என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • உழவன் செயலி மூலம் மரக்கன்றுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஏக்கருக்கு 200 மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது

    தருமபுரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் சுற்றுப்புறச் சூழலை பாதுகாத்திடவும், விவசாய நிலங்களில் நிரந்தர பசுமை சூழ்நிலையினை உருவாக்குவதற்கும் பசுமை தமிழ்நாடு இயக்கம் என்ற திட்டத்தின் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு வேளான்மைத்துறை மற்றும் வனத்துறை மூலமாக செயல்படுத்தப்பட உள்ளது.

    இந்த திட்டத்தின் மூலம் வருங்காலங்களில் விவசாயிகளுக்கு ஒரு நிரந்தர வைப்புத் தொகை கிடைப்பதுடன் விவசாய நிலங்களின் மண் வளம் பாதுகாக்கப்படுவதுடன் மாநிலத்தின் பசுமை பரப்பும் சுற்றுப்புறச் சூழலும் மேம்படுத்தும் இந்த திட்டத்தின் கீழ் தேக்கு,ஈட்டி,மகாகனி, மருது, வேம்பு, மலை வேம்பு, நாவல், பெருநல்லி, செம்மரம்,புங்கன், வேங்கை மற்றும் சந்தன உள்பட பல்வேறு தரமான மரகன்றுகள் தமிழ்நாடு அரசு நாற்றங்கால்களில் உற்பத்தி செய்யப்பட்டு விவசா யிகளுக்கு வழங்கு வதற்கு தயாராக உள்ளன.

    விவசா யிகள் மரக்கன்று களை பெறுவதற்கு உழவன் செயலியில் பதிவு செய்து வேளாண்மை துறையின் பரிந்துரையின்படி தேவையான மரக்கன்றுகளை அருகில் உள்ள தமிழ்நாடு வனத்து றையின் நாற்றங்காலில் இருந்து இலவ சமாக பெற்றுக்கொள்ளலாம்.

    மரக்கன்றுகள் விநியோ கம் வரப்பு நடவு முறை எனில் ஏக்கருக்கு 60 மரக்கன்றுகளும், விவசாய நிலங்களில் தனியாக நடவு செய்ய ஏக்கருக்கு 200 மரக்கன்று களும் வழங்கப்படும். இத்திட்டத்தில் விருப்ப முள்ள அனைத்து விவசாயிகளும் சேர்ந்து பயன்பெறலாம்.

    சிறுகுறு விவசாயிகள் பெண் விவசாயிகள் ஆதிதிர்விடர் மற்றும் பழங்குடி இன விவசாயி களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். உழவன் செயலி மூலமாக தேவையான மரக்கன்றுகளை விவசாயிகள் பதிவு செயிது பெற்று கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    இத்திட்டத்தில் விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டு உள்ள பயிர் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறன் பாதிப்படையாமல் கூடுதலாக ஊடு பயிராக மரங்களை வளர்த்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நல்லம்பள்ளி அருகே பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் கல்குவாரியால் விவசாய நிலங்கள் பாதிப்பு அடைவதாக புகார் எழுந்துள்ளது.
    • குவாரியில் வெடி வைப்பதால் குடியிருப்புகள் குலுங்கின்றன

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே, எர்ரபையனஅள்ளி ஊராட்சி சந்தாரப்பட்டி கிராமத்தில் தனியார் கல்குவாரி ஒன்று பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரியை சுற்றிலும் பல ஏக்கர் விவசாய விளைநிலங்கள் மற்றும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.

    கல்குவாரியில் அரசு அனுமதித்த அளவைவிட அதிகமாக, தரை மட்டத்தில் இருந்து, சுமார் பல நூறு அடி, கீழ் மட்டம் வரை கனிம வளங்கள் தொடர்ந்து, இரவு-பகலாக வெடி வைத்து வெட்டி எடுப்பதால், குவாரியை சுற்றிலும் உள்ள, விவசாய விளை நிலங்கள் முழுவதும் கற்கள் சிதறி விழுந்து நிலங்கள் சேதம் அடைகிறது. இதனால் விவசாய பணிகள் செய்ய முடியாமல், விவசாய தொழிலுக்கு செல்லும் பணியாளர்களின் கால்களில், கற்கள் குத்தி காயம் ஏற்படுகிறது.

    மேலும் கல்குவாரி நிர்வா கத்தினர் நீர்வழிப்பா தையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், மழை நீர் தனியார் குவாரிப் பகுதியில் நிரம்பு வதால், விவசாய கிணறுகளில் நீர்மட்டமும், நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து கொண்ட செல்வதால் விவசாய தொழில் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    கல்குவா ரியில் தொடர்ந்து வெடி வைப்பதால், குடியி ருப்பு வீடுகள் விரிசல் ஏற்படுவதால், எப்போது இடிந்து விழுமோ என்ற அச்ச நிலையில் கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    இது குறித்து சந்தாரப்பட்டியை சேர்ந்த விவசாயி நடேசன் கூறியதாவது;-

    கல்குவாரியில் அரசு நிர்ணயித்த அளவைவிட அதிக அளவில் பூமிக்கு அடியில், கற்களை வெடி வைத்து பல ஆண்டுகளாக எடுக்கின்றனர். இதனால் நிலத்தடி நீர்மட்டமானது அதள பாதளத்துக்கு சென்று விட்டது. இதனால் விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    அதுமட்டுமில்லாமல் கல்குவாரியில் வைக்கப்படும் வெடியால், அருகில் உள்ள குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களில் கற்கள் சிதறி விழுகின்றன. இதனால் ஆடு, மாடு போன்ற கால்நடைகளும் மனிதர்களுக்கும் உயிருக்கு ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். வெடி வைப்பதால் தொடர் அதிர்வினால் வீடுகளில், விரிசல்கள் ஏற்பட்டு, கற்கள் வீடுகள் மேல் விழுவதால் பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

    அதுமட்டுமல்லாமல் கல்குவாரி நிறுவனமானது இப்பகுதியில் உள்ள நீரோடைகளையும், ஆக்கிரமித்து கற்களை வெட்டி எடுத்து சாலைகள் அமைத்து போக்கு வரத்திற்காக அமைத்து ள்ளனர். இந்த ஆக்கிரமிப்பு குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை, சம்மந்த பட்ட கல்குவாரியால், விவசாய தொழில் செய்ய முடியாமலும், வீடுகளில் வசிக்க முடியாமல் மக்கள் கிராமத்தை விட்டு வெளியோறும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.   

    • தருமபுரியில் காப்பீட்டு ஒருங்கிணைப்பா ளர்களுக்கு மாவட்ட கலெக்டர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
    • 10 பயானளிகளுக்கு காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டன

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி, தலைமையில் நடைபெற்றது.

    இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு, மாவட்ட கலெக்டர் தெரி வித்ததாவது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்கள். அந்த வகையில் ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெறப்பட்டு, தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய தீர்வுகள் காணப்பட்டு வருகிறது.

    மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா வேண்டுதல், சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திற னாளிகளுக்கு உதவித்தொ கைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 549 மனுக்கள் வரப்பெற்றன.

    பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்தார்கள்.

    இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் 5-ஆம் ஆண்டு விழாவினை முன்னிட்டு, இக்காப்பீட்டு திட்டத்தின் கீழ், சிறப்பாக சிகிச்சையளித்த 2 அரசு மருத்துவமனைகள் மற்றும் 2 தனியார் மருத்துவ மனைகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் சிறந்த முறையில் பணி யாற்றிய காப்பீட்டு ஒருங்கி ணைப்பாளர்கள் மற்றும் வார்டு மேலாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் 10 பயனாளிகளுக்கு புதிய காப்பீட்டு அட்டைகளையும் மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கினார்.

    சிறப்பாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டமைக்காக அரசு தருமபுரி மருத்து வக்கல்லூரி மருத்து வமனைக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பாராட்டி, கேடயம் வழங்கியதை தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் சாந்தியை அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்து வமனை மருத்து வர்கள் குழு நேரில் சந்தித்து, வாழ்த்து பெற்றனர்.

    இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் சாந்தி, தனித்துணை கலெக்டர் நசீர் இக்பால், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் செல்வி. மரியம் ரெஜினா, பழங்குடியினர் நல அலுவலர் தி கண்ணன், உதவி திட்ட அலுவலர் தமிழரசன் உட்பட தொடர்பு டைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • அதியமான் கோட்டையில் தூய்மையே சேவை திட்ட பணியை எம். ஏல்.ஏ துவக்கி வைத்தார்.
    • மரக்கன்றுகள் நடவு செய்யும் முறை பற்றி விளக்கப்பட்டது

    தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டையில் வள்ளல் அதியமான் கோட்டம் அமைந்துள்ளது. இங்கு நேரு யுகேந்திரா சார்பில் தூய்மையே சேவை திட்ட பணி முகாம் இன்று தொடங்கியது.இதில் சிறப்பு விருந்தினராக தருமபுரி எம்.எல்.ஏ எஸ்.பி.வெங்கடேஷ்வரன் கலந்து கொண்டார்.

    இதில் அவர் இந்த திட்டத்தின் நோக்கம் குறித்தும், நம்முடைய பகுதிகளை தூய்மையாக சுத்தமாக எவ்வாறு வைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும், மாணவ மாணவிகளிடையே உரையாற்றினர்.

    மேலும் மத்திய அரசின் என் மண் என் தேசம் என்ற தலைப்பில் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் மண் சேகரிக்கப்பட்டு வருகிறது. அந்த நிகழ்ச்சியின் தொடக்கமும் அதியமான் கோட்டை பகுதியில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இந்திய ஒருமைப்பா ட்டிற்காக பாடுபட்ட தீனதயாள் உபாத்தியாயா பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பின்னர் அதியமான் கோட்டம் வளாகத்தில் தூய்மை இந்தியா திட்டத்திற்க்காக தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர்.

    அப்போது தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஷ்வரன் மரக்கன்றுகளை நட்டு எவ்வாறு பராமரிப்பது என அறிவுரை வழங்கியதோடு நிறுத்தாமல் மண் வெட்டி யுடன் களத்தில் இறங்கி மாணவ,மாணவிகளுக்கு செய்து காட்டினார். இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஊரக வளர்ச்சி உதவி திட்ட அலுவலர் அதியமான் கோட்டை கிராம வளர்ச்சி குழு உறுப்பினர் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • தருமபுரியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 60 அடி உயர கொடி கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.
    • உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கிருஷ்ணகிரியில் இருந்து நேற்று இரவு தருமபுரி மாவட்டத்துக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்த போது ஆயிரக்கணக்கான மக்கள் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

    முன்னதாக அவர் கலைஞரின் நூற்றாண்டையொட்டி தருமபுரி மேற்கு மாவட்டக் கழகம் சார்பில் காரிமங்கலத்தில் கழகத்தின் இருவண்ணக் கொடியினை ஏற்றிவைத்து, திரளாக கூடியிருந்த கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார்.

    மேலும் காரிமங்கலம் பகுதியில் எழுச்சியோடு வரவேற்ற கழகத்தினர் - இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு எனது அன்பும், நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன் என அவர் நெகிழ்ச்சியுடன் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் .ஆர்.கே.பன்னீர்செல்வம், தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி உள்ளிட்ட மாவட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    இந்நிகழ்ச்சியில் ஏராளமான தி.மு.க தொண்டர்களும், பொது மக்களும் கலந்து கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 4 முன்னாள் அமைச்சர்கள் திருட்டுத்தனமாக டெல்லி சென்றுள்ளார்கள்.
    • வருகிற தேர்தலில் அடிமைகளையும், அதன் எஜமானர்களையும் விரட்டி அடிக்க வேண்டும்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கெரகோடஹள்ளியில் தி.மு.க. ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    இன்று புதுப்பிரச்சினை காலையில் ஒருவர் கூட்டணி இல்லை என்கிறார். மாலையில் கூட்டணி என்கிறார். 4 முன்னாள் அமைச்சர்கள் திருட்டுத்தனமாக டெல்லி சென்றுள்ளார்கள்.

    அ.தி.மு.க. என்றால் அது அமித்ஷா.தி.மு.க. தான். இவர்கள் இருவரும் நாடகம் ஆடுகிறார்கள். தேர்தலின்போது இணைந்து வருவார்கள். ஒருவர் திருடர் மற்றொருவர் கொள்ளைக்காரர். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், கலைஞர் குடும்பம் தான் வாழ்கிறது என்று மோடி பேசுகிறார். ஆமா கலைஞரின் குடும்பம் தான், தி.மு.க. என்கிற குடும்பம் தான் பிழைக்கிறது. ஆனால் உங்களால் அதானி குடும்பம் தான் பிழைத்து வருகிறது. அதானியும், மோடியும் ஒன்றாக விமானத்தில் சென்றனர். இதுகுறித்து புகைப்படத்துடன் ராகுல் காந்தி விளக்க வேண்டும் என கேட்டார். ஆனால் ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு சென்று வெற்றி பெற்றார். இதுதான் இந்தியா கூட்டணிக்கான வெற்றி.

    வருகிற தேர்தலில் அடிமைகளையும், அதன் எஜமானர்களையும் விரட்டி அடிக்க வேண்டும். நம்முடைய கூட்டம் கொள்கை கூட்டம் என்பதை நிரூபிக்க வேண்டும். நமது முதலமைச்சர் செயல்படுத்திய திட்டங்களை வீடு வீடாக கொண்டு சேர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தருமபுரி ராகவேந்திர கோவிலில் சீதா திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
    • பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    தருமபுரி நகரில் விருபாட்சிபுரத்தில் உள்ள ஸ்ரீ ராகவேந்திர சாமி பிருந்தாவனத்தில் 23- வது ஆண்டு நாம சங்கீர்த்தன மேளா நடைபெற்றது.இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் முதலா வதாக சனிக்கிழமை அன்று காலை ஸ்ரீ விக்னேஸ்வர பூஜையுடன் வைபவம் தொடங்கியது.

    அதைத் தொடர்ந்து ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாம நாராயணமும், திருச்சி மணிகண்டேஸ்வரா பாகவதரின் விட்டல் நாம பிரச்சார பஜனையும் நடைபெற்றது. சனிக்கிழமை அன்று மாலை திருச்சி வெங்கட்ராம பாகவதர் தஞ்சாவூர் அள்ளூர் ராமன் பாகவதரின் பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது.

    நி கழ்ச்சியின் இரண்டாம் நாளான நேற்று காலை நடைபெற்ற ஸ்ரீராதா, ஸ்ரீருக்மணி, ஸ்ரீ சீதா திருக்கல்யாண வைபவத்தை ஸ்ரீ மணிகண்டேஸ்வர பாகவதர் குழுவினர் நடத்தி வைத்தனர். இதைத் தொடர்ந்து மாலையில் வசந்த கேளிக்கை ஆஞ்சநேயர் உற்சவம் ஸ்ரீராம் பாகவதர் குழுவி னரால் நடத்த ப்பட்டது.

    இரண்டு நாட்கள் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தருமபுரியைச் சேர்ந்த ஏராளமான ஆன்மீக பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். அன்னதானமும் வழங்கப்பட்டது. வைபவத்திற்கான ஏற்பாடுகளை தருமபுரி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஸ்ரீனிவாசன் சிறப்பான முறையில் செய்திருந்தார்.

    • கிருஷ்ணகிரி மாவட்டத்–திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வருகை தந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
    • 500 பெண்களுக்கு ஏ.டி. எம் கார்டுகளை வழங்கினார்.

    தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்–துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று (திங்கட்கிழமை) கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகிறார்.

    இன்று காலை 8.30 மணிக்கு கிருஷ்ணகிரியில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில்இருந்து புறப்படுகிறார். காலை 8.50 மணிக்கு சென்னப்பள்ளி–யில் உள்ள அக்ரோ புராசிங் சென்டரில் ரூ.26 கோடியே 81 லட்சம் மதிப்பில் நடைபெறும் காய்கறி முதன்மை பதப்படுத்தும் குளிர்பதன கிடங்கின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்கிறார்.

     காலை 9.20 மணிக்கு சூளகிரி அருகே மருதாண்டப்பள்ளியில் சிப்காட்மொபிலிட்டி பார்க் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்கிறார். காலை 10 மணிக்கு குந்தாரப் பள்ளியில் கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள குமரன் திருமண மண்டபத்தில் 500 பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ்ஏ.டி.எம். கார்டுகள் மற்றும் கையேடுகளை வழங்குகிறார்.தொடர்ந்து காலை 11 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வருகிறார். அங்கு காவலர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். அங்கு தரை தளத்தில் வேளாண்மைத்–துறை சார்பில் நலத்திட்ட உதவிகளை மாற்று திறனாளிகளுக்கு வழங்குகிறார்.

     காலை 11.15 மணிக்கு முதல் தளத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினருடன்கலந்துரையாடுகிறார். காலை 11.30 மணிக்கு 2-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். தொடர்ந்து அனைத்து துறைகள் சார்பில் நடை பெறும் வளர்ச்சி திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார். மாலை 3.45 மணிக்கு கிருஷ்ணகிரி நகரில் பெங்களூரு சாலையில் கிழக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகம் அருகில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூலகத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

     அதைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு கிருஷ்ணகிரியில் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீ தேவராஜ் மஹாலில் நடைபெறும் மூத்த முன்னோடி நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். தொடர்ந்து தேவராஜ் மஹால் வளாகத்தில் நடைபெறும் மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அதே போல அமைச்சர்உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தி.மு.க. நிர்வாகிகள் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

    • தரும்புரியில் சாலைப்பணியாளர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
    • 41 மாத பணி நீக்க காலத்தை ரத்து செய்ய வேண்டும்.

    தமிழ்நாடு சாலைப்பணியாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் தருமபுரியில் நடைபெற்றது. பொதுக்குழு கூட்டத்திற்கு தருமபுரி வட்டத் தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் நாராயணன் வரவேற்றார். நிர்வாகிகள் முருகன், ஜெகதீசன், பெரியசாமி, அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு சாலைப்ப ணியாளர் சங்கத்தின் மாநில பொது செயலாளர் பாஸ்கரன், மாநில தலைவர் அர்ச்சுனன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். அரசு பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் நிர்மல், இணைச் செயலாளர் கிருஷ்ணன், சாலைப் பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் பழனி, மாவட்ட செயலாளர் சசிக்குமார், மாவட்ட பொருளாளர் நரசிம்மன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    கூட்டத்தில் தேர்தல் வாக்கு றுதியில் தெரிவித்துள்ள சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக கருதி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் பணிபுரியும் சாலைப் பணியாளர் களுக்கு தளவாட கருவிகள்,காலணிகள் வழங்க வேண்டும். பராமரிப்பு ஒப்பந்த சாலைகளில் நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்களை பணி செய்ய அனுமதிப்பதை நிர்வாகம் கைவிட வேண்டும்.

    மேலும் நிலுவையில் உள்ள பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் அக்டோபர் மாதம் இறுதியில் மாநாடு நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்ற ப்பட்டன. மேலும் இக் கூட்டத்தில் வேல், கந்தசாமி, ஜனார்தனன், நாகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

    • தருமபுரி மாவட்டத்தில் சிறு, குறு தொழிற்சாலைகள் இன்று அடைக்கப்பட்டன.
    • முதல் அமைச்சர் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடந்தது

    தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தி சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கத்தின் சார்பில் முதல்-அமைச்சர் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று (திங்கட்கிழமை) ஒரு நாள் அடையாள உற்பத்தி நிறுத்த போராட்டத்திற்கு அ ழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி தருமபுரி மாவட்ட சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கம் சார்பில் இன்று தொழிற் சாலைகள் அடைக்கப்பட்டு உற்பத்தி நிறுத்த போராட்டம் நடை பெற உள்ளது.

    காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த போராட் டத்தில் மாவட்டத்தில் உள்ள சுமார் 1000-க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற் சாலைகள் மூடப்பட்டிருக்கும். இதன் மூலம் சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் சூழ்நிலை உருவாகி யுள்ளது.

    • தரும்புரி கடை வீதியில் பூஜைப்பொருட்கள் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.7 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம் ஆனாது.
    • இரவு நேரம் என்பதால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.

    தருமபுரி நகர் தேர்முட்டி என்ற பகுதியில் உள்ள கடைவீதியில்நகைக் கடைகள் காய்கறி கடைகள் பழக்கடைகள் மற்றும் பூஜை சாமான்கள் விற்கக்கூடிய கடைகள் அதிகளவில் உள்ளன. இங்குள்ள தனியார் பில்டிங்கில் சக்திவேல் மகன் பார்த்திபன் என்பவருக்கு சொந்தமான பூஜை சாமான்கள் விற்பனை கடை உள்ளது.

    இந்த கடையின் மேல் பகுதியில் அவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இரவு அவர் கடையை பூட்டிவிட்டு மேலுள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் இரவு சுமார் 10 மணி அளவில் திடீரென கடையின் விளம்பர பலகை பகுதியில் இருந்து புகை வந்ததை கண்டு அந்த வழியாக சென்ற பொதுமக்கள் தெரி வித்தனர்.

    வந்து பார்த்தபோது கடையில் உள்ளே பூஜை பொருட்களான பாக்கு தட்டு, பூஜைக்கு பயன்படுத்தும் விளக்கு எண்ணெய், கர்பூரம், யாக பூஜைகளுக்கு பயன்படுத்தும் அனைத்து வகை பூஜை சாமான்கள் உள்ளிட்ட பொருட்கள் தீப்பிடித்து மளமள என்று எரிய தொடங்கியது.

    இது குறித்து தகவல் அறிந்து வந்த தருமபுரி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் வெங்கடேஷ் தலைமையிலான தீயணைப்புத்துறைநினர் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து அக்கம்பக்கத்தில் மேலும் பரவாமல் தடுத்தனர். இந்த தீ விபத்தில் கடையில் உள்ளே இருந்த சுமார் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள பூஜை பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக கூறப்ப டுகிறது.

    முதற்கட்ட விசா ரணையில், கடையில் ஏற்பட்ட மின் கசிவே தீ விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மின்சாரத் துறை ஊழியர்கள் கடைவீதி பகுதியில் உடனடியாக மின் இணைப்பை துண்டித்து, தீயை அணைத்த பிறகு மீண்டும் மின் இணைப்பை வழங்கினார்கள். இது குறித்து தருமபுரி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தருமபுரியில் ஓடும் பஸ்சில் இரண்டு பெண்களிடம் 7 பவுன் செயின் பறித்த மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
    • ஒரே நாளில் அடுத்தடுத்து சம்பவம்

    தருமபுரி அருகேயுள்ள சோகத்தூர் பகுதியை சேர்ந்தவர் பரிமளா (வயது 50). இவர் அரசுப்பள்ளியில் சத்துணவு அமைப்பளாராக பணியாற்றி வருகிறார். நேற்று சோகத்தூரில் இருந்து அரசு மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வரும் உறவினர் ஒருவரை காண தருமபுரி டவுன் பஸ் நிலையம் வந்துள்ளார்.

    அப்போது டவுன் பஸ்நிலையத்தில் இருந்து அரசு பஸ்சில் ஏறி அரசு மருத்துவமனைக்கு சென்று உள்ளார். மருத்துவனை வாசலில் இறங்கி கழுத்தில் அணிந்திருந்த இருந்த 3 பவுன் செயினை பார்த்தபோது காணவில்லை. இதில் அதிர்ச்சி அடைந்த பரிமளா இது குறித்து தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

     இதே போன்று பாப்பரபட்டி பகுதியை சேர்ந்தவர் காளியம்மள் (வயது 50). இவர் நேற்று சொந்த வேலையாக தருமபுரிக்கு வந்துள்ளார். வேலை முடிந்த பிறகு மாலை தருமபுரி பஸ் நிலையத்தில் இருந்து பஸ்சில் சொந்த ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது சவளூர் என்ற இடத்திற்கு பஸ் வந்தபோது கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் செயின் காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் .

    இது குறித்து பாப்பரப்பட்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நாளில் இரண்டு பெண்களிடம் 7 பவுன் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நேற்று முன் தினம் காரிமங்கலம் பகுதியில் உள்ள 2 கோவில்களில் 7 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 4 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற நிலையில் இந்த செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது. தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.  

    ×