என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேனியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.
கூட்டணி குறித்து முக்கிய ஆலோசனை தேனியில் அ.தி.மு.க.வுக்கு எதிராக பா.ஜ.க. பரபரப்பு போஸ்டர்
- அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என 2 கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் எதிர்பார்த்து வருகின்றனர்.
- கிளம்பு கிளம்பு அந்து போச்சு கிளம்பு கிளம்பு” “அலப்பற கிளப்புறோம் தலைவரு நிரந்தரம்” என்ற வாசகங்களுடன் பா.ஜ.க. தகவல் தொழில்நுட்ப மற்றும் சமூக ஊடகப்பிரிவு சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு ள்ளது.
திண்டுக்கல்:
பேரறிஞர் அண்ணா குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கள் அ.தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனை யடுத்து அண்ணாமலை மீது அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கடும் விமர்ச னங்களை முன் வைத்தனர். அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி கிடையாது என்றும், அது தேர்தலின் போதே முடிவு செய்யப்படும் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
அதன் பிறகும் அண்ணா மலை தான் தெரிவித்த கருத்து உண்மை என்றும் இதற்காக மன்னிப்பு கேட்க முடியாது என்றும் கூறி வந்தார். இதனால் அண்ணா மலையை மாநில தலைவர் பதவியில் இருந்து மாற்ற வலியுறுத்தி டெல்லிக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சென்றனர்.
ஆனால் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க முடியாத நிலையில் கட்சியின் தலைவர் நட்டாவை மட்டும் சந்தித்து திரும்பினர். இந்நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. நீடிப்பது குறித்து இன்று மாலை கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
அதன்படி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று மாலை மாவட்ட செயலா ளர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்துக்கு பிறகு அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என 2 கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் எதிர்பார்த்து வருகின்றனர்.
இதனிடையே தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பா.ஜ.க. சார்பில் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு ள்ளது. இதில் "கிளம்பு கிளம்பு அந்து போச்சு கிளம்பு கிளம்பு" "அலப்பற கிளப்புறோம் தலைவரு நிரந்தரம்" என்ற வாசகங்க ளுடன் பா.ஜ.க. தகவல் தொழில்நுட்ப மற்றும் சமூக ஊடகப்பிரிவு சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு ள்ளது. இது அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அண்ணாமலை பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவரது ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர் மேலும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.






