலில் 20 செ.மீ. மழை பதிவாகி உள்ளதால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
- மலை சாலைகளில் திடீர் அருவிகளும் உருவாகி சுற்றுலா பயணிகளை வசீகரித்து வருகிறது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா தலமாக உள்ளது. கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலங்கள் பெரும்பாலும் இயற்கை காட்சிகளாக இருந்து வரக்கூடிய நிலையில் இங்குள்ள மலைப்பகுதிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரும் அழகுதான். இதனை கண்டு ரசிப்பதற்காக பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 1 வாரமாக கொடைக்கானலை சுற்றியுள்ள மேல்மலை மற்றும் கீழ் மலை உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் கொடைக்கானலில் 20 செ.மீ. மழை பதிவாகி உள்ளதால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
இது மட்டுமல்லாது கொடைக்கானலில் உள்ள பல்வேறு அருவிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓட தொடங்கி உள்ளது. கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டக்கானல் அருவி, புலவிச்சாறு அருவி, அஞ்சுவீடு அருவி உள்ளிட்ட பல்வேறு அருவிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
இதுமட்டுமின்றி மலை சாலைகளில் திடீர் அருவிகளும் உருவாகி சுற்றுலா பயணிகளை வசீகரித்து வருகிறது. தொடர் மழையால் குளு குளு சீதோசனம் கொடைக்கானலில் தொடங்கி உள்ளதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
படகு சவாரி, சைக்கிள், குதிரை சவாரி செய்தும், மலை முகடுகளில் தவழ்ந்து செல்லும் மேக கூட்டங்களை பார்த்தும் உற்சாகம் அடைந்து வருகின்றனர். விட்டு விட்டு சாரல் மழை பெய்தாலும் நனைந்தபடியும், குடை பிடித்தபடியும் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை ரசித்து வருகின்னர். இதனால் அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது.
- மின்சாரம் துண்டிப்பு செய்யப்படாததை அறியாத ஊழியர் மின் கம்பத்தின் மீது ஏறி மின்தடையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
- திடீரனெ மின்சாரம் தாக்கி தூக்கிஎறியப்பட்ட ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள மினுக்கம்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (27). இவர் சேனண்கோட்டை மின்வாரிய சரகத்தில் கேங்மேனாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பூலாங்குளம் என்ற கிராம பகுதிகளில் நேற்று இரவு மின்தடை ஏற்பட்டது.
இதனை சரி செய்வதற்காக கருப்பசாமி மற்றும் அவருடன் பணியாற்றும் மின்வாரிய ஊழியர்கள் பூலாங்குளம் கிராமத்திற்கு சென்றனர்.
அங்கு சென்ற மின்வாரிய ஊழியர்கள் தனித்தனியாக பிரிந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படாததை அறியாத கருப்புசாமி மின் கம்பத்தின் மீது ஏறி மின்தடையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி கருப்புசாமி தூக்கி வீசப்பட்டார். இதில் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மின்சாரம் தாக்கி கருப்பசாமி மின் கம்பத்தின் கீழே விழும் போது அருகில் மற்ற நபர்கள் யாரும் இல்லாததால் நீண்ட நேரமாக கருப்பசாமி மின் கம்பத்தின் கீழே கிடந்தார்.
அதன் பின்னர் உடன் பணியாற்றும் மின்வாரிய ஊழியர் ஒருவர் கருப்பசாமி கீழே கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் கருப்பசாமியை மீட்டு வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அய்யலூர் பேரூராட்சியில் உள்ள தங்கமாபட்டியில் ரூ.82 கோடியில் மாம்பழ கூழ், நிலக்கடலை, புளி, தக்காளி, வெங்காயம் போன்ற உணவு பொருட்களை பாதுகாக்க உணவு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- உணவு பூங்கா விரைந்து செயல்பாட்டிற்கு கொண்டு வர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடமதுரை:
தமிழ்நாடு உணவு பதப்படுத்தும் கொள்கை 2018 ம் ஆண்டின்படி தமிழ்நாட்டில் 10 மெகா உணவு பூங்கா அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் அய்யலூர் பேரூராட்சியில் உள்ள தங்கமாபட்டியில் ரூ.82 கோடியில் மாம்பழ கூழ், நிலக்கடலை, புளி, தக்காளி, வெங்காயம் போன்ற வேளாண் பொருட்களை உணவுப் பொருட்களாக மதிப்பு கூட்டி விற்பனை செய்யும் உணவு பூங்கா அமைக்க அரசு அனுமதி வழங்கப்பட்டு 2020 ஆம் ஆண்டு முதல் அதற்கான வேலைகள் நடைபெறத் தொடங்கின.
இதற்காக 10 ஏக்கரில் உணவு பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. இங்கு குளிப்பதனால் கட்டமைப்புகள் வணிகம் செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து அய்யலூர் தக்காளி விவசாயி கூறுகையில்:- அய்யலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் தக்காளி அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. அய்யலூரில் தக்காளிக்கென தனி மார்க்கெட்டுகள் செயல்பட்டு வருகிறது. அய்யலூரில் இருந்து பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இருப்பினும் தக்காளிக்கு ஆதார விலை கூட இல்லாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றன. வரத்து அதிகமாக இருந்ததால் தக்காளியின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால் உழவு கூலி கூட மிஞ்சாது எனவும் கூறுகிறார். அய்யலூர் தங்கம்மாபட்டியில் உருவாகிக் கொண்டிருக்கும் உணவு பூங்கா விரைந்து செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படுமேயானால் எங்கள் பகுதியில் தக்காளி ஜூஸ் செய்யும் கம்பெனிகள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் நிரந்தர விலை கிடைக்கும் என விவசாயிகள் நம்புகின்றோம் என்று அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அய்யலூர் பேரூராட்சி தலைவர் கருப்பன் கூறுகையில் :- உணவு பூங்கா பணிகளை வேளாண்துறை விரைந்து முடிக்க வேண்டும் எனவும். அய்யலூர் எரியோடு போன்ற சுற்று வட்டார பகுதிகளில் விவசாயத் தொழிலை பிரதான தொழிலாக மக்கள் செய்து வருகின்றனர். மேலும் புளி உடைத்தல், விதை எடுத்தல் போன்ற அத்தியாவசியமான தொழிலே செய்து வருகின்றனர். இந்த உணவு பூங்கா விரைந்து செயல்பாட்டிற்கு வந்தால் விவசாயிகள் வாழ்க்கைத் தரம் உயர்ந்து மகிழ்ச்சியாக இருப்பார்கள். மேலும் இந்த உணவு பூங்காவில் உணவு பதப்படுத்தப்படும் கிடங்கு உள்ளதால் அதிக அளவு விவசாயிகள் பயனடைவார்கள் என தெரிவித்தார்.






