search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Procession of Ganesha idols"

    • கடந்த 18-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைத்து, பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் தொடர்ந்து நடந்தது.
    • இதில் சுமார் 33-க்கும் மேற்பட்ட சிலைகள், ஊர்வலத்தில் பங்கேற்றன.

    நத்தம்:

    நத்தம், மீனாட்சிபுரம், அண்ணாநகர், கொண்டையம்பட்டி, வேலம்பட்டி, உலுப்பகுடி, அய்யாபட்டி, செட்டியார்குளம், காந்திநகர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் கடந்த 18-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைத்து, பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் தொடர்ந்து நடந்தது.

    இதை தொடர்ந்து நத்தம் கோவில்பட்டியில் இருந்து இந்து முன்னணி சார்பில் நேற்று விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ், மாநில பேச்சாளர் சிங்கை பிரபாகரன், நகர பொதுச் செயலாளர் வெங்கடேசபிரசாத், தலைவர் வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நத்தம்- கோவில்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் தொடங்கிய இந்த விநாயகர் சிலைகள் ஊர்வலம் தர்பார் நகர், பஸ்நிலையம் வழியாக அம்மன் குளத்தை சென்றடைந்தது. பின்னர் பூஜைகள், தீபாராதனைக்கு பின்னர் சிலைகள் அம்மன் குளத்தில் கரைக்கபட்டது. இதில் சுமார் 33-க்கும் மேற்பட்ட சிலைகள், ஊர்வலத்தில் பங்கேற்றன.

    இதில் இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை நத்தம் தாசில்தார் ராமையா, மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு உதயகுமார், இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி ஆகியோர் மேற்பார்வையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நத்தம்சுற்று வட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • நகரின் அனைத்து வார்டு பகுதிகளிலும் மொத்தம் 32 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை மற்றும் பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யபட்டன.
    • டிராக்டர் வண்டிகள் மூலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூரில் நகர இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. நகரின் அனைத்து வார்டு பகுதிகளிலும் மொத்தம் 32 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை மற்றும் பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யபட்டன.

    டிராக்டர் வண்டிகள் மூலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. ஊர்வலத்தை கூடலூர் நகர இந்து முன்னணி பொதுச்செயலாளர் ஜெகன் தலைமையில், வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

    கூடலூர் அருகே காஞ்சிமரத்துறை முல்லை பெரியாற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. சப் இன்ஸ்பெக்டர்கள் கணேசன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    ×