என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "self-driving government bus"

    • வழக்கமான இடத்தில் பஸ்சை நிறுத்தி விட்டு டீக்குடிப்பதற்காக டிரைவர் மற்றும் கண்டக்டர் கடைக்குச் சென்றனர்.
    • இந்த விபத்தில் 3 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பஸ்நிலையத்தில் இருந்து மாங்கரை வழியாக கன்னிவாடி, தெத்துப்பட்டிக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. நேற்று மாலை இந்த பஸ் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு சென்றது. பஸ்சை ராஜேந்திரன் என்பவர் ஓட்டிச் சென்றார். பாலமுருகன் கண்டக்டராக இருந்தார். தெத்துப்பட்டிக்கு சென்று விட்டு மீண்டும் திண்டுக்கல் நோக்கி பஸ் வந்து கொண்டு இருந்தது. கன்னிவாடி பேரூராட்சி அலுவலகம் அருகே வழக்கமான இடத்தில் பஸ்சை நிறுத்தி விட்டு டீக்குடிப்பதற்காக டிரைவர் மற்றும் கண்டக்டர் கடைக்குச் சென்றனர்.

    அப்போது பஸ் தானாக முன்னோக்கிச் சென்று சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது. எதேச்சையாக திரும்பிய டிரைவர் பஸ் கட்டுப்பாட்டை இழந்து செல்வதைப் பார்த்து உடனடியாக பஸ்சில் ஏறி அதனை நிறுத்தினார்.

    இந்த விபத்தில் 3 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×